ஊழலை ஒழிக்கும் வழி.?
இந்திய அரசியல் கட்சிகளிலேயே பாரதிய ஜனதா தான் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அதிகளவு நன்கொடை பெற்ற கட்சி என்பது தெரியவந்துள்ளது.
2012 – 13 காலகட்டத்திலிருந்து 2015 – 16 காலம் வரையில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை “ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு” (Association for Democratic reforms) என்கிற தன்னார்வ குழு ஆய்வு செய்துள்ளது.

மேற்படி ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்ட கால கட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சுமார் 956.77 கோடி அளவுக்கு நிதி பெற்றுள்ளதும், அதில் பெரும் பகுதியை (705.81 கோடி) பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
கட்சிகள் பெற்ற நிதியில் சுமார் 384.04 கோடிக்கு முறையான பான் (PAN) எண்கள் குறிப்பிடப்படவில்லை என்பதும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கட்சிகள் பெற்ற நிதியில் சுமார் 384.04 கோடிக்கு முறையான பான் (PAN) எண்கள் குறிப்பிடப்படவில்லை என்பதும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதே போல் சுமார் 355.08 கோடி அளவுக்கான நன்கொடை வழங்கியவர்கள் முறையான முகவரி ஏதும் அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
முறையான முகவரியோ பான் எண்ணோ இல்லாமல் வழங்கப்பட்ட நன்கொடையில் சுமார் 99% பாரதிய ஜனதா கட்சிக்கே சென்றுள்ளது.
"ஊரில் உள்ள எல்லோரும் பாண் எண்ணை காட்டினாள் பணம் எடுக்க,கொடுக்க முடியும் " என்று உபதேசம் செய்து சட்டமும் போட்ட கட்சி ஊருக்கு மட்டும்தான் உபதேசம் என்று நடந்து கொள்கிறது.
ஊழலுக்கு எதிரான கட்சி என்று தனது அகன்ற மார்பை தட்டிக்கொள்ளும் பாஜக வின் மறு பக்கம் ஊழல்களின் பிறப்பிடமாக உள்ளது .
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலேயும் தனது காவிக்கொடி பறக்க
குதிரை பேரம்,மிரட்டல்,கடத்தல் ,கொலை,அமுலாக்கப்பிரிவு,வருமானவரி சோதனை என்று அனைத்து கருவிகளையும் உபயோகிக்கிறது.
அரசு எந்திரத்தை தவறான வழிகளில் ஊட்டுகிறது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில் (956.77 கோடி) சுமார் 806.25 கோடிக்கான வருமான மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளன – இதில் கணிசமான நிதி சுரங்கம், ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, ஊடகம் உள்ளிட்ட தொழிற்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களே பெருமளவு நிதியை (419.69 கோடி) அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளன.
கட்சிகள் பெற்ற நிதியில் பெரும்பங்கு (432.63 கோடி) தேர்தல் நிதி வழங்குவதற்கென்றே உருவாக்கப்பட்ட டிரஸ்டுகளிடம் இருந்து சென்றுள்ளது. டிரஸ்டுகளின் மூலம் பெற்ற நிதியிலும் பாரதிய ஜனதா கட்சியே முதலிடத்தில் உள்ளது (287.69 கோடி).

ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் படியளப்பதை முறைப்படுத்துவதற்காக தேர்தல் கமிஷனால் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் ஒரே மாதத்தில் சுமார் 14 டிரஸ்டுகள் உருவாக்கப்பட்டன.
பல்வேறு கார்ப்பரேட் முதலாளிகள் இணைந்து உருவாக்கும் இந்த டிரஸ்டுகளின் மூலம் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகள் வழங்கப்பட்டன.
பல்வேறு கார்ப்பரேட் முதலாளிகள் இணைந்து உருவாக்கும் இந்த டிரஸ்டுகளின் மூலம் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகள் வழங்கப்பட்டன.
ஆய்வுக்கு உட்பட்ட காலத்தில் சுமார் 35 முறை நன்கொடை வழங்கிய சத்யா எலக்டோரல் டிரஸ்ட், ஏர்டெல், டி.எல்.எப் (ரியல் எஸ்டேட்), ஹீரோ (மோட்டார் வாகனம்), இண்டியா புல்ஸ்(பங்குத் தரகு நிறுவனம்) உள்ளிட்ட 26 கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுப் பங்கு டிரஸ்ட் ஆகும்.
இதே போல், டாடா, ரிலையன்ஸ், மகிந்திரா, உள்ளிட்ட பெருநிறுவனங்கள், கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலம் அரசாங்கத்திடம் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்வதை டிரஸ்டுகள் மூலம் நிறுவனமயப்படுத்தியுள்ளனர்.
இதே போல், டாடா, ரிலையன்ஸ், மகிந்திரா, உள்ளிட்ட பெருநிறுவனங்கள், கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலம் அரசாங்கத்திடம் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்வதை டிரஸ்டுகள் மூலம் நிறுவனமயப்படுத்தியுள்ளனர்.
கடந்த தேர்தல் சமயத்தில் கருப்புப் பணத்தை ஒழிப்பதே தமது லட்சியம் எனப் பீற்றிக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி பெற்ற தேர்தல் நன்கொடையில் கணிசமான அளவு முறையான பான் எண்களோ, முகவரியோ இன்றிப் பெறபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முதலாளிகளிடம் கைநீட்டிக் காசு வாங்கியதற்கு எண்ணற்ற சந்தர்பங்களில் விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறது திருவாளர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
இவ்வாறு முதலாளிகளிடம் கைநீட்டிக் காசு வாங்கியதற்கு எண்ணற்ற சந்தர்பங்களில் விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறது திருவாளர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மக்களிடம் இரகசியமாக வைத்திருந்த பாரதிய ஜனதா கட்சி, அவ்வாறான அறிவிப்பு வெளியாகவுள்ளதை கார்ப்பரேட்டுகளிடம் முன்னரே தெரிவித்ததாக அப்போதே செய்திகள் வெளியாயின.
மேலும் சுரங்க முதலைகளுக்கும் ரியல் – எஸ்டேட் பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கும் மத்திய அரசு அள்ளிக் கொடுத்துள்ள சலுகைகளின் பட்டியலைத் தான் முதலாளிய அறிஞர்கள் தொழில் வளர்ச்சிக் குறியீட்டெண்களாக மதிப்பீடு செய்து கொண்டுள்ளனர்.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தரவுகள் கட்சிகளால் தேர்தல் கமிஷனில் சமர்பிக்கப்பட்ட நன்கொடை விவரங்களைக் குறித்த தரவுகளின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
“வெள்ளையில்” வாங்கியதே தொள்ளாயிரம் கோடிகள் என்றால், புறவாசல் வழியாக “கருப்பில்” வாங்கிய தொகை எத்தனை ஆயிரம் கோடிகளாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இதுதான் பாஜகவின் இந்துத்துவா முறையில் ஊழலை ஒழிக்கும் வழி.?

இன்று,
ஆகஸ்ட்-23.
- உக்ரேன் கொடி நாள்
- மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)
- ருமேனியா விடுதலை (1944)
- உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது(1948)
பன்னிர் -எடப்பாடி போன்ற ஒருகட்சியில் இரு அணிகளை வைத்து விளையாடி இணைவதை காட்டி உண்மை பின்னணியை கூறி விட்டார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.2700 கோடி அபராதம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 2ஆயிரத்து 700 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தைச்சேர்ந்த ஈவா எக்கிவரியா என்பவர் ((Eva Echeverria)) ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்தார்.
நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படலாம் என்பதை அந்நிறுவனம் முன்னெச்சரிக்கையாக அறிவிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் செலவிற்கும், அபராதத் தொகையாகவும் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலுத்த உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக இதேபோன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளைவிட அதிக ஆபத்தான அளவில் ரசாயனப்பொருட்களை தங்கள் தயாரிப்பில் உபயோகப்படுத்துகின்றன.
குறைந்த அளவில் ரசாயனம் பயன்பட்ட அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்தியாவில்.?
==========================================================================================