தண்ணீரில் கண்டம்.
நமக்கு தண்ணீர் மட்டுமே ஒரு முழுமையான உணவு.
அதில் இதை சேர்த்து, அதை எடுத்து, ஒன்றை அதிகப்படுத்தி, மற்றொன்றைக் குறைத்து நம் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்கும்போது, தண்ணீர் அதன் தூய்மையையும், நம் உடலுக்கு இயற்கையாக அளிக்கக் கூடிய நற்பலன்களையும் இழந்துவிடுகிறது.
தாகத்தை தணிக்கும் நீர் நல்ல ஆரோக்கியமான பலன்களை தராவிட்டால்கூட பரவாயில்லை. கேடு விளைவிக்காமல் இருப்பது அவசியமல்லவா?
கேன் வாட்டர் பயன்பாடு போல பாட்டில் வாட்டர் பயன்பாடும் சமீபகாலமாக பலமடங்கு அதிகரித்திருக்கிறது.
ஏதோ ஒரு நீர் நிலையிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பல்வேறு வகையான சுத்திகரிப்பு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்பட்டு பின்னர் சந்தைக்கு வருகிறது.
அதுவே நாம் குடிக்கும் Packaged drinking water... அதாவது, பாட்டில் வாட்டர்.
பாட்டில் வாட்டர் புழக்கத்தில் வந்த காலத்திலிருந்து அதை மினரல் வாட்டர் என்றே அழைத்து பழக்கப்பட்டு விட்டோம்.
உண்மையில் மினரல் வாட்டர் வேறு, பாட்டில் வேறு. எந்த பாட்டில் வாட்டர் கம்பெனியும் எங்களுடையது மினரல் வாட்டர் அல்ல என்று பகிரங்கமாக சாமானிய மக்கள் புரிந்துகொள்ளும்படி எந்த அறிக்கையும் விட்டதில்லை.
வெறும் ‘பேக்கேஜ்டு வாட்டர்’ என்ற முத்திரையோடு இருந்த பாட்டில் வாட்டர், சமீப காலமாக ‘With added minerals’ என்ற கேப்ஷனையும் சேர்த்துக் கொண்டது. அதற்காக மினரல் வாட்டரில் இருப்பதைப் போல அத்தனை மினரல்களையும் சேர்த்துவிடாமல் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் என்ற வரிசையில் ஏதாவது இரண்டு அல்லது மூன்று கனிமங்களைச் சேர்த்திருப்பதாக பாட்டிலில் ஒட்டியுள்ளன வாட்டர் கம்பெனிகள்.
பாட்டில் நீர் பல நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. கார்பன் ஃபில்டர் வழியாக சுத்தப்படுத்தப்படும் நீரில் க்ளோரின், ரசாயன பொருட்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியும் அசுத்தங்கள் யாவும் நீக்கப்படுகின்றன.
ஓசோன் மற்றும் புற ஊதா கதிர் சுத்திகரிப்பில் நீரில் உள்ள கிருமிகள் அனைத்தும் கொல்லப்படுகின்றன. தலைகீழ் சவ்வூடு பரவல் வழியாகவும் சில பாட்டில் வாட்டர் கம்பெனிகள் தங்கள் தண்ணீரை சுத்தப்படுத்துவதாக தெரிவிக்கின்றன.
ஆனால், எல்லா நிறுவனங்களிலும் தண்ணீர் சுத்திகரிப்பு முறைகள் அனைத்து நிலைகளிலும் ஒரே சீரான கண்டிப்புடன் கண்காணிக்கப்படுவதில்லை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தரக் கட்டுப்பாடு என்பது அவரவர் வசதிக்கேற்ப மாறுபடுவதுதான். உண்மையிலே சுத்தமான ஆரோக்கியமான நீரைதான் மக்கள் பருகிகுறார்கள் என்பதற்கு ஏற்ற தரக்கட்டுப்பாடு இங்கு இல்லை என சொல்லாம். பாட்டிலில் அடைக்கப்
படும் தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பது அந்தந்த கம்பெனிகளுக்கே வெளிச்சம்.
இந்த மினரல்ஸ் பாசாங்குகளையெல்லாம் தாண்டி பாட்டில் வாட்டரில் பல கெடுதல்கள் இருக்கின்றன. அதில் முதல் பிரச்னையே பாட்டில்தான்... அதாவது ப்ளாஸ்டிக். ப்ளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள ரசாயனப் பொருட்கள் பற்றிய கவலை எப்போதாவதுதான் தலை தூக்கும்.
தண்ணீர் தரமானதா, தூய்மையானதா என்று பார்க்கிறோமேயொழிய பாட்டில் பற்றி பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. மேலும் ‘ஒரு முறை’ உபயோகத்திற்கான ‘யூஸ் அண்ட் த்ரோ’ பொருட்களை பல முறை உபயோகிப்பதும் நம்மிடம் இருக்கும் ஆரோக்கியக் கேடான ஒரு பழக்கம்.
பாட்டில் சூடாகிப்போனால் ப்ளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரில் கலக்க வாய்ப்புண்டு. அதனால், Food grade வகையைச் சார்ந்த ப்ளாஸ்ட்டிக்கா, மறு உபயோகம் செய்யக்கூடியதா என்பதை தெரிந்து பயன்படுத்த வேண்டும்.
ப்ளாஸ்டிக்கே வேண்டாம் என்று புத்திசாலித்தனமாக மறுப்பவர்களுக்கு கண்ணாடி குடுவைகள்தான் ஆகச்சிறந்த மாற்று. பயணங்களின்போது கடைகளில் பாட்டில் வாட்டர் வாங்காமல் வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டு செல்வது அதைவிட சிறந்த மாற்று.
இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பாட்டில் தயாரிக்கத் தேவையான கச்சா பொருள் பற்றி நாம் என்றுமே யோசித்திருக்க மாட்டோம்.
ப்ளாஸ்டிக் பாட்டில்களைத் தயாரிக்க க்ரூட் ஆயில் தேவைப்படுகிறது.
தண்ணீரைச் சுத்திகரிக்கவும் எண்ணெய் தேவை. ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தண்ணீர் அடைக்கப்பட்டு நாம் இருக்கும் இடத்துக்கே வந்து சேர மறுபடியும் ஆயில்(பெட்ரோலோ, டீசலோ) தேவை.
தண்ணீருக்கும் எண்ணெய்க்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தாலும், நாம் பருகும் பாட்டில் தண்ணீருக்கும் எண்ணெய்க்கும் இதுபோல நெருங்கிய தொடர்புண்டு.
ஆக, ஒரு பாட்டில் தண்ணீருக்கு பல இயற்கை வளங்களை இழக்க வேண்டியுள்ளது. ஆக, பாட்டில் வாட்டரை நாம் உபயோகிப்பதன் மூலம் நம் உடலைக் கெடுத்துக் கொள்வதுடன் பூமியின் வளத்தையும் சுரண்டி மறுபடி பூமியையே குப்பை மேடாக்குகிறோம்.
இந்தியாவில் நல்ல குடிநீர் என்பது இன்று வரை பெரும் கனவாகவே இருக்கிறது. நம் சுற்றுப்புறத்தையும் இயற்கை வளங்களையும் சரியான முறையில் பராமரிக்காமல், இருந்த நீர் நிலைகளையும் நிலத்தடி நீரையும் மாசு படிய விட்டுவிட்டு இன்று கேன் வாட்டரின் பின்னாலும், பாட்டில் வாட்டரின் பின்னாலும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இயற்கை அளித்துள்ள நீர் ஆதாரங்களை சரியான முறையில் பராமரித்தால் நல்ல குடிநீர் என்ற கனவு எதிர்காலத்தில் சாத்தியமாகும்.மாறுவோம்... மாற்றுவோம்!
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வழக்கமாகச் சொல்வது வெயில் காலத்துக்கும் பொருந்துமா அல்லது அளவு மாறுமா?
‘மாறும் .
அது எவ்வாறு?சில அடிப்படையான உண்மைகளை பார்ப்போம்.
3 பங்கு நீர் - ஒரு பங்கு நிலம்’ என்று பூமியைச் சொல்வதைப் போல, நம் எடையும் 3 பங்கு தண்ணீராலேயே படைக்கப்பட்டுள்ளது.
உடல் தனது வழக்கமான பணிகளைச் செய்து ஆரோக்கியமாக இருக்க, இந்த 70 சதவிகித தண்ணீர் அளவு பராமரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது அவசியம்.
அதாவது, நாம் அருந்துகிற தண்ணீர் சிறுகுடல் வழியாக ரத்தத்தில் கலந்து ஒவ்வொரு செல்லுக்கும் சென்று சேர வேண்டும்.
நாம் தண்ணீர் பருகுவது உடலின் இந்த அடிப்படைத் தேவைக்காகத்தான். இத்துடன் எஞ்சியுள்ள தண்ணீர் சிறுநீரகங்களுக்குச் சென்று வடிகட்டப்பட்டு சிறுநீராகவும் மலமாகவும் வெளியேறிவிடுகிறது.
வியர்வை வழியாகவும், நாம் சுவாசிப்பதன் மூலமாகவும் கணிசமான அளவில் உடலின் தண்ணீர் செலவாகிறது.
இந்த தண்ணீர் இழப்பைப் பொருத்தும் நாம் பருக வேண்டிய தண்ணீர் அளவு மாறும்.
மழை, பனி காலங்களில் உடலின் நீர் இழப்பு குறைவாகவும் வெயில் காலத்தில் அதிகமாகவும் இருக்கும். அதனால்தான் வெயில் காலங்களிலும், அதிகம் வியர்க்கும்போதும் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கிறது.
வானிலை ஆய்வு மையமே வெயில் பற்றி எச்சரிக்கை விடும் அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
எனவே, வழக்கமாக 3 லிட்டர் தேவை என்றால் இப்போது 5 லிட்டர் வரைகூட தண்ணீர் தேவைப்படலாம். தாகம் எடுக்கிறது என்பது உடலின் தண்ணீர் தேவையை உணர்த்தும் அறிகுறிதான்.
அதனால், தாகம் எடுக்கிற அளவு உடலை வறண்டு போக (Dehydration) விடகே கூடாது.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் குடிக்க, குளிக்க, சமையல் செய்ய என ஒரு நாளைக்கு 150 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது.
ஆனால், 8வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 40 லிட்டர் தண்ணீர் வழங்கினாலே போதுமானது என்கிறது நம் அரசு .
தமிழ்நாட்டில் மொத்தம் 13 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன.
அவைகளில் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்பது அதிர்ச்சி தகவல்.
30 ஆண்டுகளுக்கு முன் பாட்டிலில் அடைத்து தண்ணீரை விற்கும் வழக்கம் நம்மிடம் கிடையாது. குடிநீரை அரசே வழங்கியது.அதை மண் குடங்களில்,பித்தளைக்குடங்களில் பிடித்து சேமித்து குடித்து,சமைத்து வந்தோம்.உடல் நலம் காத்து வந்தோம்.
ஆனால், பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் இதில் இறங்கிய பிறகு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானம் கொழிக்கும் தொழிலாக தண்ணீர்விற்பனை மாறிவிட்டது.
கேன் வாட்டர், பாக்கெட் வாட்டர், பாட்டில் வாட்டர் என எல்லாமே தரமற்றதாக வந்து கொண்டிருக்கின்றன. இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சரியாக செயல்படவில்லை.இன்றைய நிலையில் கேன் நீர் , பாக்கெட்நீர், பாட்டில் நீர் என விற்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர்களை விட நம்மூர் குளத்து,கிணற்று நீர் சுத்தமாக உள்ளது.காரணம் கலங்கிய நீரை சுத்த வெள்ளையாக்க கலக்கப்படும் ரசாயனங்கள்,கனிமங்கள் என சேர்க்கப்படும் கலவைகள் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன.
ஒரு தண்ணீர் நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் அளிக்க வரும் நிறுவனம், பெயருக்கு ஏதோ சோதித்துவிட்டு முத்திரையை அளித்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.
அதன்பிறகு அந்த தண்ணீர் தரத்துடன் வருகிறதா என்று கூட பரிசோதிப்பதில்லை.
பயன்படுத்தப்பட்ட கேனை வெந்நீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகே புது லேபிள் ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரவேண்டும்.
பிளாஸ்டிக் பாட்டிலை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட கேனை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது.
ஆனால், பழைய கேனை எடுத்துச் சென்று மீண்டும் அதில் தண்ணீரை அடைத்து விற்கிறார்கள்.
காலி கேனில் மறுபடியும் தண்ணீர் நிரப்புவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் அதில் கலக்கின்றன.
இதன்படி பார்த்தால் 90% கேன் வாட்டர் குடிப்பதற்கு உகந்தது அல்ல!
மெட்ரோ வாட்டரை தனியாரிடம் தாரைவார்த்து விட்டதால் அரசு அதுபற்றிய அக்கறையே இல்லாமல் உள்ளனர்.
இன்று இந்தியா உட்பட உலகில் அதிக பணம் புரளும் வியாபாரம் நீர் வணிகம்தான்.
தண்ணி லாரிகள் மட்டுமே பறந்து வந்து மக்கள் உயிரை பார்ப்பதில்லை.தனியார் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வியாபாரமும்தான்.
தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டில் மட்டுமல்ல.இந்தியர்களுக்கே தண்ணீரில்தான் கண்டம்.
=====================================================================================
இன்று,
ஆகஸ்ட்-14.
======================================================================================

- பராகுவே கொடி நாள்
- பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
- பாகிஸ்தான் விடுதலை தினம்(1947)
- காங்கோ விடுதலை தினம்(1960)
- இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது(2006)
1945 - வியட்நாமின் ஆகஸ்ட் புரட்சி அல்லது ஆகஸ்ட் பொது எழுச்சி என்றழைக்கப்படும், பிரெஞ்சு ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை வியட் மின் என்றழைக்கப்பட்ட வியட்நாம் விடுதலை முன்னணி துவங்கப்பட்டது.
வியட் மின் என்பது பிரான்சிடம் இருந்து வியட்நாமை விடுவிக்க 1941 ஆம் ஆண்டில் ஹோ சி மின் உருவாக்கிய ஒரு கம்யூனிச புரட்சி விடுதலை இயக்கம் ஆகும்.
1858லிருந்து 1945 வரை 87 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின்கீழ் வியட்னாம் இருந்தது.
தற்போதைய மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மலேசியாவின் சில பகுதிகள் அடங்கிய இந்தோசீனா என்று அழைக்கப்பட்ட பகுதியை இரண்டாம் உலகப்போரில் 1945 மார்ச் 9 அன்று ஜப்பான் கைப்பற்றியது.
ஹோ சி மின் |
ஆனால், ஆகஸ்டில் இரண்டாம் உலகப்போரில் தோல்வியடைந்து ஜப்பான் சரணடைந்த சூழலில் மீண்டும் பிரான்ஸ் ஆட்சிக்கு வரவிருந்த நிலையில் இந்தப் புரட்சியைத் துவக்கிய ஹோசிமின் செப்டம்பர் 2 அன்று முழு வியட்நாமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நாடு விடுதலை பெற்றதாக அறிவித்தார்.
மாடுகளை காப்பாற்று .மனிதர்களை கடையேற்று.
உத்திரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் சுமார் 66 லட்சம் ரூபாய் வரை நிலுவை தொகை வைத்ததால் நொடித்துப்போன தனியார் நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திக் கொண்டது.
உ.பி.அரசின் இந்த விபரீத நடவடிக்கையால் ஆக்சிஜன் கிடைக்காமல் காரணமாக 63-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
கபீல் கான் |
ஆக்சிஜன் கிடைக்காமல் குழந்தைகள் சாவதை கண்டு பதறிய அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கபீல் கான் என்பவர் சொந்த பணத்தை செலவிட்டு வெளியே ஆக்சிஜன்சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.
மருத்துவர் கபீல் கானை பெற்றோர்கள்,பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநில அரசு தன பங்குக்கு அவரை பாராட்டும் வண்ணம் கபீல் கானை அரசு மருத்துவமனை பதவியில் இருந்து இடைக்கால நீக்கி விட்டு பூபேந்தர் சர்மா என்பவரை பதிலியாக நியமித்துள்ளது.
குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வாங்கியதை விட்டு மாடுகளுக்கு ஏதாவது மருத்துவம் பார்த்திருந்தால் கபீல் கானை உ.பி.சாமியார் அரசு, சுகாதாரத்துறை அரசு செயலாளராக பதவி உயர்வு செய்திருக்கலாம்.