தன்மானத்தை விட தற் பாதுகாப்பே முக்கியம்?

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரின் தெளிவற்ற நிலைப்பாடு மற்றும் நம்ப வைத்து கழுத்தறுத்த மத்திய அரசின் கடைசி நேர கைவிரிப்பு ஆகியவற்றின் காரணமாக, 'நீட்' விவகாரத்தில், தமிழக அரசு படுதோல்வியை சந்தித்துள்ளது.
 நீட் தேர்வு பிரச்னையில்  தோல்விக்கு காரணம் என்ன?

மருத்துவ கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, மாற்ற எல்லா மாநிலங்களும் ஏற்ற நிலையில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு பெறுவது சாதாரண விஷயமல்ல. 

தேசிய மற்றும் மாநில அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் வைத்து, அதற்கேற்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

பார்லிமென்ட்டில், அ.தி.மு.க.,வுக்கு, 50 எம்.பி.,க்கள் இருந்தும், இந்த பிரச்னை குறித்து, அவர்கள் அவ்வப்போது குரல் கொடுத்ததோடு சரி; மற்றபடி, மத்திய அரசிடம் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு, எம்.பி.,க்களின் செயல்பாடுகள் இருக்கவில்லை.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கரின் பயணங்கள், டில்லியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.

 மிக முக்கியமான, நீட் பிரச்னையில், இவர், தனி ஆளாக, டில்லிக்கு வருவதும், போவதுமாக இருந்தார். தங்கள் கட்சிக்குள்ள எம்.பி.,க்களின் பலத்தை, இவர் பயன்படுத்தவே இல்லை.எம்பிகளும் யாரை அணியில் சேர்ந்தால் லாபம் என்ற கணக்கில் இருந்ததால் தமிழக நலன்களை பற்றி அவர்களுக்கு பொறுப்பே இல்லை.சிந்தனையில் மக்கள் சேவையும் இல்லை.
அ.தி.மு.க., பார்லிமென்ட் தலைவர் வேணுகோபாலை கூட புறக்கணித்து விட்டு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையை மட்டுமே நம்பி இருந்தார். 
இருவரும், தினமும், சில மத்திய அமைச்சர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்து, அவற்றை செய்தியாக்குவதில் மட்டுமே குறியாக இருந்தனர்.

மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பின்போது, என்னநடந்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல், வெறும் பேட்டி மட்டுமே கொடுத்தனர். விஜயபாஸ்கர் வைத்துவிட்டுப்போகும் நீட் கோரிக்கையை விட, இவர் மீதான வழக்குககள் சர்ச்சைககள் குறித்துதான், மத்திய அமைச்சர்களின் வட்டாரங்கள் அதிகமாக கிசு கிசுத்தன. 
இதுவும், நீட் தேர்வில் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்பட காரணமாக இருந்தது.

ஊடகங்கள் வாயிலாக தரப்பட்ட தகவலை வைத்து, கடைசிநேரத்தில் டில்லி வந்து, உள்துறை அமைச்சக அதிகாரிகள் கேட்கும் ஆவணங்கள் ஒவ்வொன்றையும், ஓடியும், தேடியும் எடுத்து வந்த தமிழக அதிகாரிகளை பார்த்தபோது, பரிதாபமாகவே இருந்தது.

விஜயபாஸ்கரும், தம்பிதுரையும் ஊடகங்களில் அளிக்கும் பேட்டியில் உள்ள விஷயங்களுக்கும், டில்லி அரசியல் மற்றும் அதிகார மட்டங்களில் நடக்கும் விஷயங்களுக்கும் பெரும் முரண்பாடு இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. 

உச்ச நீதிமன்ற  சமரச பார்முலா கேட்டதுமே, பிரச்னை சுமுகமாகமுடிந்ததுபோல விஜயபாஸ்கர்,முகமெல்லாம் உற்சாகத்துடன், பிரதமரில் துவங்கி, ஒவ்வொரு மத்திய அமைச்சர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியில் திளைத்தார்.காலத்தை வீணடித்து விட்டு, கடைசி நேரத்தில் டில்லிக்கு வந்துகடமைக்காக மனு கொடுத்து, அரசியல் ரீதியில், விளம்பரம் தேட ஆசைப்பட்டதே, இந்த தோல்விக்கு காரணமென தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இடையிடையே வந்த அமைசர்கள் ,முதல்வர்கள் நீட் தேர்வைப்பற்றி பேசியதை  விட தங்கள் மீதான ஊழல்,சொத்துக்குவிப்பு,வருமானவரி வழக்குகளில் இருந்து தங்களை பத்துப்பாக்க மட்டுமே பேசியதாகவே தெரிகிறது.

சேர்த்த ஆயிரக்கணக்கான கோடிகள்பாதுகாப்பு  முக்கியமா?
காசு பெறா தமிழக மக்கள்,மாணவர்கள்,விவசாயிகள் நலன் முக்கியமா?
அதிமுக தலைவர்களுக்கு இப்போது தன்மானத்தை விட  தற் பாதுகாப்பே முக்கியம்.
நீட் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த, ஆறு மாணவர்கள் தாக்கல் செய்த மனு விபரம்:'சமீபத்தில் நடந்த, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல்களில், மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பதற்கு பிரதிபலனாக, நீட் தேர்வில், தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசிடம், தமிழக அமைச்சர்கள் பேரம் பேசி வருகின்றனர். இதை அனுமதிக்கக் கூடாது; தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், நீட் தேர்வு தகுதிப் பட்டியல் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
பிரச்னை கோர்ட்டுக்கு வந்தபின் தான் மாறிவிட்டது. எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என பரிசீலீக்கப்படும். 

கடைசிநேரத்தில் நிலையை மாற்றியது குறித்து, மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.

ஒவ்வொருஆண்டும்  நீட்  தேர்வுக்கு விலக்கு கேட்பதும்,பெறுவதும் மாணவர்கள் நலனை கடுமையாக பாதிக்கும்.எதைப்படிக்க?இந்த ஆண்டு விலக்கு உண்டா என்ற குழப்பம் மாணவர் மனதில் இருந்தால் தேர்வுகளில் வெல்வதற்கு அதே தடையாகி விடும்.

 நீட் தேர்வை இந்தியா முழுக்க நடத்துவது உறுதியாகிவிட்ட நிலையில் ஒட்டு மொத்த மாணவர்களுக்கும் பொதுவாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் படி மட்டும் வினாத்தாள் தயாரிப்பது எப்படி சரியாகும்.?

இது மாநிலக்கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தெரிந்தே செய்கிற துரோகம் அல்லவா?


ஒட்டு மொத்த இந்தியா பாடத்திட்டங்கள் அடிப்படையில் ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் வினாத்தாள் தயாரித்து நீட் தேர்வை நடத்த வேண்டும்.

அல்லது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் படியும் ,அந்தந்த மாநில பாடத்திட்டப்படி வினாத்தாட்கள் தயாரிக்கப்பட்டு மத்திய அமைப்பு  மூலம் இறுதியாக்கப்பட்டு மாநிலவாரியாக தேர்வை நடத்தலாம்.மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும் ,சிபிஎஸ்சி மாணவர்களுக்கும்  இதனால் பாதிப்பு வராது.

அதை நோக்கி செல்வதுதான் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் தமிழக அரசு எடுக்கவேண்டிய கட்டாய நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் தமிழக மாணவர்களுக்கு தரப்படும் வினாத்தாள் எளிமையாகவும்,சிபிஎஸ்சி,குஜராத் மாணவர்கள் கேள்வித்தாள் எளிமையாகவும் அமைவதை தடுக்க முடியாது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேலூரை அடுத்த அபிதாஸ்ரீ என்பவர் தமிழக பாடதிட்டத்தின்கீழ் அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வும் எழுதியுள்ளார். 
ஆனால் மத்திய அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறுத்துவிட்டதால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது .
இதனால் ஆசிரியையான அபிதாஸ்ரீயின் தாய் நித்திய லட்சுமி மனமுடைந்த நிலையில் இருந்தார்.
இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.தற்கொலைக்கு காரணம் "நீட் "தேர்வில் தமிழக அமைசர்கள் ,மத்திய அரசு ஏமாற்றியதுதான் என்று தெரியவருகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"மானமுள்ள ஆயிரம் பேருடன் சண்டை போடலாம்.மானத்தைப்பற்றிய கவலைப்படாத ஒரே ஒருவனுடன் சண்டை போடமுடியாது"
- பெரியார்
                                                            =====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-24.

  • கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)

  • ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)

  • நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)

  • நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம்  இறந்த தினம்(1972)

  • உக்ரேன் விடுதலை தினம்(1991)
=====================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?