வால்தெருவை கைப்பற்றுவோம் . போராட்ட ’கீதம்’
இடுகைகள்
அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
மாடி வீட்டு ஏழைகள்.?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தில்லியில் உள்ள அரசு குடியிருப்புகளில் அமைச்சர்கள், எம்பிக்கள் குடியிருந்த வகையில் ரூ. 63 லட்சம் வாடகைப்பாக்கி கட்டாமல் உள்ளதாக தகவல் அறியும் உரிமை ச்சட்டத் தகவல் தெரி விக்கிறது. இந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர் , ஜி. வெங்கடசாமி, ஜெகன்மோகன் ரெட்டி முக்கியமான வர்கள். காங்கிரஸ் எம்பியான ஜி. வெங்கடசாமி 29.4 லட்சம்,ஜெகதீஷ் டைட்லர் 19.1 லட்சம், பாஜக முன்னாள் எம்பி சங்கீதா குமாரி சிங் தேவ் 7.39 லட்சம், ஜெகன்மோகன் ரெட்டி 3 லட்சம், முன்னாள் எம்பி தேவவிரத சிங் 1.74 லட்சம், பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணலால் வால்மிகியின் தந்தை 1.83 லட்சம் வாடகைப்பாக்கி வைத்துள் ளனர். இவர்களைத் தவிர சமூக ஆர்வலர் எஸ்.சி. அகர்வால், தேசிய லோக தளம் கட்சி முன்னாள் எம்பி அஜய்சிங் சௌடாலா, காங்கிரஸ் முன்னாள் எம்பி கிரீஷ்குமார் சிங் ஆகியோர் மீது சட்டப்பூர்வமற்ற முறையில் அரசு குடியிருப்புகளில் குடியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் வாடகைப்பாக்கி இல்லையென தகவல் அறியும் சட்டம் கூறுகிறது. இது போன்ற செயலை அமைச்சர்கள் என்ர பெயரில் பதவி பெற்றவர்கள் செய்தது மிகக்கேவலமானது.முன்னாள் மக்களவை உறுப்பினர்களும்,சம
எடுத்துக்கோ,,எடுத்துக்கோ,,,,,
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சென்னையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவை, சென்னை உயர்நீதிமன்றம் 2006ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவினர் செய்த ஆய்வில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 48 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இந்த கட்டடங்களை இடிக்க, 2007ம் ஆண்டு கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால், இந்த நடவடிக்கை முடங்கியது. அவசர சட்டம் காலாவதியானதை அடுத்து, தற்போது, இந்த வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, இந்த கட்டடங்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப, கண்காணிப்பு குழு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதில், 36 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அறிவிப்புஅனுப்பினர். இதையடுத்து, இந்த வணிக வளாகங்களை சீல் வைக்கும் நடவடிக்கையை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த மாதம் வரை நடவடிக்கை எடுக்காததால், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின் வாரியம் உள்ளிட்ட துறைகளின்
அணு உலை ஆபத்து.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கூடங்குளம் அணுமின் நிலையம் மின் உற்பத்தியை துவங்கும் நிலையில் அதன் பணிகளை திடீரென நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று அணுசக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கட்டமைப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கும் நிலையில் உள்ளது. ஆனால் இப்போது திடீரென கூடங்குளம் பகுதி மக்கள் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதியில் மக்கள் போராட்டம் துவக்கி பணியாளர்களை பணிக்கு செல்ல விடாமல் தடுத்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழகக் காவல்துறையினரும் பணியாளர்கள்,விஞ்ஞானிகளை பணிக்கு செல்ல வேண்டாம்.தங்களால் பாதுகாப்பு தர இயலாது என்றதால் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்து விட்டனர். மத்திய அரசோ தமிழக அரசிடம் பாதுகாப்பு வழங்கிடக் கோரியும் ஒன்றும் நடக்காததால் செய்வதரியாமல் தவிக்கிறது.ஆய்வுக்குழு அனுப்பி நிலமையை மதிப்பிட செய்து மக்களுக்கு விளக்கிக் கூற முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதிபீடுக் குழுவை ஏற்க மறுத்து விட்டனர். தற்போது சென்னையில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இந்
மக்களும்-போராட்டங்களூம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இன்னும் நான்கு நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடியாகிறது. உலக மக்கள் தொகையில், 10 முதல், 24 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை, 180 கோடி. உலகைப்பொறுத்தவரையில் இந்தியாவில் மக்கள் பிறப்புவிகிதம் அதிகம்.இந்தியாவிலோஉ.பி.யில் பிறப்பு விகிதம் அதிகம் என்பதால் 700வது கோடி குழந்தையின் பிறப்பை லக்னோவில் கொண்டாட உள்ளார்கள்.வரும் 31ம் தேதி 700கோடியை மக்கள் தொகை தொடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால் அன்றே விழா கொண்டாடப்படும். _______________________________________________________ கனடா டொரன்டோவில் ‘பொங்கு தமிழ்’விழா! பொங்கு தமிழ் என்று சங்கே முழங்கு! கனடியத் தமிழர்களால் நிகழ்த்தப்படும் மூன்றாவது பொங்கு தமிழுக்கான இறுதி ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடிய நகரங்கள் எங்கும் பொங்கு தமிழ் பற்றிய செய்திகள் பரவலாகி களைகட்டியுள்ளது. சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரே இங்குள்ள பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் பொங்கு தமிழை எழுச்சியூட்டும் சுவரொட்டிகள் அலங்கரித்திருந்தன. காலமும் நேரமும் இதில் தெரிவிக்
அணு [கூடங்] குளம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
0 கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னை தொடர்பாக பல்வேறு அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு. உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அமைப்புகளோடு கிறிஸ்தவ பாதிரியார்களையும் சந்தித்துள்ளார் பிரதமர்.கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையைத் தவிர மற்ற கிராமங்களில் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் இடிந்தகரையில் மட்டும் எதிர்ப்பு? அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகுஎன்ற கேள்வ்க்கு” இதற்கு பின்னணியில் கிறிஸ்தவ அமைப்புகள் இருப்பதாக” உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. இதனால் சமீபத்தில் ஆர்ச் பிஷப்பை சந்தித்தார் பிரதமர். விரைவில் திருச்சியில் பாதிரியார்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, கூடங்குளம் விவகாரம் தொடர்பாக பாதிரியார்களோடு பேச, ஒரு மத்திய அமைச்சர் திருச்சி வந்து பாதிரியார்களுடன் பேச உள்ளார். ஆர்ச் பிஷப்பிற்கு கூடங்குளம் விவகாரத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாத நிலையில், ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை தூண்டிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. எப்படியாவது இந்த பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என, பாதிரியார்களிடம் அந்த அமைச்சர் வேண்டுகோள் விடுப்பார் என தெரிகிறது. _____
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சீன படை ஊடுறுவல். இந்தியப்பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்த தீவுகள், தென்கிழக்காசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியாவில் அதிகமான தீவுக்கூட்டங்ளை கொண்டுள்ள அந்தமானில் நிறைய தீவுகள் மக்கள் வசிக்காத இடங்களாக இருப்பதால், அந்தமான் மீது சீனாவுக்கு அதிகமான ஆர்வம். மேலும் இந்தியாவிற்கு ஏதாவது ஆபத்தை விளைவிக்க வேண்டுமென்றால் அந்தமானை கடந்துதான் செல்லவேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை கப்பல் ஒன்று இங்கு உளவு பார்த்த சம்பவம் மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், தனது தவறை தாமதமாக உணர்த்தியும் உள்ளது. தற்பொழுது தனது பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் தற்போது இந்தியா இறங்கியுள்ளதையடுத்து அங்கு 6 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர். இது தற்போது அங்கிருக்கும் வீரர்களை விட 3 மடங்கு அதிகம். மேலும் ஒரு டஜன் போர் விமானங்களும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதுகுறித்து இந்திய ராணுவ பிரிகேடியர் பல்விந்தர் சிங் கூறுகையில், அந்தமான் தீவுக்கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன. இவற்ற