இடுகைகள்

நீங்கள் இந்தியரா?

படம்
மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு உறுதி அளித்தாலும், பல கட்டுப்பாடுகளை விதித்தும், ஆவணங்களைக் கேட்டும் மக்களை அலையவிடும் வேலையை மறைமுகமாகச் செய்து வருகிறது. குறிப்பாக ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை சமர்பித்தாலும் குடியுரிமை பெற முடியாது என அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் குடியுரிமைக்கு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும் என பல கேள்விகளை எழுப்பி வரும் வேளையில், இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், தற்போது யார், யார் இந்திய குடிமக்கள், குடியுரிமை பெற என்ன ஆவணங்கள் தேவை என்பது பற்றி மத்திய அரசு தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்தியாவில் 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ம் தேதி அல்லது அந்த தேதிக்கு ம...

சரிகிறது பொருளாதாரம்

படம்
பங்கு சந்தை உயர்கிறது. எப்படி? பல மாதங்களாக ஏதேதோ சொல்லி சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்த மத்திய ப.ஜ.க அரசு, இறுதியாக இந்திய பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளது என்று ஒப்புக்கொண்டு விட்டது. ஆனால் இது மந்தை நிலை இல்லை எனவும், மந்த நிலைக்குச் செல்லாது எனவும் நிதி அமைச்சர்  உறுதி அளித்துள்ளார் . இந்த வாக்குறுதி, நம் நாட்டின் காடுகளிலும், வயல்களிலும், ஆலைகளிலும், அலுவலகங்களிலும் பாடுபட்டு உழைக்கும் சாமானிய மக்களிடம் அளித்த வாக்குறுதி அல்ல. ஜனநாயகத்திற்கு எதிரான தேர்தல் பத்திரங்கள் (electoral bonds) மூலம் ப.ஜ.க-வை பணக்கார கட்சியாக மாற்றிய பெரு முதலாளிகளுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும், “உங்கள் சொத்துக்கு ஒன்னும் ஆகாது. இந்த நாட்டு மக்களையும் வளங்களையும் மொத்தமாக சுரண்டிக் கொடுத்தாவது அதை நாங்கள் பாதுகாத்துத் தருவோம்!” என்று கூறாமல் கூறியிருக்கிறார் அமைச்சர் அவர்கள். இவ்வாறு, சுரண்டுபவர்களே அஞ்சும் அளவு இந்திய பொருளாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது; அரசு எவ்வளவு தான் மறைக்க நினைத்தாலும், ஒவ்வொரு நாளும் மக்களின்  அதி...

இந்தியாவை கலவரப் பூமியாக்கிய

படம்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்றால் என்ன? பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால், இந்த சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை GETTY IMAGES அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம். மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந...