மூன்றாம்பிறை சீனுவும் டிஜிட்டல் இந்தியாவும்..

ஒவ்வொரு முறை மோடியின் பாஜக அரசு புதிய இந்தியாவை கட்டி முடிக்கும் போதும் அதை பற்றி குறை கூறி புலம்புபவர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

ஒவ்வொரு புதிய இந்தியாவை சமைக்கவும் மோடி படும் பாடும்,அதை மக்களை உணரவைக்க பாஜக தலைவர்கள் படும் படும் "மூன்றாம்பிறை சீனு விஜிக்கு தன்னை உணரவைக்க படும்  பாட்டிற்கு" கொஞ்சமும் குறைந்ததல்ல.

டிஜிட்டல் இந்தியா பற்றி சிலருக்கு இன்னமும் சில சந்தேகங்கள் உள்ளன.

அது இந்தியா டிஜிட்டல் இந்தியாவாகி விட்டதா இல்லையா?என்பதுதான்.

அதை தெளிவு செய்ய இந்த டிஜிட்டல் அலைபேசி செய்தியை பெருமையுடன் வழங்குகிறோம்.
இந்தியாவின்முதல்  பணக்காரரும், உலக பெரும் பணக்காரர்களில் ஆயிரத்தில் 7மான முகேஷ் அம்பானியின் மனைவியான நீட்டா அம்பானி பயன்படுத்தும்  அலைபேசி விலை பாமரர்களுக்கு மகிழ்சி  அளிப்பதாக உள்ளது.
ரூ 315 கோடி Falcon Supernova iPhone
6 Pink Diamond
 
அலைபேசியை
படத்தில் பார்த்தாவது மகிழுங்கள்.

 


இது தொடர்பாக, சிலதகவல்கள் வெளி வந்துள்ளன. நீட்டா அம்பானி பயன்படுத்தக் கூடிய  
  அலைபேசியில்  உள்ள பிரத்யேக விஷயங்களை மையப்படுத்தி இத்தகைய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இவைதான் இந்தியா டிஜிட்டல் இந்தியாவாகி எப்படி ஒளி வீசுகிறது என்பதை வெளிச்சம் போடுகிறது.

அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் விலை மதிப்பு மிக்க  Blackberry 
  அலைபேசி பயன்படுத்தி வரும் நிலையில், நீட்டா அம்பானி Falcon Supernova iPhone 6 Pink Diamond பயன்படுத்தி வருகிறார். 

இதன் மதிப்பு 48.5 மில்லியன் டாலர்கள். 
அதாவது ரூ.315 கோடி மட்டும் .

அம்பானி குடும்பத்தினர் மற்றவர்கள் பயன் படுத்தும் 
  அலைபேசிகள்  நீட்டா   அலைபேசி விலைக்கு சிறிதும் மட்டமானது இல்லை.

2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ,
  அலைபேசி   வாடிக்கையாளர்கள் கொடுக்கும் சிறப்பு கேட்பு  பேரில் இந்த  தயாரிக்கப்படு ம். 

   இந்த அலைபேசி விலை ஒன்றும் அவ்வளவு பெரிய தல்ல.இத்  தொகையில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட  ஜெட் விமானம் ஒன்றை மட்டுமே வாங்க முடியுமாம்.


ரூ 315 கோடி Falcon Supernova iPhone 6 Pink Diamond அலைபேசியில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்வோம். 

➤ இந்த போனின் வெளிப்புறம் 24 கேரட் தங்கம் மற்றும் Pink Gold கொண்டு செய்யப்பட்டுள்ளது.

➤ உடைக்க முடியாத வகையில் பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

➤ ஒரு பெரிய Pink Diamond இந்த போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

➤ இந்த 
 அலைபேசியை எளிதில்  முடக்கம் (Hack) செய்ய முடியாதபடி முழுமையாக பாதுகாக்கப்பட்ட அமைப்பைக் கொண்டது. 
(யாரேனும் Hack செய்ய முயன்றால் உடனடியாக செல்போனின் உரிமையாளருக்கு தகவல் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.)


மோடி அரசின் நலிவுற்றோர் பட்டியலில் உள்ள தொழிலதிபர்  முகேஷ் அம்பானி வசித்து வரும் வீடான ‘அண்டிலா’ உலகின் அதிக மதிப்புக் கொண்ட 10 வீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மதிப்பு 3500 கோடிகள் மட்டும்.


இத்துடன், நீட்டா அம்பானி பயன்படுத்தும் கைப்பை (Hand Bag)-இன் விலையும் கொள்ளை மலிவு .

நீட்டா அம்பானி பயன்படுத்தும் கைப்பை தயாரிப்புகளான   Snel, Goyard மற்றும் Jimmy Choo ஆகியவற்றின் ஆரம்ப விலை 3 முதல் 4 மில்லியன் டாலர்கள்.அதாவது ரூ 19.5 கோடிகள் முதல் 26 கோடிகள் வரை மட்டுமே.

இவை எல்லாம் மோடி அம்பானி ,அதானி தொழிலுக்கு ஆதரவாக வங்கிக் கடன் தள்ளுபடி, வரி தள்ளுபடி எதற்காக கொடுக்கிறார் என்று விதண்டாவாதமாக கேட்கும் தேசத்துரோகிகள் கவனத்துக்காகத்தான் கொடுக்கப்படுகிறது.
மூன்றாம்பிறை சீனு


இது போன்ற அடிப்படை பொருட்களை சில மில்லியன் டாலர்களை வாங்கி தவ வாழ்க்கை வாழ்வோருக்கு உதவ வேண்டியது ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் அரசுக்கும் முக்கிய கடமை அல்லவா?

பின் எப்படி இந்தியாவை பணக்கார நாடாக மாற்றுவது.?

இதை புரிய முடியாத அல்லது புரிய மறுக்கிறவர்களுக்கு எப்படி புதிய டிஜிட்டல் இந்தியாவில் இடம் இருக்கும்? 


=======================================================================================
ன்று,
ஆகஸ்ட்-03.
  • வெனிசுலா கொடி நாள்
  • அமெரிக்க முதல் கப்பலான லெ கிரிஃபோன் தயாரானது.(1678)
  • உலக  கூடைப்பந்து சங்கம்  அமைக்கப்பட்டது(1949)
  • காந்தி கிராமம்" கிராமியப் பல்கலைக்கழகம்" அமைக்கப்பட்டது(1976)
========================================================================================
முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்  நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல மில்லியன் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் வழியாக  இதுவரை சில வகையான கோப்புக்களை (வீடியோ, படங்கள், PDF, SpreadSheet, Word Document) மட்டுமே பகிரக்கூடியதாக இருந்தது.
 இந்த வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் வாட்ஸ் அப்பின் மூலம் எந்தவொரு கோப்பு வகையினையும் பகிர்ந்துகொள்ள முடியும்.
இதற்கு  iOS சாதனங்களில் 128 MB ஆகவும், Android சாதனங்களில் 100 MB கோப்பின் கொள்ளளவு வரையறுக்கப்பட்டுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?