உங்கள் ஆண்டராய்ட் போனுக்கான அவசிய செயலிகள்.


ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட் போன்களே இன்று மொபைல் போன்களாகக் கருதப்படுகின்றன. இணையத்தை எளிதாக அணுகவும், எப்போதும் இயக்கவும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வங்கி தளங்களில் சென்று நம் பணத்தை நிர்வாகம் செய்திடவும், டிக்கட்கள் பதிவு செய்திடவும் என அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் ஓர் அடிப்படைத் தேவையாய் மாறியுள்ளன. 

அதனாலேயே, பல மொபைல் நிறுவனங்கள், குறைந்த விலையில், இந்த செயல்பாடுகளுக்கு எந்தக் குறையும் வைக்காமல், பல மாடல் போன்களை வெளியிட்டு வருகின்றன. 
ஒரு ஆண்ட்ராய்ட் போன் வரும்போதே, கூகுள் நிறுவனத்தின், கூகுள் சர்ச், யு ட்யூப் போன்ற சில செயலிகளே  பதியப்பட்டே கிடைக்கின்றன. 

இவற்றுடன் இன்னும் சில இலவசமாகக் கிடைக்கக் கூடிய சில செயலிகள் (அப்ளிகேஷன்கள்) குறித்து இங்கே பார்க்கலாம்.

Lost Android
இந்த செயலி  மூலம், நம் போன் திருடப்பட்டால் அல்லது தொலைக்கப்பட்டால், அது எங்கிருந்து இயங்கி வருகிறது என அறியலாம். இந்த அப்ளிகேஷனை டவுண்லோட் செய்திட https://play.google.com/store/apps/details?id=com.androidlost&hl=en என்ற தளம் செல்லவும். 

இதனை போனில் பதியும்போது, நம்மைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், மொபைல் எண் கேட்கப்படுகையில், நம்முடைய போனின் எண்ணைத் தராமல், நம் நெருங்கிய நண்பர் அல்லது உறவினரின் போன் எண்ணைத் தர வேண்டும். 
அப்போதுதான், தொலைந்த போன் எங்கிருந்து இயங்குகிறது என்ற தகவல், எஸ்.எம்.எஸ். செய்தியாக, அந்த போனுக்கு வரும்.

Battery Deffender 
இந்த செயலி, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் உள்ள மொபைல் போனில், தேவையின்றி இயங்கும் அப்ளிகேஷன்களை நிறுத்துகிறது. 

போனை நாம் பயன்படுத்தாத போது, அப்ளிகேஷன்கள் இயங்குவதை நிறுத்துவதன் மூலம், போனில் உள்ள பேட்டரியின் மின் சக்தி பாதுகாக்கப் படுகிறது. 
இதனைப் பெற, https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.batterysaver&hl=en என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.


Viber
இந்த செயலியை, போனில் நிறுவினால், இதன் மூலம் அழைப்புகளை ஏற்படுத்தலாம். செய்திகளை அனுப்பலாம். போட்டோ, விடியோ பைல்கள் ஆகியவற்றை அனுப்பிப் பகிர்ந்து கொள்ளலாம். 

ஆனால், நீங்கள் யாருடைய போனுக்கு இதன் மூலம் தகவல்களை அனுப்புகிறீர்களோ, அந்த போனிலும் இந்த செயலி பதிந்து வைத்து இயக்கப்பட வேண்டும். 
இதனைப் பெற https://play.google.com/store/apps/details?id=com.viber.voip&hl=en என்ற இணைய தளம் செல்லவும். 

Olive Office Premium
ஆண்ட்ராய்ட் போனில், வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் போன்ற பைல்களைப் படித்துப் பார்க்க இந்த செயலி உதவுகிறது. பி.டி.எப். பைல்களையும் இதன் மூலம் படிக்கலாம். 

இந்த செயலியைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி https://play.google.com/store/apps/details?id=com.olivephone.edit

App to SD Free
நம் ஆண்ட்ராய்ட் போனில், புதிய அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிக்க இடம் இல்லாத போது, போனில் உள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டில், அப்ளிகேஷன்களைப் பதிக்க இந்த செயலி உதவுகிறது. 


இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையதள மு கவரி: https://play.google.com/store/apps/details?id=com.IQBS.android.app2sd&hl=en மேலே சுட்டிக் காட்டப்பட்டவை, ஒரு சில இன்றியமையாத செயலிகளே. இன்னும் சில உள்ளன. 
உங்களுக்குத் தேவைப்படும்போது அவற்றை நீங்களே தேடிப் பெறலாம். கீழே, ஆண்ட்ராய்ட் போனின் பேட்டரியின் சக்தி வீணாவதைத் தடுப்பதற்கான குறிப்புகள் தரப்படுகின்றன.

Auto adjust screen tone
உங்கள் ஆண்ட்ராய்ட் போனில், Settings> My Device எனச் செல்லவும். இங்கு கிடைக்கும் Display பிரிவில் கீழாகச் சென்றால், Auto adjust screen tone என ஒரு டூல் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். திரையில் காட்டப்படும் இமேஜ் ஒளித் தன்மையைக் குறைத்து, பேட்டரியின் சக்தியை மிச்சப்படுத்தும் இந்த டூல். பொதுவாகவே, பேட்டரியின் திறனைச் சீக்கிரம் காலி செய்வதில், திரையின் ஒளித் தன்மை காட்சி பெரும் பங்கு வகிக்கிறது. 

இதை உணர்ந்து, கூடுமானவரை தேவையில்லாத அதிக பிரகாசமாகக் காட்டப்படும் ஒளித் தன்மையைக் குறைக்கலாம். 


Screen Time out
திரைக்காட்சி குறித்து சிந்திக்கையில், உங்கள் போனின் திரைக் காட்சி காட்டப்படும் நேரத்தினை மிகவும் குறைந்த காலத்திற்கு அமைத்துவிட்டால், அது அந்த நேரத்தில் போன் இயங்காமல் இருந்தால், காட்சி மறைந்துவிடும். ஆனால், இது பல நேரங்களில் நமக்கு எரிச்சலைக் கொடுக்கும். 

ஏனென்றால், மீண்டும் நாம் அதனை இயக்க பாஸ்வேர்ட்/அமைப்பு அல்லது குறியீட்டு எண் எனத் தர வேண்டிய திருக்கும். ஆனால், இந்த கால அவகாசத்தினை 2 நிமிடம் என அமைத்து, திரையை 30 விநாடிகளே நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், 90 விநாடிகள் பயன்படுத்தாத நேரத்திற்கு, திரைக் காட்சிக்கான மின் சக்தியை வீணடிக்கிறீர்கள் என்று பொருள். 
இப்படி 20 முறை திரைக் காட்சியினை வீணடித்தால், ஒரு நாளில், 30 நிமிடங்கள் நீங்கள் ஸ்கிரீன் டிஸ்பிளே நேரத்தை வீணாக்குகிறீர்கள். 
இதனால், பேட்டரியின் திறன் பெரும் அளவில் வீணடிக்கப்படுகிறது. எனவே, ஸ்கிரீன் நேர அவகாசத்தினை, எவ்வளவு குறைவாக அமைக்க முடியுமோ, அந்த அளவிற்குக் குறைவாக அமைத்துப் பயன்படுத்த வேண்டும்.

Unused Features
நாம் பயன்படுத்தாத பல செயல்வசதிகளை போனில் இயக்கியபடி வைத்திருப்போம். எடுத்துக்காட்டாக, auto-rotate, gestures, smart scrolling, Ambient display, மற்றும் NFC போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றில் எதையுமே நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்த மாட்டோம். 

எனவே, இவற்றின் இயக்கத்தினை நிறுத்தி வைத்தால், மின் சக்தி பெரும் அளவில் சேமிக்கப்படும். தேவைப்படும்போது, இயக்கி, பயன் முடிந்தவுடன், மீண்டும் இயக்த்தினை நிறுத்தி வைக்கலாம். இது வை பி மற்றும் புளுடூத் போன்றவற்றிற்கும் பொருந்தும். 
குறிப்பாக, வீட்டில் இணைய இனைப்பு எப்போதும் இயக்கத்தில் இருந்தால், வை பி செயல்பாட்டினை நம் போனில் இயக்கி வைக்கலாம். ஆனால், வெளியே செல்கையில், இதனை இயக்க முடியாது. எனவே, அதனை நிறுத்தி வைக்கலாம். 
அதே போல புளுடூத் இயக்கத்தினை வெளியில் செல்கையில் நிறுத்தி வைப்பது, மின் சக்தியை மிச்சப்படுத்த மட்டுமின்றி, தேவையற்ற ஊடுறுவலையும் தடுக்கும்.

Vibrations
நமக்கு போனில், வைப்ரேசன் எனப்படும் சிறிய அளவிலான அதிர்வு தேவையா? அழைப்பு பெறுகையில், அழைப்பு ஒலி தான் கேட்குமே. பின் எதற்கு அதிர்வு. அதே போல, கீகளை அழுத்தும்போது அதிர்வு தேவையா? பேட்டரியின் அதிக சக்தியினை, இந்த அதிர்வு எடுத்துக் கொள்கிறது. 

எனவே, தேவை இல்லை எனில், இதன் இயக்கத்தினை நிறுத்தலாம். Settings | Sound எனச் சென்று, அங்கு Vibrations என்ற பிரிவில், Vibrate when ringing என்று இருப்பதில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம். 
கீழாகவே, கீ அழுத்தப்படுகையில் தேவையற்ற ஒலி, அதிர்வினையும் நிறுத்த வழிகள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம்.

Do Not Disturb
இரவு நேரத்தில் நாம் உறங்கச் செல்கையில், இந்த Do Not Disturb டூலைப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிவிட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு, நோட்டிபிகேஷன்கள் எதுவும் காட்டப்பட மாட்டாது. 

அவை வருவதற்கான ஒலி எழுப்புதலும் இருக்காது. இது பேட்டரியின் வாழ்நாளை நீட்டிப்பதுடன், உங்களின் உறக்கத்தை உறுதி செய்து, உங்களின் வாழ் நாளையும் நீட்டிக்கும். 
மேலே காட்டப்பட்ட செயலிகளுடன், பல புதிய செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் அன்றாடம் இணைக்கப்பட்டு கிடைக்கின்றன.
 இவற்றை, உங்கள் தேவைகளின் அடிப்படையில் தேடிப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

நன்றி:தினமலர் கணினி மலர்.
=====================================================================================

ன்று,
ஆகஸ்ட்-08.


  • வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது(1942)
  • ஐநா சாசனம் அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1945)
  • பாகிஸ்தான் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது(1947)
  • ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது(1967)
ஆசியான் அமைப்பு அல்லது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும்.
இதனை இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து 1967-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி அமைத்தன. 
அதன்பின்னர், புரூனே, மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இக்கூட்டமைப்புடன் இணைந்துகொண்டன.
பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி பேணல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பத்தை வழங்குதல் என்பன இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்களாக உள்ளது.
ஆசியான் அமைப்பானது 4.46 மில்லியன் கிலோமீட்டர் நிலப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. 
இது மொத்த உலகின் பரப்பளவின் 3% ஆகும். இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 600 மில்லியனாக உள்ளது. 
ஆசியான் அமைப்பை தனி அமைப்பாகக் கருதினால், இது உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளதார அமைப்பாகக் உள்ளது.
=====================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?