அடுத்த ஆடு?

தவெக மாநாட்டு மேடையில் கூட எம்.ஜி.ஆர். குறித்து பெருமையாகப் பேசினார் விஜய். ஆனால், கடந்த 24.12.2024 அன்று எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தவில்லை விஜய். ஆனால் அன்றைய தினம் தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தனது பனையூர் இல்லத்தில் பெரியாரின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார் விஜய். எம்.ஜி.ஆர். நினைவுநாளில் மரியாதை செலுத்தவில்லை நடிகர் விஜய் . அதே நேரம் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மூத்த தலைவர். அய்யா நல்லகண்ணுவின் 100ஆவது ஆண்டு பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வது பற்றி கேள்வி எழுந்தபோது, அது அவரின் கூட்டணி அரசியல் கணக்கு என்று சொல்கிறார்கள். தான் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு படம் தோல்விப்படமாக அமைந்ததால், அப்போது உச்சத்தில் இருந்த விஜயகாந்துடன் தன் மகன் நடித்தால் பிரபலமடைந்துவிடுவார் என்று நினைத்த எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்திடம் கேட்க, அவரும் சம்மதித்து நடித்துக் கொடுத்தார். அப்படிப்பட்ட விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுடன் ஒரு படத்தில் நடித்துக்கொடுக்கும்படி அக்குடும்பத்தினர் கேட்டும் விஜய் சம்மதம்தெ...