;பொய்யிலே பிறந்து.....

மாண்புமிகு பாரதப் பிரதமர் திருவாளர் மோடி அவர்களின் உரையைப் புரிந்து கொள்வதிலும், அதில் அவர் உதிர்த்துள்ள பொய்களையும் உண்மைகளையும் இனம் பிரித்துப் பார்ப்பதிலும் சில பல சிக்கல் உண்டு.

முதலில், நரகல் ஆற்றில் நீந்தும் திறமை வேண்டும்

அடுத்து, அக்காமாலாவை அசூயை இன்றிக் குடிக்கும் ஆற்றல் வேண்டும்;
 மேலும், உண்மைகளை அறிந்து வெடித்துப் போகாத இதயம் வேண்டும்.
 மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்;
நாம் மாண்புமிகு பிரதமர் அவர்களின் சுதந்திர தின வாய்ப்போக்கில் ஒரு சில அம்சங்களை மாத்திரம் பிரித்து மேயப் போகிறோம்.

சவடால் 1 : உலகமே வியக்கும் வண்ணம் மிக குறைந்த காலத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வெற்றி பெற்றுள்ளது.

உண்மை : பல்வேறு அரசாங்கங்களின் சுமார் 17 ஆண்டு கால முயற்சியின் பலனாகவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்துள்ளதோடு, குழப்பமான வரிவிதிப்பு முறைகளையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மீளமுடியாத சிக்கலில் மாட்டியுள்ளனர். ஜி.எஸ்.டி முறையை முன்பு அறிமுகம் செய்த காங்கிரசின் ப.சிதம்பரமே, மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட வரிவிதிப்பு முறை ஜி.எஸ்.டியின் அடிப்படைக்கே முரணானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சவடால் 2 : புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலைகள் இரு மடங்கு வேகத்தோடு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

உண்மை : நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2001 -ம் ஆண்டிலிருந்து பார்த்தால், 2012 – 13 காலப்பகுதியில் தான் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அதிவேகத்துடன் நிர்மாணிக்கப்பட்டன.

சவடால் 3 : இரயில் பாதைகள் இருமடங்கு வேகத்துடன் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

உண்மை : இதுவும் பொய். 2009 – 10 கால கட்டத்தில் இருந்து இரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு பரிசீலித்தால், 2011 – 12 காலகட்டத்தில் தான் அதிகளவில் புதிய இரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சவடால் 4 : சுதந்திரத்திற்கு பின்னும் பல்லாண்டுகள் இருளில் மூழ்கியிருந்த 14,000 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

உண்மை : இதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் உள்ளன. மின் இணைப்பு இல்லாத கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 18,452 கிராமங்களில் 14,834 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது சரி தான். ஆனால், நாடெங்கும் உள்ள வீடுகளில் நான்கில் ஒரு வீட்டுக்கு மின் இணைப்பு கிடையாது.

அதாவது கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது – வீடுகளுக்கு முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதுவும், மின் வழங்கல் மற்றும் பகிர்மானம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளதால், தனியார் முதலாளிகளுக்குப் புதிய சந்தைகளைத் திறந்து விடும் நோக்கிலேயே புதிய கிராமங்கள் மின் இணைப்பு வலைப்பின்னலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.


சவடால் 5 : 29 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

உண்மை : ஆகஸ்டு 8 வரையிலான காலகட்டத்தில் 29.48 கோடி புதிய ஜன் தன் கணக்குகள் துவங்கப்பட்டது உண்மை தான். ஆனால், இதில் மூன்றில் ஒருபகுதி கணக்குதாரர்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு இருந்தது. மேலும், புதிதாக திறக்கப்பட்ட கோடிக்கணக்கான புதிய வங்கிக் கணக்குகளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரை பணப்பரிமாற்றம் நடக்கவில்லை.

பெருவாரியான மக்களை வங்கி வலைப்பின்னலுக்குள் இழுத்து அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் நோக்கில் துவங்கப்பட்ட ஜன் தன் யோஜனாவை வளர்ச்சித் திட்டம் என பீற்றிக் கொள்ள ஏதுமில்லை என்பதே உண்மை.

சவடால் 6 : ஒன்பது கோடி விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டை வழங்கப்பட்டுள்ளது.

உண்மை : விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 9.06 கோடி மண் ஆரோக்கிய அட்டையில் சுமார் 2.5 கோடி அட்டைகளில் தான் விவசாய மண்ணின் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் உள்ளன என்பதே உண்மை.

சவடால் 7 : சுமார் 2 கோடி ஏழைக் குடும்பங்கள் விறகடுப்பிலிருந்து எல்.பி.ஜி அடுப்புக்கு மாற்றப்பட்டுள்ளன.

உண்மை : 2.5 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டுத் தரவுகளின் படி பார்த்தால் புதிதாக இணைப்பு வாங்கியவர்கள் பெரும்பாலும் எரிவாயு உருளைகளை வாங்கிப் பயன்படுத்தவே இல்லை.

சவடால் 8 : பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 3 லட்சம் கோடி கருப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

உண்மை : 1.08.2017 அன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலின் அடிப்படையில் கருப்புப் பணமாக இனங்காணப்பட்ட தொகையின் மதிப்பு 18.5 ஆயிரம் கோடி. இதே 2013 – 14 காலகட்டத்தில் நடந்த மன்மோகன் சிங் அரசில் அறிமுகம் செய்யப்பட்ட நேரடி வரிவிதிப்பின் விளைவாக கருப்புப் பணமாக இனங்காணப்பட்ட தொகையின் அளவு 90.4 ஆயிரம் கோடி.

வழக்கமாக பிரதமர் ஆற்றும் சுதந்திர தின உரையை விட இம்முறை சுருக்கமான உரையாக அமைந்து விட்டதென ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சுருக்கமான உரையிலேயே இத்தனை பொய்கள் என்றால், விரிவாக உரையாற்றியிருந்தால்?
வளர்ச்சி:
வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி சரக்கு மற்றும் சேவை வரி மிகக்குறைந்த நாட்களிலேயே சாதித்துக்காட்டப்பட்டதைப் பார்த்து உலகம் ஆச்சரியப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியாவில் ஜி.எஸ்.டி கடந்த 17 வருடங்களாக ஆய்வு செய்யப்பட்ட விஷயம். 
பாஜகவி்ற்கு முன்னதாக இருந்த அரசுகள் இதற்காக தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளன.
சாலைகளின் வளர்ச்சி:
பிரதமர் மோடி பேசும்போது இன்றைய காலகட்டத்தில் முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு வேகமாக சாலைகள் போடப்படுகின்றன என்று பேசினார்.
ஆனால், இது தவறு. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 2001லிருந்து இன்றுவரையிலான காலகட்டத்தில் 2012-13 காலகட்டத்தில் தான் அதிவேகமாக சாலைகள் போடப்பட்டுள்ளன. 
இதில் தேசிய, மாநில, ஊரக நெடுஞ்சாலைகள் அடக்கம்.

ரயில்வே:
மோடி பேசும்போது இன்று ரயில் வழிப்பாதைகள் இரட்டை வேகத்தில் உருவாக்கப்படுவதாக சொன்னார்.
ஆனால், இது தவறு.
 2009 முதல் இன்றுவரை அதிகமான ரயில் பாதைகள்  உருவாக்கப்பட்டது 2011ம் ஆண்டுதான். 
2011-12 காலகட்டத்தில் 3300 கி.மீ நீளத்திற்கு ரயில்பாதைகள் போடப்பட்டன. 
ஆனால், மோடி ஆட்சிப்பொறுப்பேற்ற 2014-16 வரை ஆண்டுக்கு 2400 கி.மீ ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன.
 2016-17 காலகட்டத்தில் 2800 கி.மீ பாதைகள் போடப்பட்டுள்ளன. 
மேலும் மோடி  சொல்வது போல் இரட்டை வேகத்தில் வேலைகள் நடைபெறவில்லை. 
அப்படி நடைபெற்றிருந்தால் 2014-16 காலகட்டத்தில் 2400 கி.மீ என்று இருந்த ரயில்பாதை பணிகள், 2016-17ல் 4800 ஆக உயர்ந்திருக்க வேண்டும். 
ஆனால், அப்படி நடக்கவில்லை.

சமையல் எரிவாயு:
நாட்டில் கூடுதலாக 2 கோடி பெண்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதாக மோடி குறிப்பிட்டார்.
ஆனால், இது தவறான தகவல். 
உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2.5 கோடி புதிய எரிவாயு இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களில் பல லட்சம் பேருக்கு சிலிண்டர் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு:
மோடி பேசும்பொழுது, எந்தவிதமான உத்ரவாதமும் இல்லாமல் 8 கோடி வரை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சுயவேலை வாய்ப்புக்காக கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
ஆனால், இதுதவறான தகவலாகும். 
முந்த்ரா திட்டத்தின் கீழ், சிறுகுறு தொழில்களுக்காக 7.46 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 
ஆனால், இவர்களில் 40% பேருக்கு மட்டுமே கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மொத்தமாக ஒதுக்கப்பட்ட நிதியில் 2.5% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளை விடுவதும் வெளிநாட்டில் போய் பொய்யான வளர்சி  பற்றிய பேசுவதையும் பிரதமர் மோடி வழமையாக்கி கொண்டுள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் இதைப்பற்றி கேள்விகள் எழுப்பினால் மவுனசாமி யாக மாறி தியானத்தில் இருப்பவர் போல் இருந்து விடுகிறார்.
இது கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் 110 போன்ற பொய் வளர்சி .
தெரிந்தேதான் தவறான வளர்சி தகவல்களை தைரியமாக அரசு விழாக்களில் மோடி சொல்லுகிறார்.
பொய்யிலே பிறந்து,பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே பாடல்தான்  மோடி,பாஜகவை பார்க்கையில் நினைவில் 
=========================================================================================

ன்று,
ஆகஸ்ட்-18.
  • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
  • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
  • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
  • இந்திய விடுதலைப்  போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)
=========================================================================================
தமிழ் சினிமாவில் 900 படங்களுக்கு மேல் நடித்த அல்வா வாசு காலமானார்.

பிரபல நடிகர்கள் பலருடன் சேர்ந்து பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்த அல்வா வாசு, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஓராண்டாக மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார். 
அல்வா வாசுவின் உடல்நலம் சில நாள்களுக்கு முன்னர் மிகவும் பாதிக்கப்பட்டது. 
இதையடுத்து மருத்துவர்களால் கைவிடப்பட்ட அவர் மதுரையில் இருக்கும் தனது வீட்டில் காலமானார். 
அவருக்கு வயது 57.



ஜெயலலிதா சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாரா? 
அட்மிட்டாகும்போதே கடுமையான நுரையீரல் நோய்த் தொற்றும் இருதய கோளாறும் இருந்ததா? 
அவரது உடலில் சர்க்கரையின் அளவு என்ன? 
அப்படிப்பட்டவருருக்கு காய்ச்சல்-நீர்ச்சத்து குறைபாடு என்று மட்டும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது ஏன்? 
சிகிச்சையின்போது ஜெயலலிதா இயல்பு நிலையில் இருந்தாரா? 
இடைத்தேர்தல் மனுவில் சுயமாக கைரேகை வைத்தாரா? 
வாக்காளர்களுக்காக வெளியிடப்பட்ட அறிக்கையில் கையெழுத்து போட்டாரா? 
இட்லி-சாம்பார், தயிர்சாதம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிட்டாரா? ஐ.சி.யூ.வில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாரா? 
சர்க்கரை அளவின் காரணமாக அவரது கால்கள் பாதிக்கப்பட்டனவா? 
மரணம் நிகழ்ந்த உண்மையான நேரம் எது? 
அதன்பின் எவ்வளவு நேரம் கழித்து அறிவிக்கப்பட்டது? 
சிசிடிவி காமிராக்கள் ஏன் அகற்றப்பட்டன?

அதை எல்லாம் விட  முக்கிய கேள்வி.'திமுக செயல்தலைவர் ஸ்டாலின்  கேட்டபோதே அல்லது அதன் பின் முன்னாள் முதல்வர் பன்னிர்செல்வம் கேட்டபோது விசாரிக்காமல் தினகரன் கூறிய பின்னர் குழ அமைப்பதும் ,அதை அப்போலோ வரவேற்பதும் பழைய தடயங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு,புதியவை தயாரிக்கப்பட்டுள்ளதோ என்று ஐயத்தை கிளப்புகிறது.அந்த 75 நாட்களையும் விசாரிக்குமா.அல்லது மருத்துவ தாட்களை மட்டுமே மேயுமா?
விசாரணைக்குழு தரப்போகும் அறிக்கையை  சாதாரண மனிதர்கள் கூட இப்போதே சொல்லும் அளவு விவரமாக இருக்கிறார்கள்.
காரணம் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு வெளியே ஒன்றும் தெரியாது என்று அளந்து விடுகிறீர்கள்.
பிக்பாஸ் கமல் மட்டும் கண்காணிக்கவில்லை.பொதுமக்களும் வீட்டில் உள்ளோர் அசைவை கவனிக்கிறார்கள்.என்பது உங்களுக்கு தெரியுமா?
=========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?