திருடனுக்கு நன்றி சொல்லும் காவலாளி.
பி ரதமர் மோதியின் ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து # mainbhichowkidar (நானும் காவலன்) ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து, ஏழ்மையிலிருந்து, அழுக்கிலிருந்து, ஊழலில் இருந்து காப்பாற்ற மேலே சொன்ன ஹாஷ்டாகுடன் நாம் டிவிட்டரில் பதிவுசெய்ய வேண்டுமாம். இந்த ஹாஷ்டாகுடன் பலரும் (பெரும்பாலும் ஐ.டி. விங் ஆட்கள்தான்) பிரதமரின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டை tag செய்து காலை முதல் டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர். பிற்பகலுக்கு மேல் யாருக்கு அந்த யோசனை தோன்றியதெனத் தெரியவில்லை. யாரெல்லாம் அந்த ஹாஷ்டாகுடன், பிரதமரை Tag செய்கிறார்களோ அவர்களுக்கு தானியங்கி முறையில், “your participation makes the #mainbhiChowkidar movement stronger” என பதில் அனுப்ப முடிவுசெய்தனர். ஆனால், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர்கள் கற்பனைகூட செய்திருக்கவில்லை. உடனடியாக நாட்டைவிட்டு ஓடிப்போன நீரவ் மோடியின் கற்பனை அக்கவுண்டிலிருந்து (கேலிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட அக்கவுண்ட்) மோடியின் அக்கவுண்டை tag செய்து #mainbhichowkidar என்ற ஹாஷ்டாகுடன் எதையோ எழுதிவைக்க, அதற்கும் மேலேபடி பிரதமரின் ...