தேர்தல் முடிவுகள்.

 முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதற்கு, நீதிமன்ற ஆணைபடி பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன் வருத்தம் தெரிவித்த அதிமுக கள்ளகுறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு.

4வது நாளாக கடும்மோதல்.. பலி எண்ணிக்கை 1,500ஆக உயர்வு. மக்களை தாக்கினால் பணைய கைதிகளை கொல்வோம் என இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை.

அரியலூர் அருகே தொழிற்சாலையில். நாட்டு வெடிகள் வெடித்து பயங்கர விபத்து  12 தொழிலாளர்கள் பலி.12 பேர் படுகாயம்.

ராஜஸ்தான், தெலங்கானா, மபி, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு.நவ. 7 - 30 வரை வாக்குப்பதிவு.டிச. 3ம் தேதி ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

"லடாக் " தேர்தல் முடிவுகள்.

லடாக் கார்கிலில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நடந்த தேர்தலில் 77.61 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. அதாவது, 74,026 வாக்காளர்கள் தங்களின் வாக்கினை செலுத்தி இருந்தனர். இதுகுறித்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 

இந்நிலையில் லடாக் தன்னாட்சி கவுன்சில் - கார்கில் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. தேர்தல் நடத்தப்பட்ட 26 இடங்களில் 22 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு,  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்படும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கும் காங்கிரஸ் 10 இடங்களிலும் தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாஜக வெற்றிபெற்ற 2 இடங்களில் ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்த இடத்திலும், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் பாஜக அதிலும் தோல்வியை சந்தித்திருக்கும்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்தது. அதேபோல, கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை முன்னிலைப்படுத்தி பாஜக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது.

பாஜகவின் அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்"

தேர்தல் வெற்றி குறித்து பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா, "ஜம்மு காஷ்மீரை பிரித்து, அரசியலமைப்பு உறுதி செய்த சிறப்பு அந்தஸ்தை பறித்த பாஜகவின் அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, நடந்ததற்கு கார்கில் மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. உடன்படவில்லை" என்றார்.

லடாக்கிற்கு முழு மாநில அந்தஸ்தை வேண்டியும் அதன் கலாசாரம், நிலம், சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரியும் அங்கு இருக்கும் சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து கார்கில் ஜனநாயக கூட்டணியை அமைந்திருந்தனர். இவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்து. 

--------------------------------------------------

இந்திய பொருளாதார உண்மை நிலை!

ஒன்றிய-மாநில அரசு ஊழி யர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தி, தலை நகர் புதுதில்லியில் திரண்டார்கள். 

இந்த மாபெரும் பேரணியானது ஏதோ ஒரு வழக்கமான - சாதாரண நிகழ்வு என்கிற விதத்தில் ஊடகங்களால் மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது. இதன் பின்னே ஒளிந்துள்ள, நாட்டை  மிகவும் ஆழமான விதத்தில் பாதித்துள்ள பொருளா தார மந்தநிலையின் பிரதிபலிப்பை அவை மூடி மறைத்தன.

ஓய்வூதியம்:  பற்றியெரியும் பிரச்சனை

பழைய ஓய்வூதியத்தின்படி ஓர் ஊழியர் ஓய்வு பெறும் சமயத்தில், தான் கடைசியாகப் பெற்ற ஊதி யத்தில் 50 விழுக்காட்டுத் தொகையை ஓய்வூதிய மாகப் பெற்றுவந்தார். இந்தத் தொகையும் ஒவ்வோ ராண்டும் உயரும் பணவீக்கத்திற்கு ஏற்ப சரி செய்யப் பட்டு வந்தது. 

மாறாக, புதிய ஓய்வூதியத் திட்டம், ஓய்வு பெறும் ஊழியருக்கு, அவர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பெற்றுவந்த தொகையில் பாதி அள விற்கும் கீழாகவே அளிக்கிறது. இப்போதுள்ள சட்டத்தின் படி 2004-க்குப்பின் பணியில் சேர்ந்த ஒருவர், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படியே ஓய்வூதியம் பெறுவார். விலைவாசிகள் கடுமையாக உயர்ந்தும், வரு மானங்கள் குறைந்தும் உள்ள இன்றைய நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பிரச்சனை வர விருக்கும் தேர்தல்களில் கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஓர் எரியும் பிரச்சனையாக மாறி யிருக்கிறது. 

நடுத்தர வர்க்கத்தினர் கூட தங்கள் வாழ்வா தாரங்களைச் சந்திக்க முடியாமல் திணறிக்கொண்டி ருக்கிறார்கள். புதிய ஓய்வூதியத் திட்டம் நாடாளு மன்றத்தில் கொண்டுவரப்பட்ட சமயத்தில், ‘ஓய்வூதி யம் என்பது தொழிலாளியின் உரிமை, அது ஒன்றும் இனாம் அல்ல’ என்ற கொள்கை நிலைப்பாட்டில் உறுதி யாக நின்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை எதிர்த்தது.

 நாம் எதிர்த்ததற்கான காரணங்கள் இன்றைய தினம் மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வாங்கும் சக்தி வீழ்ச்சி

மக்களின் உண்மையான வருமானம் சுருங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக, அவர்கள் வாழ்நிலை மிகவும் பரிதாபமாக மாறிக்கொண்டிருப்பதுடன், நாட்டின் பொருளாதார நலனையும் கடுமையாகப் பாதித் திருக்கிறது. 

மக்களின் கைகளில் வாங்கும் சக்தி  குறைந்திருப்பதன் விளைவாக, உள்நாட்டில் உற்பத்திப் பொருட்களுக்கான கிராக்கியும் தேவை யும் குறைந்துவிட்டது. இதனால் முதலீடுகளும் குறைந்துவிட்டன. ஏனெனில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் விற்பனையானால்தான் முதலீடுகள் வளரும், வளர்ச்சியும் பெருகிடும். 

முதலீடுகளுக்குத் தேவை ஏற்படவில்லை என்றால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட முடியாது. இது, இன்றைய இந்தியப் பொருளாதாரத்தைப் பீடித்திருக்கும் அடிப்படைப் பிரச்சனையாகும். மோடி அரசாங்கத்தின் கீழ் மதவெறியர்கள்-கார்ப்பரேட்டுகள் இடையே ஏற்பட்டுள்ள கள்ளப் பிணைப்பு காரணமாக, நாடு உற்பத்தி செய்திடும் செல்வத்தில் பெரும்பகுதி மோடி அரசாங்கத்தின் கூட்டுக் களவாணிகளால் வசப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அதானி விவகாரம் இதற்கு மிகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும். பெரும்பான்மை நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து, ஒருசில கூட்டுக்  களவாணி கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கக் கூடிய விதத்தில் நாட்டின் செல்வம் திருப்பிவிடப் படுகிறது. 

மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், பணக்காரர்களுக்கு ஒளிபொருந்திய இந்தியாவையும், ஏழைகளுக்கு துன்ப துய ரங்களையும் அளிக்கக்கூடிய இந்தியாவையும் என இரு வித இந்தியாவை உருவாக்கும் செயல்முறையை  மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

கசப்பான உண்மை இது தான்

ஆனாலும், மோடி ஆதரவு ஊடகங்கள் இந்தியா,  உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றா வது பெரிய பொருளாதார நாடாக மாறிக்கொண்டிருப்ப தாகவும், மறுமலர்ச்சி இந்தியாவை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் இடைவிடாமல் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன.

 நாட்டை யார் ஆட்சி செய்தாலும், 2027-இல்  இந்தியா தற்போதுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்ப டையில் உலகில் மூன்றாவது நாடாக இருந்திடும். ஆனாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில்; தனிநபர் வருமானத்தில் இந்தியா உலகில் 142-ஆவது இடத்தில் இருக்கிறது என்கிற கசப்பான உண்மையையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். 

சமீபத்தில் நடைபெற்ற ஜி.20 உச்சிமாநாடு, இந்தியாவை வளர்ந்துவரும் பொருளாதார சக்தியாக முன்னிறுத்தப் பயன்பட்டது. எனினும் உண்மை நிலை  என்ன? 

வந்திருந்த ஜி.20 நாடுகளிலேயே இந்தியா தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த தனிநபர் வருமானத்தைப் பெற்றிருந்தது. மனித வள வளர்ச்சிக் குறியீடுகளிலும் (human develop ment indices) இதே நிலைதான். மேலும் பொருளா தாரத்தில் மிகக்குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தையும் பெற்றிருக்கிறோம்.

 இதன் பொருள், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது என்பதாகும்.

முதலீடுகள் கடும் வீழ்ச்சி

இதனால் மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சி யடைந்து ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் (macro economy) பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

 கடந்த ஏழு ஆண்டுகளாக அரசாங்கம் முதலீடுகள் செய்வதில் 72.5 விழுக்காட்டிற்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. இதேபோன்றே தனியார் நிறு வனங்களும் முதலீடுகள் செய்வதில் 79.2 விழுக்காடு அளவிற்குக் குறைந்திருக்கின்றன.

படுதோல்வி அடைந்த ‘மேக் இன் இந்தியா’

கடந்த பத்தாண்டுகளில் ‘‘இந்தியாவில் உற்பத்தி’’ (‘‘Make in India’’) மகத்தான வெற்றி எனப் பெரிய அள வில் கூப்பாடு போடப்படுகிறது. ஆனால், உண்மை நிலை என்ன? 2013-14-க்குப்பின் பொருள்களின் வளர்ச்சி (manufacturing growth) சராசரி என்பது 5.9 விழுக்காடு ஆகும்.


 இது, இதுதொடர்பான 12-14 விழுக்காடு இலக்குடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. உற்பத்தியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் பங்கு 16.4 விழுக்காட்டைச் சுற்றியே தொடர்ந்து தேக்கநிலையில் இருந்து வருகிறது.

 உண்மையில் இதன் இலக்கு என்பதும் 25 விழுக்காடாகும். உற்பத்திப் பிரிவுகளில் வேலைகள் (jobs in the manufacturing sector) 2011-12க்கும் 2021-22க்கும் இடையே 12.6 விழுக் காட்டிலிருந்து 11.6 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.  இந்தப் பின்னணியில்தான் மோடி, செங்கோட்டை யில் நின்று இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விஸ்வகர்மா திட்டங்களை (குலத்தொழில்கள் செய்வதற்கான திட்டங்களை), 13,000 கோடி - 15,000 கோடி ரூபாய்களில் பெரும் ஆரவாரத்துடன் அறி வித்திருக்கிறார். 

எனினும் இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் என்ன அறிவிக்கப்பட்டது என்றால், 13  ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அடுத்த ஐந்தாண்டு காலத்தில் ஐந்து விழுக்காடு வட்டி விகிதத்தில் கடன்கள் கொடுக்கப்படும் என்பதேயாகும். ‘மைனஸ் வளர்ச்சி’ கிராமப்புற ஏழை மக்களின் வாழ்நிலை மிகமிக  மோசமாகி இருக்கிறது. 

இதனால்தான் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்  திட்டத்தின்கீழ் வேலை செய்வதற்காக வருவோர் எண்ணிக்கை சென்ற ஆண்டு 16.3 விழுக்காடு அதி கரித்து, பின்னர் 2019-20-இல் 29.4 விழுக்காடாக அதி கரித்திருக்கிறது. 2022-23-ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை உண்மை ஊதியங்களில் எதிர்மறை வளர்ச்சியைத் தெரிவித்திருக்கிறது.

ஏற்றுமதி வீழ்ச்சியின்  பொருள் என்ன?

இவை அனைத்தும் பொருளாதார நடவடிக்கை கள் சுருங்கி இருப்பதையே காட்டுகின்றன. தொழிலாளர் களின் உழைப்பில் உருவாகும் ஆடைகள், கடல் பொருட் கள், பிளாஸ்டிக், ரத்தினங்கள், நகைகள் போன்ற வற்றின் ஏற்றுமதிகள் பெரிதும் வீழ்ச்சி அடைந்திருப்ப தில் இது பிரதிபலிக்கிறது.

 உலகச் சந்தையில் இந்தி யாவின் பங்கு மிகவும் கூர்மையாக வீழ்ச்சியடைந்திருக் கிறது. இதன் பொருள், இந்தத் துறைகளில் உள்நாட்டில் வேலைகள் கூர்மையாக வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதேயாகும். இவற்றின் விளைவு, வேலையின்மை விகிதம் 2023  ஆகஸ்டில் 8.1 விழுக்காடாக இருந்தது. 

15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடையிலான இளைஞர்களின் வேலை யின்மை 2022இல் 23.22 விழுக்காடாகும். பட்டதாரி களில் இது 42 விழுக்காடாகும். 2023 ஆகஸ்டில் சுமார்  2 கோடி குடும்பங்கள் வேலை கோரி, மகாத்மா காந்தி  தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். 

இதுதான் மோடி  மக்களுக்கு அளித்துள்ளவைகளாகும்.

விலைவாசி உயர்வும்  கடும் விளைவுகளும்

இவ்வாறான வேலையில்லாத் திண்டாட்டத்துடன் விலைவாசிகளும் உயர்ந்து கொண்டிருக்கின்றன. பணவீக்கம், இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ள வரம்பான 6 விழுக்காட்டைத் தாண்டியும் உயர்ந்திருக் கிறது. இவ்வாறான பணவீக்கம், உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை யும் கடுமையான உயர்த்தியிருக்கின்றன. 

இவ்வாறாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விழுக்காடு,  2020-21இல் 15.4 ஆக இருந்தது, 2022-23இல் 10.9ஆக சரிந்ததால், குடும்பங்களின் நிதிநிலைமைகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது- மக்கள் தாங்கள் ஜீவித் திருப்பதற்காக, தங்கள் வீடுகளில் உள்ள குடும்ப சொத்துக்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறு குடும்பங்களின் சொத்துக்கள் 11.5 விழுக் காட்டிலிருந்து 5.1 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. மக்களின் வருமானங்கள் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி பொருள்கள் வளர்ச்சியில் வீழ்ச்சி (decline in manu facturing growth) என அனைத்தும்  சேர்ந்து ஓர் ஆழமான பொருளாதார வீழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

இப்போது என்ன தேவை? 

ஆட்சியாளர்கள் தங்களுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்க மும் அளித்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மாறாக, அரசாங்கம் தன் வளங்களை நாட்டுக்கு மிகவும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்புவதற்கு பொது முதலீடுகளில் பயன்படுத்தி, அவற்றின்மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் உள்நாட்டு கிராக்கியின் அளவுகளை உயர்த்தி, பொருளாதாரத்தில் நிலையான தன்மை யைக் கொண்டுவர வேண்டும். 

எனினும், அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் அடிமை யாகிப்போயுள்ள மோடி அரசாங்கம், அவர்கள் நாட்டின் சொத்துக்களை சூறையாடி, கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுத்து நிறுத்திட முன்வராது. எனவே இந்த நெருக்கடி மேலும் மோசமாகிடும்.

 இந்தியாவின் செல்வம் பாதுகாக்கப்பட வேண்டு மென்றால், அதனைப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் காகவும், மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும்,  பொது முதலீடுகளில் ஈடுபடுத்திட வேண்டும். இதற்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜக அகற்றப்படுவது அவசியம்.

(பீப்பில் டெமாக்ரசி,அக்டோபர் 4, 2023)  
தமிழில்: ச.வீரமணி




 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?