இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

இந்தியா 3.20 லட்சம் கோடிக்கு உயர்ந்தது!

இது முதலாளிகள் 20 பேரின் 
  7 மாதத்திற்கான கணக்குமட்டும் தான்
இந்தியா பொருளாதார வல்லரசாகி விட்டது என்றால் சிலர் நமபவே மாட்டேன் என்கிறார்கள்.

அவர்களுக்காக இந்த பட்டியல் .இது இம்மியளவுதான் அனைவரையும் வெளியிட பல பக்கங்கள் தேவை.
ஒரு பானை சோற்றுக்கு சில பருக்கைகளை பார்த்தால் பதம் தெரிந்துவிடாதா என்ன?

ஆனால் இந்த புதிய இந்தியாவுக்கு பிரதமர் மோடி என்ன பெயர் வைத்திருக்கிறார்,வைக்கப்போகிறார் என்றுதான் தெரியவில்லை.

நாம் புதிய இந்தியா  -9 என்று வரிசை அடிப்படையிலேயே கூறுவோம்.
இந்திய பெருமுதலாளிகள் 20 பேரின் சொத்து மதிப்பு, கடந்த 7 மாதங்களில் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது.

உலகப் பொருளாதார பத்திரிக்கையான “ப்ளூம் பெர்க்” பத்திரிகை இந்தியாவின் ‘டாப் 20’ பணக்காரர்கள் பட்டியலைவெளியிட்டு, அவர்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்தீய பணக்காரர்கள் சொத்து உயர்வு காட்டப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நவம்பர் மாதம் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து, கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்டி விட்டதாக அவர் முதுகை அவரே தட்டிக் கொண்ட 7 மாத காலத்தில் மட்டுமே இந்த அளவிற்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மொத்தமாக 20 பேரின் சொத்து மதிப்பு, 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என்றாலும், இதில் ‘ரிலையன்ஸ்’ முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் கடந்த 7 மாதங்களில் சுமார் 83 ஆயிரத்து 200 கோடி அதிகரித்துள்ளது. 


அம்பானிக்கு அடுத்தபடியாக மோடியின் நண்பரான அதானி, விப்ரோ நிறுவன அதிபர் அஸீம் ப்ரேம்ஜி, சூப்பர் மார்க்கெட் அதிபர் ஆர்.கே.தமனி ஆகியோரின் சொத்து சராசரியாக 18 ஆயிரம் கோடியிலிருந்து 24 ஆயிரம் கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் ‘சன் குழும’ அதிபர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு சுமார் 9 ஆயிரத்து 984 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்த மதிப்பீடு பங்குகள் விலையுயர்வை வைத்து கணக்கிடப்பட்டதாகும்.

அதன்படி இந்திய பெருமுதலாளிகளின் மொத்த சொத்து மதிப்பும், கடந்த 7 மாதத்தில் உயர்ந்த அவர்களது சொத்து மதிப்பு விவரமும் வருமாறு:
இந்தப் பட்டியல் வருமானவரித்துறை,மற்றும் பங்கு நிலவரம்  கணக்கில் இருந்துதான் எடுக்கப்பட்டது .கணக்கில் காட்டாதவர்களை இப்பட்டியல் கட்டுப்படுத்தாது.

மேலும் இதில் தாதாக்கள்,கல்லவியாபாரிகள்,அமித் ஷா,விஜயபாஸ்கர்  போன்ற அரசியல்வாதிகள் காட்டப்படவில்லை.

அவர்கள் தினசரிஏற்றம்  பட்டியலில் மட்டுமே இடம் பெறுவார்கள்.இது 7 மாதக்கணக்கு.இது பங்கு விலைக்கேற்ப ஏறும்,இறங்கும்.
கணக்கில் வராதவர்கள் பலர் இதைவிட அதிகம் குவித்து வைத்துள்ளனர்.அவர்களை கையில் வைத்து அரசியல் பொம்மலாட்டம் ஆட்டும் வேலையைத்தான் மத்திய பாஜக அரசு செய்கிறது.
எனவே இந்தியர்களின் உண்மையான சொத்து விபரம் தற்போது பாஜக தலைமையகத்தில் சிலர் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால் அவர்கள் அதை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது தேச விரோத செயல்.
=====================================================================================

ன்று,
ஆகஸ்ட்-07.


  • இந்திய கைத்தறி தினம்
  • அமெரிக்க ராணுவம்  உருவாக்கப்பட்டது(1789)
  • இலங்கையில்  வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)
  • அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)
  • வங்கக்  கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)
=========================================================================================
ஒரே கல்லில் மூன்று மாங்கா

விஜய் தொ.காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை  கமல்ஹாசன்  தொகுத்து வழங்கியபோது திடீரென பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். 
அப்போது அவர் சென்ற வாரம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போல பிக்பாஸ் போட்டியாளர்கள் நடித்ததை சுட்டிக்காட்டி டாஸ்க் கொடுத்ததை  கண்டித்த கமல், 
"டாஸ்க் நான் கொடுப்பதில்லை, மனநலம் குன்றியவர்கள் பற்றி கேலியாக நடித்து காட்டப்பட்டது ரசனைக்குரியதாக இல்லை, எனக்கு கோபமே இருக்கிறது. 

என் படங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவன் காமெடியனாக இருக்கமாட்டான், அவன் தான் கதாநாயகனாக இருப்பான். "எனக்கு சமூக அக்கறை உள்ளது, இதுபோல் இனி நடக்காமல் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், அப்படி நடந்தால் இந்த நிகழ்ச்சி எனக்குமுக்கியமில்லை (வெளியேறிவிடுவேன்)" 
அடுத்து "வட இந்தியாவில் எப்படியோ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்திருக்கலாம்.6,7நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிகிறது.ஆனால் இங்கு சூழல் வேறு.தமிழ்நாட்டில் பார்வையாளர்கள் முதல் அனைவருக்கும் சுயமரியாதை அதிகம்.அதற்கேற்ப இந்நிகழ்ச்சியை வடிவமைக்க வேண்டும்.டாஸ்க்கள் கொடுக்கப்பட்ட வேண்டும்.இதை நான் முதலிலேயே விஜய் தொலைக்காட்ச்சியினரிடம் கூறியுள்ளேன்,மீண்டும் நினைவிவுபடுத்துகிறேன்."என்று  நிகழ்ச்சி பற்றி வெளிப்படையாக கூறினார்.
அப்போது பார்வையாளர் பகுதியில் இருந்து கைத்தட்டல் அரங்கை அதிரவைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் சமூகத்தை சீரழிக்கிறார் என்று  கமல்ஹாசன் மீது சிலர் குற்றம் சாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கையில் கமல்ஹாசன்  நேர்மையான பேச்சு அனைவருக்கும் பதிலாக அமைந்துள்ளது.
விஜய் தொலைக்காட்ச்சியினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்தை தொடர்பு கொண்டுவருவதற்கு கமலின் இக்கருத்துக்கள்தான் காரணமாக இருக்குமோ?
உலகநாயகன் கமல்ஹாசன் கூறியது காயத்ரிக்கா,விஜய் தொ.காட்சிக்கா ,இல்லை ............(பாஜகவுக்கா )
 இதை கூறுகையில் கமல் முகபாவம் கொஞ்சம் கடுமையாக மாறியது.அதன் மூலம் நிச்சயம் காயத்ரி,விஜய்க்காக இராது.
எப்படியோ கமல்ஹாசன் இதன் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்கா அடித்திருக்கிறார்.
=======================================================================================
கேரளாவில், கண்ணூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டி ருக்கும் தன் கணவரைப் பார்க்க வர வேண்டும் என்று அவரது மனைவி மத்தியநிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

கேரளாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கேரளாவிற்கு வருகிறார்.

அவர் ஆர்எஸ்எஸ் குண்டர்களால்கொடூரமானமுறையில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தன் கணவரைப் பார்க்க வர வேண்டும் என்று அவரது மனைவி ரம்யா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். 
:“மாண்புமிகு நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அவர்களுக்கு, கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், இரய்ஹோலி கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் ரம்யா எழுதும் கடிதம்.தாங்கள் கேரள மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரளம் வர இருப்பதாக செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். நான்,கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ளஇரய்ஹோலி கிராம சபைத் தலைவராக இருக்கின்றேன். என் கணவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார்.


என் குடும்பத்தில் என்கணவர் உட்பட நான், என் 12 வயது மகன் மற்றும் என் கணவரது வயதான பெற்றோர் உள்ளனர். என் கணவரின் சம்பாத்தியத்தில் நாங்கள் எங்கள் வாழ்க்கையை சந்தோஷ மாகத்தான் கழித்து வந்தோம்.என் கணவர் தன்னுடைய ஆட்டோவை நாயனார் சாலை என்னுமிடத்திலிருந்துதான் இயக்கி வந்தார். அந்த இடம் எங்கள் இல்லத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்தான். அந்த இடத்திலிருந்து அவர் கடந்த 15 ஆண்டு காலமாக ஆட்டோ இயக்கி வருகிறார். அதனால்இப்பகுதி மக்கள் அனைவருக்கும் அவரை நன்குதெரியும். 
அவர்களுடன் அவர் மிகவும் நல்லுறவை பேணி வந்தார்.2017 ஜூலை 3 அன்று பிற்பகல் 2 மணியளவில்பயணிகளின் வருகைக்காக அவர் காத்துக் கொண்டிருந்த சமயத்தில், ஆர்எஸ்எஸ் குண்டர்கள் சிலர் அவரை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்துவந்து, அவர் எவ்விதத்திலும்தப்பிச்செல்ல முடியாதவாறு கத்திகளாலும், கோடாரிகளாலும் கொடூரமான ஆயுதங்களா லும் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கின்றனர்.

இவை அனைத்தும் பட்டப்பகலில் நடந்தி ருக்கிறது. அவர் இரத்தச் சகதியுடன் சேறுபடிந்திருந்த தரையில் சாய்ந்துவிட்டார். அந்த சமயத்தில் இக்கொடூர சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எவரொருவரும், தங்கள் உயிருக்குப் பயந்து, அவரைப் பாதுகாத்திட முன்வரவில்லை. 


அவர் இறந்துவிட்டார் என்று முடிவு செய்து ஆர்எஸ்எஸ் குண்டர்கள் சென்ற பின்னர், மக்கள் விரைந்தோடி வந்து, என் கணவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். 

பின்னர் அவர்களின் அறிவுரையின்படி கோழிக்கோட்டில் உள்ள பேபி நினைவு மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.பேபி நினைவு மருத்துவமனையில் என் கணவர் அனுமதிக்கப்பட்டபின்னர் அவர் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு இதுவரை ஏழு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன.


இன்னும் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இவ்வளவு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளசூழ்நிலையிலும் அவர் உயிர் பிழைப்பாரா என்பது குறித்து உறுதியான வார்த்தைகள் எதையும் மருத்துவர்கள் சொல்ல முன்வரவில்லை.தாங்கள் என் கணவரை வந்து சந்திக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இனியா வது, இதுபோன்ற கொலைபாதகங்களை ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர் செய்யக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.”இவ்வாறு ரம்யா, அருண்ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
========================================================================================