வாயை அடைக்க...

 ஒருநாள்முன்னதாகவேதமிழ்நாட்டில்வடகிழக்கு பருவமழை தொடங்கியது.தேஜ் புயல் மிகத் தீவிரமாகும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ககன்யான் முதற்கட்ட சோதனை வெற்றி. ஆய்வாளர்கள் அமரும் பகுதி மட்டும் தனியாக பிரிந்து பாராசூட் மூலம் வங்கக் கடலில் இறங்கியது, 

சாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்திட  வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பாஜக ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது என கடும் விமர்சனம் 

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது -ஆரம்பகட்டத்தின் தாக்கம் லேசானதாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

"நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர, ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல" - எழுந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் 

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை - பொதுமக்கள் சொந்த ஊர் திரும்பியதால் சென்னை புறநகர் பகுதியில் பல கிலோமீட்டர் அணிவகுத்து நின்ற வாகனங்கள் 

பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்

தொடர் விடுமுறையை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்த 102 ஆம்னி பஸ்கள் பறிமுதல் -  ரூ.27.67 லட்சம் அபராதம் விதிப்பு .

நீட் விலக்கு ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்னை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு 

அரவக்குறிச்சி அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து - மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் எரிந்து நாசம் 

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் -  முதற்கட்டமாக 33 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு 

ஊழல்களை மறைக்க அதிகாரிகளின் வாயை அடைக்க பாஜக அரசு முயல்கிறது - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு 

கேரளாவில்ஆட்டோடிரைவர்குப்பைத்தொட்டியில் வீசிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு .

இனி இஸ்ரேலுக்கு இல்லை!


இஸ்ரேல்-காசா பகுதியில் அமைதி திரும்பும் வரை, இஸ்ரேலிடம் இருந்து எந்த புதிய ஆர்டர்களையும் பெறமாட்டோம் என அறிவித்துள்ளது 


இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடை தைத்துக் கொடுக்கும் நிறுவனம் ஒன்று.   இஸ்ரேல்-காசா இடையிலான போரை கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள கூத்துப்பரம்பு உணர்ந்துள்ளது. 

கூத்துப்பரம்பு பேரூராட்சிக்குட்பட்ட வலிய வெளிச் சத்தில் உள்ள கின்ஃப்ரா பார்க் தோட்டத்தில் உள்ள மரியன் அப்பேர ல்ஸ் ஆடைகள் தயாரித்து வழங்கும் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேல் காவல்துறையினருக்கு சுமார் ஒரு லட்சம் சீருடை தைத்துக் கொடுப்பதைச் செய்து வருகிறது. 

  இஸ்ரேல் தவிர, பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார் மற்றும் சவூதி அரே பியா போன்ற பல்வேறு வெளிநாடு களில் உள்ள காவல்துறை, தீய ணைப்பு படை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சீருடைகளை நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

  இஸ்ரேலுக்கு கடந்த எட்டாண்டு களாக இப்பணியில் ஈடுபட்டுள்ளது தற்போது ஏற்பட்டுள்ள போரால் இஸ்ரேல்-காசா பகுதியில் அமைதி திரும்பும் வரை, இஸ்ரேலிடம் இருந்து எந்த புதிய ஆர்டர்களையும் பெறமாட்டோம் என அறிவித்துள்ளது. 


இதுகுறித்து மரியன் அப்பேரல்ஸ் மேலாண் இயக்குநர் தாமஸ் ஒலிக்கல்  கூறியதாவது:  இஸ்ரேல் சண்டையால்  குழந்தை கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் வரை இனி இஸ்ரேலிடமி ருந்து எந்த புதிய ஆர்டர்களையும் பெற மாட்டோம்.  இது மனிதநேயத்தின் அடிப்படை யில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு. 

இஸ்ரேல்-காசா போர் உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. நாங்கள் பொரு ளாதார ரீதியாக மோசமாக பாதிக்கப் பட்டாலும் கூட ஒற்றுமையை வலுப்படுத்த, வெளிப்படுத்த இதன் மூலம் முடிவு செய்துள்ளோம் என்றார். இந்தாண்டு சுமார் ஒரு லட்சம் சீருடைகளை அனுப்புவதற்கான ஒப்புதலை நாங்கள் இஸ்ரேலிய ஏஜென்சி ஒன்றிடமிருந்து பெற்றோம். 

அது சீருடைகளைப் பெற்று இஸ்ரே லிய காவல்துறையிடம் ஒப்படைக் கும்.  போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே எங்களுக்கு பணி ஆணை கிடைத்தது. தற்போது தயாரித்துள்ள சீருடைகளை அனுப்பிவிடுவோம். இந்தப் பணி டிசம்பருக்குள் நிறைவு பெறும். தொடர்ந்து போர் முடியும் வரை நாங்கள் புதிய ஆர்டர்களைப் பெறமாட்டோம். 

இது தொடர்பான எங்கள் முடிவை நாங்கள் ஏஜென்சி க்கு தெரிவித்துள்ளோம் என்றார் மரியன் அப்பேரல்ஸ் மேலாளர் ஷிஜின் குமார்.  

தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ்  கேரள நிறுவனத்தின் முடிவை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “குண்டுவெடிப்பு காரணமாக மருத்துவமனைகளில் கூட பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ள தால், தார்மீக அடிப்படையில் இஸ்ரே லின் அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது” என்று அமைச்சர் கூறினார். 

இந் நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்க ளில் 95 சதவீதம் பேர் உள்ளூர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

----------------------------------------------ர

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?