நட்பை இழக்காதீர்!

 EVM & VVPAT முறைகேடுகள் மற்றும் வாக்குப்பெட்டியில் வாக்களிக்கக் கோரும் வீடியோ ஆதாரத்துடன் ட்விட்டரில் பரவும் வீடியோக்கள் மற்றும் ட்வீட்களை உடனடியாகத் தடை செய்யுமாறு இந்திய அரசு Twitter (X) க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொங்கல் சிறப்பு பேருந்துகளின் மூலம் நேற்று ஒரேநாளில் 2.17 லட்சம் பேர் பயணம்.

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை!

மகாராஷ்டிராவில்12 கோடி ரூபாய் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்: 7 பேர் கைது.

இந்த ஆண்டில் 4 கிரகணங்கள் தோன்றும்: வானியல் அறிஞர்கள் தகவல்.

மங்கோலியாவில் காரில் நெடுஞ்சாலையில் சென்றபோது பனிக்குவியலில் கார் சிக்கியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மேற்கு வங்க நகரங்கள்!

நட்பு நாடுகளை இழப்பது
பாதுகாப்புக்கு தீது.


மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஐந்து நாட்கள் சீனப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு உட்பட 20 முக்கிய ஒப்பந்தங்களில் மாலத்தீவும், சீனாவும் கையெழுத்திட்டிருப்பதாக விபரங்கள் வந்துள் ளன. 


மாலத்தீவு ஜனாதிபதிக்கு 21 குண்டுகள் முழங்க, சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள் ளது சீன அரசு. 

மாலத்தீவு, இந்தியப் பெருங்கடலில் அமைந் துள்ள ஒரு சின்னஞ்சிறிய நாடு. 

ஆனால் அதை ஒரு சிறிய நாடு தானே என்று கருதாமல், தனக்கு இணையான - ஓர் இறையாண்மை மிக்க நாடு என்ற மரியாதையை சீனா அளித்திருக்கிறது.

 இந்த இடத்தில்தான் சீனா வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத் தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது பயணத்தை மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் விமர்சித்தார்கள். 

அது முற்றிலும் கண்டிக் கத்தக்கது. இந்திய பிரதமர், இந்தியாவின் லட்சத்தீவிற்கு சென்றதை விமர்சிக்க வேறொரு நாடான மாலத்தீவின் அமைச்சர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. 

இந்த பின்னணியில் அந்த மூவரையும் அந்நாட்டு ஜனாதிபதி, அமைச் சரவையிலிருந்து இடைநீக்கம் செய்தார். அந்த உடனடி நடவடிக்கை பாராட்டத்தக்கது.

அதேவேளையில், சமீப காலமாக இந்தியா வுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் கசப்பானதாக மாறி; மிக மிக நெருக்க மான அண்டை நாடான மாலத்தீவு இந்தியாவின் செல்வாக்கு வட்டத்திலிருந்து வெளியேறிச் செல்லும் அளவிற்குச் சென்றுள்ளது.

 இதற்கு முற்றிலும், மோடி தலைமையிலான அரசின் தெற்காசிய பிராந்தியத்திற்கு விரோதமான வெளியுறவுக் கொள்கையே காரணம்.

மாலத்தீவுகள், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ் தான் ஆகிய மிக மிக நெருக்கமான அண்டை நாடுகளோடு, மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த சில ஆண்டுகளாக நல்லுறவை விட கசப்புகளே அதிகரித்துள்ளன. 

இந்த நாடுகள் அனைத்திலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்கா மிகப் பெரிய அள விற்கு செல்வாக்கு செலுத்தியது.

 கடந்த ஓரிரு ஆண்டுகளில் அந்த செல்வாக்கு சற்று திசை மாறி, சீனாவை நோக்கித் திரும்பியுள்ளது. 

அதற்கு முக்கியமான காரணம், மிகவும் பின் தங்கியுள்ள, இந்த நாடுகளோடு, “பெல்ட் அண்டு ரோடு” எனப்படும் உலகளாவிய வர்த்தக சுற்றுப் பாதை திட்டத்துடன் சீனா வர்த்தக உறவை - அதன் மூலம் அந்த நாடுகளின் கட்டமைப்பு வச திக்கு உதவிகளை மேற்கொண்டிருப்பதுதான். இதில் இணையாத ஒரே தெற்காசிய நாடு இந்தியா மட்டுமே.

 அமெரிக்காவின் பங்காளியா கச் செயல்படும் இந்தியாவால் தங்களுக்கு பலன் இல்லை என்பதே அண்டை நாடுகள் விலகிச் செல்ல காரணம். நண்பர்களை இழந்துவிட்டு என்ன செய்யப் போகிறது இந்தியா?

-------------------------------------------

கெடுப்பதுவும்

மழைப் பருவம் சரியாக இருந்தால், அதாவது நேரத்துக்கு மழை பெய்து, முறையாக வெயில் அடித்து, நீர் பாய்ச்சலும், அதன் பின் காய்ச்சலும் முறையாக அமைந்தால் இப்பகுதிகளில் விவசாயம் செழித்து விளங்கும். 

ஆனால், அவ்வப்போது முறையற்று பெய்யும் மழை, இப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது.

கடலூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அரசின் இலக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 26 ஹெக்டேராக இருந்தது. இதில், காவிரி டெல்டா பகுதிகளில் 47 ஆயிரத்து 477 ஹெக்டேரும், மாவட்டத்தில் டெல்டா அல்லாத பகுதியில் 45 ஆயிரத்து 176 ஹெக்டேரும் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பும் செய்திருந்தனர்.

நீர்வரத்து குறைவால், சென்ற ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால், கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டனர். 

தொடர்ந்து வடக்குராஜன் வாய்க்கால் மற்றும் வீராணம் ஏரி கிளை வாய்க்கால்களில் வந்த குறைந்தளவு தண்ணீரை ஒரு மணிக்கு ரூ. 200 கொடுத்து, மின் மோட்டார் மூலம் பாசனம் செய்து பயிரை காப்பாற்றினர். 

அவ்வப்போது பெய்த சிறு மழையால் பயிர்கள் வளர்ந்தன.
இடையே திடீர் திடீரென மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக இருந்த நேரத்தில் பயிர்களில் நோய் தாக்குதல் அதிகம் காணப்பட்டது. 

வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய ஆலோசனை வழங்கி, அதை நடைமுறைப்படுத்தி பயிர்களை காப்பாற்றினர்.

இடையே அக்டோபரில் தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவ மழை நவம்பர் இறுதியில் பெய்தது. அதன்பின் மழை நின்று விட, டிசம்பர் இறுதியில் மீண்டும் பெய்ய, அதன்பின் அறுவடை நெருங்கும் நேரத்தில் ஜன. 7-ம் தேதி மழை அடித்து பெய்தது. சிதம்பரம் வட்டாரத்தில் அதிகபட்சமாக 22 செ.மீ மழை பதிவானது.

இந்த மழையால் காட்டு மன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. 

மொத்தமாக மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பாதிப்படைந்துள்ளது.
மேலும் சிதம்பரம் கிழக்கு பகுதியில் உள்ள தெற்கு பிச்சாவரம், கிள்ளை, பொன்னந்திட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி பகுதியில் மழை நின்று இருநாட்களுக்குப் பின்
சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்.
சில இடங்களில் கடந்த 3 நாட்களில் வெள்ள நீர் வெகுவாக வடிந்தாலும், குமராட்சி, குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும்?  “பருவம் தவறி மழை பெய்ததால் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரணநிதியில் இருந்து ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை சார்பில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு வந்து, முழு மானியத்தில் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அறுவடை செய்து தர வேண்டும், அறுவடை செய்த விவசாயிகளின் நெல்லை எந்த நிபந்தனையும் இன்றி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், 

தமிழக அரசு விவசாயிகளுக்கு முழு இன்சூரன்ஸ் தொகை பெற்று தர வேண்டும்” 

கடன் வாங்கி, ஆள் பற்றாக்குறையில் விவசாயம் செய்தோம். இந்த திடீர் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பா பயிரில் எங்களுக்கு மகசூல் கிடைக்காது.

அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கினால்தான் விவசாயிகள் ஓரளவுக்கு கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்” என்கிறார். 

பொங்கலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்து, பாதிப்பு குறித்து அரசிடம் அறிக்கை அளிக்க இருப்பதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?