"பிக்பாஸ்" ஒரு பிக் பிஸ்னஸ்!

எடப்பாடி -தினகரன் கொள்கை மோதலுக்குப் பின் தமிழக ஊடகங்களில் விவாதிக்கட்டும்" பிரேக்கிங் நியூஸ் "பிக் பாஸ் ".

 ஓவியா  எதிர் காயு,சக்தி கூட்டணி மோதல்,ஆராவுடனான காதல் போன்றவை இறப்புக்கு ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை மக்கள் மத்தியில் பரவவிடாமல் னைத்துப் போக வைத்து விட்டது.

ரேஷன் கடைகள் காணாமல் போவதை பற்றி கூட கவலைப்படாத சமூக ஆர்வலர்கள்,மக்கள்   ஓவியா காதல் தோல்விக்காக மனதுருகி அழுதது மனதை பிசைந்தது.
100 நாள் வீட்டில் நடந்தவை ஒவ்வொரு அங்குலமும் தெரிந்தவர்களுக்கு விஜய் டிவி யில், ‘பிக்பாஸ்’ அரங்குக்கு வெளியே நடப்பவை தெரியாது.

அதை பற்றி ஒரு கழுகுஅல்லது பருந்து பார்வை.:

 .  பிக் பாஸ் நிகழ்சியில் இடம் பெற்று நடிகர்கள், நடிகைகள் ஆரம்பத்தில் இதற்காக அவர்கள் செய்யப் போகும் ‘தியாகம்’ அது குறித்த ‘பேட்டி’ எல்லாம் துவக்கத்தில் சுமாராக பார்க்க நேர்ந்தது! 
நிகழ்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும்.அதன் வரவு - செலவு தலையைச் சுற்றுகிறதுஸ்டுடியோ செட்டிங் செலவு ரூ.20 கோடி;

நிகழ்ச்சியை சனி,ஞாயிறுகளில் தொகுத்து வழங்கும் உலகநாயகன்  கமலுக்கு ரூ.20 கோடி;
மற்ற 14 பேருக்கு100 நாட்களுக்கு  ரூ. 42 கோடி;இது அவர்களின் பிரபலத்துக்கேற்ப வழங்கப்படும்.
 100 நாள் படப்பிடிப்பு செலவு ரூ.25 கோடி;.

முதல் நாள் மற்றும் .சனி,ஞாயிறுகள் மற்றும்  கடைசி நாள் விழாச் செலவு ரூ.3 கோடி. 
மொத்த செலவு ரூ.110 கோடி!விளம்பரம் மூலம் 30 வினாடிக்கு ரூ.25 லட்சம்;

 ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = ரூ.12.5 கோடி; 100 நாட்களுக்கு வரவு ரூ.1250 கோடி; 

மொத்த லாபம் = ரூ. 1140 கோடிகள்!

இப்பொழுது தெரிகிறதா? 
விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி பிக்பாஸா? பிக் பிஸ்னஸா? என்று! 

இந்த நிகழ்ச்சி முதலில் தமிழில் வந்தல்ல
பிக்பாஸ் வெளி நாட்டில் பிக்பிரதர் என்று ஆரம்பமாகி பிரபலமாகி உலகம் முழுக்க பரவிய நிகழ்ச்சி.
இந்தியாவில்  இந்தியிலோ இப்படித்தான் 100 நாள் என ஆரம்பித்து பல ஆண்டாக 11  நிகழ்ச்சிகாலை கண்டது. இது.

இப்போது தமிழ்நாட்டுக்கு இறக்குமதி ஆகியிருக்கிறது.
 விஜய்  டிவியும் கூட ஸ்டார் குழும டிவியின் தமிழ் பதிப்பாக துவங்கப்பட்டது.

அதன்பின் அது பல கைகள் மாறியதாக தகவல்  அது உண்மையாக கூட இருக்கலாம்!
ஆனால் இந்நிகழ்ச்சியை நடத்துவது யாராக இருந்தாலும்,எந்த நாடக,மொழியாக இருந்தாலும் முதலில்  
நிகழ்ச்சியை வடிவமைத்த நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் படிதான் நடத்த வேண்டும்.

லாபத்தில் பங்கை கொடுக்க வேண்டும்.
காபிரைட் அவர்களுடையது.  அவ்வளவே!

ஆனால் ஒரு குற்றசாட்டு பரவலாக உள்ளது.அது இவர்கள் சொல்வது 100 நாள்; 
ஆனால் அதன் சூட்டிங் 10 நாட்கள் மட்டுமே.

அதைதான்  கணக்கு போட்டு பிரித்து 100 நாட்களுக்கு வெளியிடுவார்கள்.என்பதுதான்.
ஆனால் அது  சரியா ன குற்றசாட்டா இல்லை ,பிக்பாஸ் வெற்றியினால் கடுப்பில் வரும் குற்றசாட்டா   எனவும் தெரியவில்லை.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
ன்று,
ஆகஸ்ட்-11.
  • ஆர்மீனியா நாடு உருவானது.(கிமு 2492)
  • மலேசியாவில்  முதல்  பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது(1786)
  • பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?