இணைப்பு -அதிர்ச்சி - வேடிக்கை

அ.தி.மு.க.,வின் பழனிசாமி அணியும் பன்னீர் அணியும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில்   இணையவுள்ளன. 

அப்போது இனி ஒற்று மையாக இருப்பதாக  உறுதிமொழியும் எடுக்கப்படுகிறது. 

அதிமுக கட்சியை இனி  வழிநடத்த மோடி கூறியபடி நியமிக்கப்பட உள்ள, வழி காட்டும் குழுவில், முதல்வர் பழனிசாமி அணி தரப் பில், அவரும், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோரும் பன்னீர்அணியில்  அவரும், முன்னாள் அமைச்சர்கள், முனுசாமியும், சண்முகநாதனும் இடம்பெறுகின்ற னர்.

முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர உள்ள தால், பன்னீர் செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியுடன் நிதி, பொதுப்பணித்துறை இலாகாக்கள் வழங்கப்பட உள்ளன. 
அவரது அணியை சேர்ந்த செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு, முக்கிய இலாகாக்களுடன் கூடிய, அமைச்சர் பதவி தரப்படுகிறது. 

பன்னீர் அணியினருக்கு, முக்கிய இலாக்காக்கள் தர வேண்டியுள்ளதால், தினகரன் ஆதரவு அமைச்சர்களின் இலாக்காக் களை பறிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். 

முதலில் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவிஜயபாஸ்கர், சரோஜா,  ராதாகிருஷ்ணன், வளர்மதி ஆகியோர் இலாகாக் களை பிடுங்க  முடிவாகி உள்ளது.

இரு அணிகளிலும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் ,அதிருப்தி அடையும், எம்.எல்.ஏ.,க் களை சமாளிக்க அணிக்கு  10 பேருக்கு, வாரிய தலைவர் பதவிகள்  வழங்கப்டும் . 

இரு அணிகளும் இணையாவிட்டால் ஆட்சி கலைக்கப்படும்,இரட்டை இலை சின்னமும் பறி போகும் ,மீண்டும் தேர்தல் நடந்தால்  அதிமுக கதி அதோகதிதான்.மக்களிடம் இருக்கும் கோபத்தில் இரட்டை இலை இருந்தால் கூட அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியாது.

இருக்கும் வரை ஆட்சி,அதிகாரத்தை அனுபவித்து நாலு காசு அனைவரும் பார்க்கலாம்.மோடி அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறது  வேறு வழி கிடையாது என்று கூறியே அனைவரும் ஒத்துக்கொள்ளவைக்கப்பட்டுள்ளனர்.

 நீண்ட இழு பறிக்குப்பின் தனது குழப்படிகளுக்குமிடையே இரு அணிகளின்   இணைப்பு உறுதியாகி விட்டதால், தினகரன்,சசிகலா மற்றும் அவர்கள்  ஆதரவாளர் கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரு அணிகள் இணைப்பு பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதால், தினகரன் அணியிலிருந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள்  பழனிசாமி அணிக்கு தாவி விட்டனர்.

இதனால்  தினகரன் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.
சமீபத்தில், மதுரை மேலுாரில், தினகரன் அணி நடத்திய, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 20 எம்.எல்.ஏ.,க்கள், ஆறு எம்.பி.,க்கள் பங்கேற் றனர். 

இதனால் புளகாங்கிதமடைந்தார் தினகரன்.
"தன்னிடம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களின் மூலம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு, நெருக்கடி தரலாம்" என, தினகரன் திட்டமிட்டு ஆட்சியை கலைக்கவும் தயார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேரமும் பேசினார்.

ஆனால் அதன்பின் நேற்று முன்தினம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், அவரது அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. 


அதில், 12 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.அதில் கொஞ்சம் அதிர்ச்சி.

ஆனால் அடுத்த நாள்  நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,எம்.எல்.ஏ.,க் களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது . 

வேலுாரில், அரசுநடத்தும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, நேற்று நடந் தது. 

இதில், தினகரன் அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க் கள் ஆம்பூர் பாலசுப்பிரமணி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகிய இருவர்  மட்டுமே பங்கேற்றனர். 

இதனால், தினகரன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார் தினகரன்.
 ஸ்டாலினிடம்  தினகரன் ஆட்சி கவிழ்ப்பு பேரம் பேசுகையில் டெல்லியே இணைப்பில் ஆர்வம் காட்டுவதை அறிந்ததால் ஸ்டாலின் தினகரனின் பேச்சை அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசவில்லை.

அமித் ஷா தலையிட்டால் அனைத்து வழி முறைகளையும் உபயோகித்து இணைத்து விடுவார் என்பதையும் பல வழக்குகளை தன்  மீது வைத்திருக்கும் தினகரனால் ஓரளவுக்கு மேல் செயல்பட முடியாது.
டெல்லி அவரை அமுக்கி விடும் என்பதையும்  திமுக தலைமை நன்கு உணர்ந்துள்ளது.

ஆட்சி கவிழ்ப்பு என்று தினகரனை நம்பி இறங்க கூடாது என்பதில் திமுக தெளிவாக இருக்கிறது.
ஆளுநர்,பிரதமர்,குடியரசுத்தலைவர் என அனைவரும் அதிமுக காப்பாற்றும் அணியில் இருப்பதால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்யவும் இயலாத நிலைதான் திமுகவுக்கு.
======================================================================================

ன்று,
ஆகஸ்ட்-21.

  • ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை பழங்குடியினரிடமிருந்து கைப்பற்றி, 
  •                                      அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்(1770)
  • ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)
  • ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)
======================================================================================



அம்மாதான் ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கினார்கள் - வெற்றிவேல் அப்ப எம்ஜிஆர் எவனயும் அதிமுகவுல சேத்தவே இல்லையா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?