நரியின் நாட்டாண்மை..
ஒரு திராவிட கொள்கை கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சி பிளவை கோந்து போட்டு ஓட்டுவது அதற்கு நேர்மாறான கொள்கைகளைக்கொண்ட கட்சி தலைமை என்பது அரசியல் விசித்திரம்.ஆடுகளின் மோதலில் நரியின் நாட்டாண்மை கதை தெரியும்தானே.
அதிமுகவில் வேடிக்கை விநோதங்களுக்கு என்றுமே குறைவில்லை.அது அண்ணாயிசம் .
ஆனால் கட்சியை துவக்கிய போது எம்.ஜி.ஆர். கூறிய அண்ணாயிசம் எடப்பாட்டிக்கே தெரியமா என்பது கேள்விக்குரியது.
அப்படி கட்சி கொள்கையே தெரியாதவர்களுக்கு பெயரில் மட்டும் அண்ணா,திராவிடம் கொண்டவர்களுக்கு காவித்துவம் கட்டப்பஞ்சாயத்து ஒன்றும் பிரச்சனை இல்லைதான்.
இந்தியா முழுக்க உள்ள தேசிய,மாநிலக் கட்சிகளை கூறு போட்டு ஆட்சியை பிடிக்கும் பாஜக அதிமுக அணிகளை ஒன்றாக சேர்ப்பதில் ஏன் இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறது ?
காரணம் வெறும் தேர்தலும்,தேர்தல் ஆணையமும் ,இரட்டை இலையும்தான்.
இரட்டை இலை சின்னம்தான் ஜெயலலிதாவையே காப்பாற்றியது.ஆட்சியை அவர் வசம் தக்க வைத்தது.
இந்த உண்மை பாஜக உணர்ந்துள்ளது.
நடிகையாக மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கை வைத்திருந்த ஜெயலலிதாவையே காப்பாற்றி, வாக்குகளை ஈர்த்த இரட்டை இலை இல்லாவிட்டால் மக்கள் மத்தில் செல்வாக்கே இல்லா ஓ.பி.எஸ் சும்,இ.பி.எஸ் சும் பழைய 1000 தாள்கள் தான்.இதை இன்றைய பவர் இழந்த அதிமுக ஆட்சியின் யு.பி.எஸ் மோடி நன்றாகவே உணர்ந்துள்ளார்.
இணையா அணிகள் இருக்கும்வரை இரட்டை இலை சின்னம் இல்லை.
இணைந்தால் இரட்டை இலை அதிமுகவுக்குத்தான். இதில் சசிகலா,தினகரன் என்னதான் குட்டிக்காரன் போட்டாலும் ஒன்றும் நடக்காது.பாஜக நடக்க விடாது.
தேர்தல் ஆணையம் தினகரனுக்கும் அதிமுகவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாகவே கூறி விட்டது.
இணைந்த அணிகள் பொது,செயற்குழுக்களை கூட்டி சசிகலா பொதுசசெயலாளர் நியமனத்தை தள்ளுபடி செய்து புது பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும்.
எனவே அவர்கள் ஒரு பொருட்டல்ல.
வரவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் பழைய திமுக,இ.காங்கிரஸ் முறை யில் 111,111என்றும் மற்றவை பாமக,வாசன் மற்றும் சில்லறை கூட்டணி கட்சிகளுக்கு என்ற அளவில் தொகுதி பங்கிடு.ஆட்சியிலும் பாதி.இதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளுமா என்று சில தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் கேட்கலாம்.
அவர்களுக்கு இதுவரையிலான அதிமுகவினர் , அமைச்சர்கள் மீதான அமுலாக்கப் பிரிவு,வருமானவரித்துறை ஆய்வுகள் முடிவு மோடி ,அமித் ஷா கையில் என்பததுதான் பதிலாகும் .
இரட்டை இலை தயவில் மக்கள் வாக்குகளை வாரி வழங்காவிட்டாலும் வழமையான மோடி,அமித் ஷா,ஜெ பாணியில் காவல்துறை,அதிகாரிகள்,தேர்தல் ஆணையம் கூட்டணியால் வென்று தமிழகத்தில் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்வது என்பதுதான் அமித் ஷா அன் கோ திட்டம்.
காலை பதித்து விட்டால் திமுகவை ஜெ பாணியில் அடக்கி அமித் ஷா பாணியால் ஒதுக்கி விடலாம் என்பதும் அவர்களின் இன்பக்கனவின் பகுதி.
ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் சில தொகுதிகள் வெல்வதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் தனது கணக்கை "லாபம்" என்று சுழி போட்டு ஆரம்பிக்கலாம் என்பது உள் நோக்கம்.
ஆனால் பாஜக மதவாதம்,கொலை வெறி தமிழக மக்களுக்கு அத்துப்படி.
சில அப்பாவிகள் வாக்குகளில் பாஜக தொகுதிகளைப்பெற்றாலும் அது நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
சென்ற மக்கலவைத்தேர்தலில் முக்கிய எதிர் கட்சி திமுக ஒரு இடம் கூட வெல்லா நிலையில் குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வென்றார்.மத்திய அமைச்சருமானார் .
ஆனால் அடுத்த சட்டமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு மட்டுமல்ல,ஆளுங்கட்சியாக வந்த அதிமுகவுக்கு கூட குமரி மாவட்டத்தில் ஒரு இடம் கூட கிட்டவில்லை.
அமித் ஷா ,மோடி தலைமையிலான பாஜகவுக்கு இதன் மூலம் தெரியும் நீதி .
காலம்காலமாய் மக்களவைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்,சட்டமன்றத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழக மக்கள் தெளிவானவர்கள்.
சென்ற தேர்தலில் இருபது களில் மட்டுமே இடம் பெற்று எதிர் கட்சியாக கூட வரமுடியாமல் இருந்த திமுகதான் இத்தேர்தலில் ஜெயலலிதா,தேர்தல் ஆணையம்,காவல்துறை,பணபலம்,அதிகாரிகள் மேலாக பாஜக ஆதரவு ஆகியவை கூட்டணியை மீறி தொண்ணுறுகளில் சட்டமன்றத்தில் பலம் பொருந்தி நிற்கிறது.
சென்ற முறை எதிர் கட்சி தேமுதிக வுக்கு ஒரு இடம் கூட இல்லை.என்பதுடன் அனைத்து இடங்களிலும் காப்புத்தொகையை பாஜகவுடன் இணைந்து இழந்திருக்கிறது.இதில் வேடிக்கை ஆளும் அதிமுகவும் சில இடங்களில் காப்புத்தொகையை இழந்துள்ளது.
ஜெ,பாஜக,தேர்தல் ஆணையம் கூட்டணி சாதி இல்லாவிட்டால் இன்றை ஆட்சியாளர்கள் திமுக என்பதைத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தல் நிரூபித்துள்ளது.
ஆகஸ்ட்-20.
கொசு ஒழிப்பு தினம்
தொலை நோக்கு பார்வை வேண்டும்.
உத்திர பிரதேசத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் 63 குழந்தைகள் மரணம்.
தொடர்பான கருத்துப்படங்கள்.

அடிமை இந்தியா
1900 ஆண்டு வெள்ளையனை சுமக்கும் சிக்கிம் பெண்.
எட்டப்பாடியின் ஆட் சியில் " புதிய இந்தியா தமிழ் நாடு."
=======================================================================================
இன்று,
- உலக கொசு ஒழிப்பு தினம்
- ஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)
- இலங்கையில் ஒரு ரூபாய் தாள் புழக்கத்தில் விடப்பட்டது (1917)
- இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினம்(1944)
கொசு ஒழிப்பு தினம்
உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், அவை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் முதலிடத்தில் உள்ளன. மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு கொசுக்களே காரணம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 20ல், உலக கொசு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் தான் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார் டாக்டர் ரொனால்டு ரோஸ்.
இவரது இந்த அரிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக இத்தினமே, உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் 'அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும் 'ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் 'குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை. இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.
ரொனால்டு ரோஸ், 1857ல் உத்தரகண்டின் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லுரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 - 1899 வரை ஈடுபட்டார்.
1897ல் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரிட்டன் சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் இவரே.
'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது.
எப்படி தடுப்பதுபொதுவாக கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* டயர்கள், தகரங்கள், பலகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.* சீரான இடைவெளியில் தண்ணீர் சேர்த்து வைக்கும் பாத்திரங்களை சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காய வைக்க வேண்டும்.
* தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

உலகளவில் 2015 கணக்கின் படி, 21.2 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் 90 சதவீதம் ஆப்ரிக்க நாடுகளில் தான் ஏற்படுகிறது.
மலேரியாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையினால், 2010 லிருந்து 2015 வரை, உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 29% குறைக்கப்பட்டுள்ளது.