அம்பானி உருளைத் திட்டம்?

அம்பானியின் ரிலையன்ஸ் நிறு வனம், சமையல் எரிவாயு சந்தையில் நுழைந்து பெரும் லாபம் கொழிக்க ஏதுவாக முன்கூட்டியே படிப்படியாக மோடி அரசு திட்டமிட்டு வந்தது தற்போது தெரிய வந்திருக்கிறது.

மோடி ஆட்சிபொறுப்பேற்ற பின்னர், வசதி படைத்தவர்கள் சமை யல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் பெறுவதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். 

அத்திட்டத்தின் ஒரு பகுதி யாக, கேஸ் சிலிண்டரை பதிவுசெய்யதானியங்கி சேவையை அழைக்கும் போது பூஜ்ஜியத்தை அழுத்தசொல்லியது. அப்படி அழுத்தியவர் களின் சிலிண்டர் மானியம் தானாக ரத்து செய்யப்பட்டது. 

இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்த பின்னர் அந்த நடைமுறை கைவிடப் பட்டது. இதனைத் தொடர்ந்து 10 மில்லி யன் மக்கள் அதாவது 1 கோடிப்பேர் தங்களது மானியத்தை தாங்களாகவே முன் வந்து விட்டுக்கொடுத்ததாக ஆட்சியாளர்கள் அறிவித்தனர். 

இதன் மூலம் அரசுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிஞ்சியிருக்கிறது என்றும் கூறிக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மத்திய அரசின் ‘‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’’ என்ற திட்டத்தை மோடி அறிமுகப்படுத்தினார். 

பெண்கள் மற்றும் குழந்தைகள் புகையின்றி சுத்தமாக சமைக்கவும், பாது காப்பற்ற நிலையில் எரிபொருள் சேகரிக்கச் செல்வதை தடுக்கவுமே அனைவருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குகிறோம் என அறிவித்தனர். 

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதன் மூலம் தேசிய அளவில் சமையல் எரிவாயு பயனாளிகள் வட்டம் 61 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரித்துள்ளது என 2017 ஜனவரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்திருந்தது.

ஒரு புறம் ஏழை மக்களுக்காகவே மோடி அரசு செயல்படுவது போன்றபிம்பம் காட்டப்பட்டு வந்தநிலையில், 2016ம் ஆண்டு ஜூலை முதல் மாதம்தோறும் சிலிண்டர் விலையை ரூ.2 உயர்த்திக்கொள்ள மத்திய அரசுஅனுமதி வழங்கியது. 

இந்த நடைமுறை 2017 ஜூலை வரையிலும் இருந்தது.

மேலும் கடந்த 2016 அக்டோபர் மாதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மேல் வாங்கு பவர்களுக்கு மானியம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தது.தொடர்ந்து மார்ச் 2017 வரையிலான 6 மாதத்தில் 6 முறை கேஸ்சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. 

இதில் உட்ச பட்சமாக பிப்ரவரி மாதம் ரூ 66.50 ம்,மார்ச் மாதம் ரூ 86 என வகை தொகையின்றி விலையை ஏற்றினர்.ஆனால் இதே நேரம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் 2014ம் ஆண்டில் இருந்து கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைய துவங்கியது. 

கச்சா எண்ணெய் வீழ்ச்சியடைந்த நிலையிலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு மக்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

ஆனால் மோடி அரசு ஏற்கனவே எதிர்கால திட்டத்தின் அடிப்படையில் 2015ம் ஆண்டு செப்டம்பரில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம் ஓர் பொது அறிவிப்பை வெளியிட்டது. அதில், பொதுத்துறையின் கீழ் இருந்துவரும் பைப் லைனை (குழாய் வழி பாதை) தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியது. 

இதன் மூலம் தனியார் எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனம் பல லட்சம் கோடிகளை மிச்சப்படுத்த அதாவது கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுத்து கொடுக்கப்பட்டது.

அதாவது அரசு பொதுத்துறையின் கீழ் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் பைப்லைன் நெட்ஒர்க் மூலம் தனியார் நிறுவனங்கள் நாடு முழுவதும் மிக எளிதாக எவ்விதச் செலவுமின்றி, தங்கள் எண்ணெய்யை தங்கள் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தொலை தூரங்களுக்கு எடுத்துச்செல்வது மிகவும் எளிதாக்கப்பட்டது.

இதற்கு 2015ம் ஆண்டும் அக்டோ பர் மாதம் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசி) கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இதன் மூலம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் விநியோகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை பயன்படுத்தி தனியார் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் சந்தையை விரிவுபடுத்திக் கொண்டு கொள்ளை லாபம் அடைவார்கள் என வாதிட்டது.

குறிப்பாக ஐஓசி யின் 20 பைப்லைன் வழிகளை பொதுப்பயன்பாட்டிற்கு- அதாவது தனியார் நிறுவனங்களின் எரிவாயு போக்குவரத்திற்கு - திறந்து விடுவதன் மூலம் பொதுத்துறை நிறுவனம் மூலம் 50 சதவிகித எரிவாயு விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டு தடைபடும் என கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

ஆனால் மோடி அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. 

முன் கூட்டியே போடப்பட்ட திட்டத்தின் படி எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பொதுத்துறை நிறுவனங்களின் பைப்லைன் பாதையை தனியாருக்கு அனுமதித்தது.

இதனை பயன்படுத்திக் கொண்டரிலையன்ஸ் நிறுவனம், 2016 நவம்பர் 27 அன்று இந்திய ஆயில்கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும்பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயு ஒழுங்குமுறை ஆணைய த்திற்கு கடிதம் மூலம் அனுமதி கோரியது. 

அதில், இந்தியாவின் கிராமப்புறப் பகுதி மற்றும் வட இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு செல்லும் பைப்லைன்களை முழுமை யாக பயன்படுத்திக் கொள்வோம் என தெரிவித்திருந்தது.
இவர்தான் இந்திய மனிதர்.இவரை  நிலவு  ஆய்வுக்கு அனுப்பலாம்.
இவரால் நீர்,உணவு,காற்று, வெளிச்சம் இல்லாமல் வாழமுடியும்.

ரிலையன்ஸ் நிறுவனம் எவ்வித முதலீடுமின்றி பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசும் அனுமதி அளித்தது. 

ஆனால், அதற்கு முன்னதாகவே 2016 அக்டோபரில் ரிலையன்ஸ் நிறுவனம் 5 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர்களை சில்லறை விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது. 

அதில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிட்டவில்லை. 
இந்நிலையில் 2016 நவம்பரில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் குழாய் வழித்தடத்தை பயன்படுத்திக்கொள்வதற்கான அனுமதியும் கிடைத்தது. 

அதன் பின்னரும் எதிர்பார்த்த கொள்ளை லாபம் ஈட்டமுடியவில்லை.

இந்நிலையிலேயே, மத்திய மோடி அரசு தற்போது 2017 ஜூலை முதல் மாதந்தோறும் 4 ரூபாய் விலையை உயர்த்திக் கொள்ள உத்தரவிட்டிருக்கிறது.

இதன் மூலம் இதுவரை கேஸ் சிலிண்டருக்கு இருந்து வந்த மானியம் இனி இல்லைஎன மத்திய அரசு முடிவு செய்திருக் கிறது.எனவே, இந்திய எரிவாயுச் சந்தையை ரிலையன்ஸ் நிறுவனம் பிடிப்பதற்காகவே மார்ச் 2017ல் இருந்து எரிவாயுவிற்கு அளித்து வந்த மானியத்தை மத்திய அரசு விலக்கி யிருக்கிறது என்பது தெளிவாகிறது.

ரிலையன்ஸ் சமையல் எரிவாயு வின் எதிர்கால சந்தையை விரிவு படுத்துவதற்காகவே ‘‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்’’. 

நாட்டு மக்களின் பிரதமராக செயல்படுவதை விட, ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் எரிவாயு தலைமை செயல் அதிகாரியாகவே (சிஇஓ) பிரதமர் மோடிசெயல்படுகிறார் என்பது மீண்டும்ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டி ருக்கிறது.


                                                                                                                                                                     
========================================================================================

ன்று,
ஆகஸ்ட்-04.

  • அப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது(1984)
  • நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)
========================================================================================
                         முதல் உலகப் போரின் போது எகிப்தில் ஸ்பிங் பிரமிட் முன் இந்திய வீரர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?