பாஜகவின் அஸ்திரங்கள்

இதுவரை இல்லா அளவு மோடி ஆட்சியில் புதிய இந்தியா பிறந்துள்ளது உண்மைதான்.

ஆனால் இது இதுவரை இருந்த இந்தியா போல் அகிம்சை தனம் உள்ளதாக இல்லாமல் வன்முறை வளர்ந்தோங்கும் பரந்த இந்தியாவாக இருப்பதுதான் வேதனை.

பரந்த இந்தியா என்பதை விட பாஜக இந்தியா என்பதே சரி.

மத்தியில் ஆட்சியை பிடித்து ஒட்டுமொத்தமாக இந்தியாவை சீரழிப்பதுடன் பாஜக திருப்தி அடையவில்லை.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் பாஜகவே ஆள வேண்டும் என்பதே அதன் பரந்த இந்தியக் கனவாக உள்ளது.
அதற்கு ஆர்.எஸ்.எஸ் பாஜகவை தூண்டுகிறது.

தூண்டுகிறது என்பதை விட பாஜக என்ற முகமூடியை கழற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டது என்பதுதான் தற்போதைய சுடும் உண்மை.

குடியரசுத்தலைவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.,பிரதமர் மோடியைப்பற்றி சொல்லவே வேண்டாம்.
வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்தாலும் பாஜக முகமூடியை வைத்து சற்று மென்மையாக இந்துத்துவாவை அரசில் திணித்தார்.

ஆனால் மோடி அதிரடிதான்.
காரணம் இந்திய மக்கள் போலியாக காட்டப்பட்ட அவரின் திறமை மிக்க  டிஜிட்டல் உருவத்தை கண்டு ஏமாந்து கொடுத்த மக்களவை பெரும்பான்மை.
அது மோடி கிடைத்த ஐந்தாண்டு காலத்தில் எவ்வளவு இந்துத்துவா அரசை உருவாக்க வேண்டுமோ அத்தனையை ஆக்கி கொள்ள வசதியாகிவிட்டது.

 இந்துத்துவாவை கண்டிப்புடன் இந்தியாவில் திணித்தாலும் இந்திய தனித்தன்மையை கெடுக்கும் வகையில் மோடி அரசு நடந்து கொள்வதுதான் கொடுமை.

அரசு துறைகள் அனைத்திலும் தனியார்,அந்நியமயமாக்கல்.ஏழை மக்களுக்கான சலுகைகள் முழுக்க நீக்கம்.
இதை விடக்கொடுமை விவசாய நிலங்களை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எடுத்து கார்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மசோதா நிறைவேற்றம்.

அதன் மூலம் விவசாயத்தை அடியோடு அழித்து இந்தியா விவசாய நாடு என்பாதை ஒழித்து புதிய இந்தியாவை கொண்டுவந்தது.
உற்பத்தி துறையிலும் இந்தியா வீழ்ச் சிக்கண்டு  உலக அளவில் வளமிக்க நாடுகளில் பட்டியலில் இருந்து விளக்கப்பட்டதும் மோடியின் சாதனைகளில் ஒன்று.

விலைவாசிகள் உயரும் அதே நேரம் அதற்குப்போட்டியாக வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துக்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் வேலையிழப்பை தடுக்க மோடியின் வெளிநாட்டு பயணங்கள் கொஞ்சமும் உதவவில்லை.

மாறாக மோடிக்கு அவை மக்கள் பணத்தில் இன்ப சுற்றுலாவாகத்தான் அமைந்துள்ளது.வெளிநாடுகளில் பல்வேறு மாறுவேட உடைகளில் ஆடவு ம்,செல்பி எடுக்கவுமே இந்த பயணங்களால் ஏற்பட்ட பலன்.

கோவா,மணிப்பூர்,அசாம் என மாநிலங்களில் தேர்தல்களில் மக்களால் பாஜக ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் தேந்தெடுக்கப்பட்டாலும்,குறுக்கு வழியில் பணம்,பதவி ஆசை,மிரட்டல் மூலம் ச.ம.உ,க்களை விலைக்கு வாங்கி அசிங்கமான முறையில் ஆட்சியமைத்துள்ளது பாஜக.

தமிழ்  நாட்டில் ஊழல் வழக்கு இல்லா அதிமுக தலைவர்கள் இல்லை என்ற நிலை பாஜகவுக்கு வசதியானது.

வருமானவரித்துறை,அமுலாக்கத்துறை மூலம் அதிமுக தலைவர்களை மிரட்டி பொறுப்பு ஆளுநர் மூலம் பாஜகவே ஆண்டுவருகிறது.

புதுசேரியில் காங்கிரஸ் ஆட்சி  என்றாலும் கிரண்பேடி என்ற பாஜக ஆளுநர் மூலம் தேர்தலில் மூன்றாம் இடத்தில் தோல்வியை கண்ட பாஜக தலைவர் உட்பட 3 பாஜகவினரை தன்னிச்சயாக பதவியேற்பை நடத்தி குழப்பத்தை கொண்டு வந்துள்ளது.அதற்கு முன்னரே ஆளுநர் முதலமைச்சர் அதிகாரங்களில் தலையிட்டு குழப்பத்தை உண்டாக்கி வந்தார்.

 இப்போது கேரளாவில் வன்முறை கொலைவெறியாட்டம் மூலம் கால் பாதிக்க முயன்று வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் கொலையாக ,அவரை கொன்றது மார்க்சிஸ்ட் கள் என்று ஒப்பாரி வைத்து உடனே பந்த் நடத்தி வன்முறையில் இறங்கி அரசியல் செய்த பாஜக கொலையாளிகள் 6 பேர்கள் கைது செய்யப்பட்டதும் அதில் பலர் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் என்பதும் அம்பலப்பட்டு கேரளா மக்கள் முன் அம்மணமாயுள்ளது.

பீகாரில் பணம்,பதவி ஆசையில் நிதிஷ் குமாரை விலைக்கு வாங்கி கூட்டணி ஆட்சி அமைத்தாயிற்று.
இதில் பாஜகவை எதிர்த்து லாலுவுடன் கூட்டணி வைத்து வென்ற நிதிஷ் குமார் அதே பாஜகவுடன் தற்போது கூட்டணி வைத்திருப்பது இந்திய அளவில் மோசமான அரசியல் வாதியாக நிதிஷ் குமாரை பிரகடனப் படுத்தி விட்டது.

ஆக பாஜக முழுமையாக முகத்திரையை விலக்கி ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மை கோரமுகத்தை காட்ட ஆரம்பித்து விட்டது.
மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க எந்த அளவும்,எந்த இழி செயலை செய்யவும் இறங்கும் என்பதை தனது அடுத்தடுத்த செயல்களால் வெளிப்படுத்தி விட்டது.

எதிர்க்கட்சிகள் பாஜகவின் பணம்,பதவி,மிரட்டல்,கடத்தல்,கொலை போன்ற ஆட் சேர்ப்பு அஸ்திரத்துக்கு பதிலடி கொடுக்க திணறுகின்றன.
அதற்கு பாடம் கற்பிக்கும் தகுதியுடையவர்கள் இந்திய மக்களே.

ஆனால் எந்த பொத்தானை அமுக்கினால் தாமரைக்கு வாக்கு விழும் வாக்குப்பதிவு எந்திரத்தை அதிகம் கையில் வைத்துள்ள தேர்தல் ஆணையம்,வருமானவரி ஏவல் துறை,அமுலாக்க ஏவல் துறை வைத்து காலை அழுந்த பதித்துள்ள ஆர்.எஸ்.எஸ் பாஜகவை எதிர்க்க மக்களால் முடியுமா என்பதுதான் அச்சத்தை தரும் கேள்வி.
======================================================================================
ன்று,
ஆகஸ்டு-01.
  • உலக தாய்ப்பால் வாரம் துவக்கம்
  • உலக சாரணர் தினம்
  • லெபனான் ராணுவ தினம்
  • சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் இறந்த தினம்(1920)

பால கங்காதர திலகர், 

மஹாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரியில், கங்காதர் ராமச்சந்திர திலக் - பார்வதிபாய் தம்பதிக்கு மகனாக, 1856 ஜூலை 23ல் பிறந்தார். 

1879ல், சட்டப் படிப்பை முடித்தார். இந்திய காங்கிரசில், 1889-ல் சேர்ந்தார். 
 1905-ல், வங்காளத்தை இரண்டாக பிரித்தது, பிரிட்டிஷ் அரசு; அதை கடுமையாக எதிர்த்தார்.கடந்த, 1907ல் காங்கிரஸ் கூட்டத்தில், மிதவாதிகள், தீவிர போராட்டக்காரர்கள் என இரு பிரிவினர் உருவாகினர். 
தீவிர போராட்ட குழுவின் தலைவரானார், திலகர். 
பத்திரிகையில், ஆங்கிலேய அரசை கடுமையாக விமர்சித்ததால், மியான்மர் என்றழைக்கப்படும் அப்போதைய பர்மாவின், மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலைக்கு பின், அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து, 'ஹோம் ரூல்' இயக்கத்திற்காக போராடினார். 
கிராமம் கிராமமாக சென்று, 'சுயராஜ்ஜியம் நமது பிறப்புரிமை' என்ற கருத்தை, மக்களிடையே வலியுறுத்தினார். 
======================================================================================






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?