வெறும் கையால் முழம்!

'ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?' - முதல்வர் ஸ்டாலின்.

அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட மொத்த நன்கொடையில் இது 70.69%-ஐ பாஜக பெற்றுள்ளது!

பொங்கல் பரிசு தொகுப்பு - நாளை முதல் டோக்கன் விநியோகம்!

தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ₹7000 கோடி கூடுதல் முதலீடு!

மேற்கு வங்கம் பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது!

தேடப்படும் குற்றவாளி தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் ரூ.2.3 கோடிக்கு ஏலம்.

பெரணமல்லூரில் விவசாயிகளை அவதூறாக பேசிய வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்.

வெறும் கையால் முழம்!

வைத்த கோரிக்­கை­கள் எதற்­கும் பதில் சொல்­லா­மல் --– கேட்ட தொகை எதை­யும் கொடுக்­கா­மல் –- வெறும் கையால் முழம் போட்டு –- வார்த்­தை­களால் வடை சுட்டு விட்­டுச் சென்று விட்­டார் இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி .

 திருச்­சி­யில் நடை­பெற்ற விழா­வில் பிர­த­மர் முன்­னி­லை­யில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் பல்­வேறு கோரிக்­கை­களை வைத்­தார்­கள். கடந்த மாதம் பெய்த மழையை ‘கடு­மை­யான இயற்­கைப் பேரி­டர்­கள்’ என்று அறி­வித்து, 

தேசிய பேரி­டர் நிவா­ரண நிதி­யில் இருந்து தமிழ்­நாட்­டுக்கு உரிய நிவா­ரண நிதியை வழங்க தமிழ்­நாட்டு மக்­கள் சார்­பாக கோரிக்கை வைத்­துள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

சென்­னை­யைச் சுற்­றிய மாவட்­டங்­க­ளில் மழை பெய்து வெள்­ளம் ஆக்­கி­யது டிசம்­பர் 3 ஆம் தேதி ஆகும். 

ஒரு மாதம் ஆகப் போகி­றது. தென் மாவட்­டங்­க­ளில் மழை பெய்து வெள்­ளம் ஆக்­கி­யது டிசம்­பர் 17,18 தேதி­கள் ஆகும். இரண்டு வாரங்­கள் முடிந்­து­விட்­டது.

சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் ஆகிய மாவட்­டங்­களில் சீர­மைப்பு மற்­றும் நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக தற்­கா­லிக நிவா­ர­ணத் தொகை­யாக 7033 கோடி ரூபா­யும், நிரந்­தர நிவா­ர­ணத் தொகை­யாக 12,659 கோடி ரூபா­யும் முத­ல­மைச்­சர் அவர்­கள் கோரி உள்­ளார்­கள்.

திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி, தென்­காசி மாவட்­டங்­க­ளில் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் இன்­னும் முழு­மை­யாக அள­வி­டப்­ப­ட­வில்லை. எனவே, அவ­சர நிவா­ரண நிதி­யாக ரூ.2 ஆயி­ரம் கோடி தர­வேண்­டும் என்­றும் முதல­மைச்­சர் அவர்­கள் பிர­த­ம­ரி­டம் கோரி­யுள்­ளார்­கள். 

ஆக மொத்­தம் 21 ஆயி­ரத்து 692 கோடி ரூபாய் தமிழ்­நாடு அர­சால் ஒன்­றிய அர­சி­டம் கேட்­கப்­பட்­டுள்­ளது. பிர­த­மர் அவர்­க­ளி­டம் டெல்லி சென்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் வைத்த கோரிக்கை இது. 

கடந்த டிசம்­பர் 19 ஆம் தேதி அன்று இந்த கோரிக்கை வைக்­கப்­பட்­டது. 

கோரிக்கை வைத்து இரண்டு வாரங்­கள் ஆகப் போகி­றது. ஒன்­றிய நிதி அமைச்­சர் இங்கு வந்து பார்த்­துச் சென்­றார். அவ­ரி­ட­மும் கோரிக்கை வைக்­கப்­பட்­டது. 

ஒன்­றி­யக் குழு மூன்று நாட்­கள் தங்கி ஆய்வை நடத்­தி­யது. அவர்­க­ளி­ட­மும் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்­தக் கோரிக்­கை­களை வைத்­தார்.

ஆனால் இது­வரை முத­லில் 450 கோடி ரூபா­யும், பின்­னர் 450 கோடி ரூபா­யும் ஒன்­றிய அர­சி­டம் இருந்து தரப்­பட்­டது. 

இது­வும் வழக்­க­மாக வரும் நிதி தானே தவிர, இப்­போது ஏற்­பட்ட புயல் --– மழை –- வெள்­ளச் சேதங்­க­ளில் இருந்து மீட்­கத் தரப்­பட்ட சிறப்பு நிதி அல்ல.

இயற்­கைப் பேரி­டர்­க­ளால் ஏற்­ப­டும் செல­வு­களை சமா­ளிப்­ப­தற்­காக ஒவ்­வொரு மாநி­லத்­திற்­கும் மாநி­லப் பேரி­டர் நிவா­ரண நிதி (SDRF) என்ற நிதி உள்­ளது.

 எந்­தெந்த மாநி­லத்­திற்குஇந்த நிதி எவ்­வ­ளவு என்­பதை ஐந்­தாண்டு காலத்­திற்கு ஒரு­முறை ஒன்­றிய அர­சால் நிய­மிக்­கப்­ப­டும் நிதிக் குழு (Finance Commission) தீர்­மா­னிக்­கி­றது.

 இதன்­படி, தமிழ்­நாட்­டி­னு­டைய SDRF-–க்கு ஒவ்­வொரு ஆண்­டும் ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்­காட்டை, அதா­வது 900 கோடி ரூபாயை ஒன்­றிய அரசு தர­வேண்­டும்.

 25 விழுக்­காட்டை, அதா­வது 300 கோடி ரூபாயை தமிழ்­நாடு அரசு ஏற்­றி­ட­வேண்­டும்.

ஒன்­றிய அர­சின் பங்­கா­னது ஆண்­டு­தோ­றும் இரு தவ­ணை­க­ளில் நமக்கு அளிக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்­கப்­ப­டும். 

அதில் இருந்து தான் இப்­போது நிதி கொடுத்­துள்­ளார்­கள். 

ஒரு இயற்­கைப் பேரி­ட­ரின் தாக்­கம் மிகக் கடு­மை­யாக இருக்­கும்­போது இந்த SDRF நிதி போத­வில்லை என்­றால், அந்த இயற்­கைப் பேரி­ட­ரைக் கடும் இயற்­கைப் பேரி­ட­ராக அறி­வித்து தேசி­யப் பேரி­டர் நிவா­ரண நிதி­யி­லி­ருந்து (NDRF) கூடு­தல் நிதி ஒதுக்­கப்­ப­டும்.

ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து நமக்கு வந்த 900 கோடி ரூபாய் நிதி என்­பது இந்த ஆண்டு நமது SDRF–-க்கு ஒன்­றிய அரசு அளிக்க வேண்­டிய தவணை தானே தவிர, கூடு­தல் நிதி அல்ல.

குஜ­ராத் மாநி­லத்­தில் வெள்­ளம் ஏற்­பட்­ட­தும், அன்­றைய தினமே அங்கு போய் பார்க்­கி­றார் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி. ஆனால் தமிழ்­நாட்­டுக்கு பார்க்க வர­வில்லை. 

ஒரு மாதம் கழித்து தமிழ்­நாட்­டுக்கு வருகை தரும் போதும் வெள்­ளம் பாதித்த பகுதி மக்­க­ளைப் போய் பார்க்­க­வில்லை.

 குஜ­ராத் மாநி­லத்­துக்­கான நிதியை வெள்­ளம் ஏற்­பட்ட அன்­றைய தினமே அறி­விக்­கி­றார். ஆனால் தமிழ்­நாடு ஒரு மாத கால­மாக தட்­டேந்தி நிற்­கி­றது. அது பிர­த­மர் கண்­ணுக்­குத் தெரி­ய­வில்லை.

ஒன்­றிய அர­சி­டம் பேரி­டர் நிவா­ர­ணத் தொகை­யாக 68 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி இருக்­கி­றது. அதில் இருந்து தான் கேட்­கி­றோம். கொடுக்க மன­மில்லை. 

அத­னால் அவர்­கள் கொடுக்­க­வில்லை.

ஆனால், ‘காங்­கி­ரஸ் ஆட்­சியை விட இரண்­டரை மடங்கு அதி­க­மாக பா.ஜ.க. அரசு தமிழ்­நாட்­டுக்கு நிதி கொடுத்­த­தாக’ திருச்சி கூட்­டத்­தில் பிர­த­மர் பேசி இருக்­கி­றார். 

ஒரே ஒரு திட்­டத்­துக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டதை மட்­டும் பார்ப்­போம். மெட்ரோ ரயில் திட்­டம் ஒன்­றிய அர­சின் சாத­னை­யா­கச் சொல்­லப்­ப­டு­கி­றது. 2018 முதல் 2023 வரைக்­கும் 6 ஆண்டு காலத்­தில் தமிழ்­நாட்­டின்மெட்ரோ ரயில் திட்­டத்­துக்­காக ஒன்­றிய அரசு ஒதுக்­கிய தொகை 3 ஆயி­ரத்து 273 கோடி ரூபாய்.

மற்ற மாநி­லங்­க­ளுக்கு பாருங்­கள்...

• மகா­ராஷ்­டிரா ரூ.28,493 கோடி

• கர்­நா­டகா ரூ.17,532 கோடி

•டெல்லி, உபி ரூ.16,189 கோடி

•டெல்லி, உபி, அரி­யானா ரூ.13,424 கோடி

•மேற்கு வங்­கம் ரூ.13,109 கோடி

•குஜ­ராத் ரூ.12,897 கோடி

• உ.பி. ரூ.11,565 கோடி.

இவற்­றை­யும் பாருங்­கள். 

தமிழ்­நாட்­டை­யும் பாருங்­கள். ஏன் அந்த மாநி­லங்­க­ளுக்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது என்று நாம் கேட்­க­வில்லை. 

தமிழ்­நாடு ஏன் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­றது என்று தான் கேட்­கி­றோம். பா.ஜ.க. வைத்­துள்ள வரை­ப­டத்­தில் தமிழ்­நாடு ஏன் இல்லை என்று தான் கேட்­கி­றோம்.

“பரந்து விரிந்த இந்­தி­யப் பெரு­நாட்­டில் கோடிக்­க­ணக்­கான மக்­க­ளுக்குநெருக்­க­மாக இருந்து, கல்வி – - மருத்­து­வம் –- அவ­சி­யத் தேவை­கள் –- உத­வி­கள்ஆகி­ய­வற்றை செய்து தர வேண்­டிய முக்­கி­யக் கடமை மாநில அர­சு­க­ளுக்­குத்­தான் இருக்­கி­றது. 

மாநி­லத்­திற்­காக கோரிக்கை வைப்­ப­தும் –- மாநில உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தும் அங்கு வாழும் மக்­க­ளின் கோரி­கை­கள்­தானே தவிர, அவை, ‘அர­சி­யல் முழக்­கங்­கள்’ அல்ல.” என்­ப­தை­யும் பிர­த­ம­ருக்கு முன்­னால் சொல்லி இருக்­கி­றார் முத­ல­மைச்­சர் அவர்­கள். இவை பிர­த­ம­ருக்கு புரி­யுமா எனத் தெரி­ய­வில்லை.

 வரு­கிற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமிழ்­நாட்டு மக்­கள் புரிய வைப்­பார்­கள் என்­பது தெரி­கி­றது.

-----------------------------------------------------

இந்தியாவின் கோயபெல்ஸ்

திருச்சியில் பிரதமர் கலந்துகொண்ட விழாவிலும் இதே கோரிக் கையை வலியுறுத்தினார். 

ஆனால் ஒன்றிய அரசு உரிய நிதியளிக்க மறுத்து சண்டித்தனம் செய்து வருகிறது.

 இரு தவணைகளாக அளிக்கப்பட்ட ரூ.900 கோடியும் ஏற்கனவே கொடுப்பதாக கூறிய நிதியே தவிர, பேரிடர் சிறப்பு நிதி அல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவ மதிக்கும் செயல் என்று  ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்த பின்னரும் ஒன்றிய அரசு திருந்தவில்லை.

 இதோடு நிற்கா மல், மாநில அரசுக்கு அதிகமான நிதி வழங்கி யது போன்று தவறான தகவல்களை பரப்பி வருகிறது.

 சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ கத்தில் இருந்து பெற்ற வரியை விட அதிக மான நிதியை ஒன்றிய அரசு வழங்குவதாக கூறியது எந்த அளவுக்கு வடிகட்டிய பொய் என்பதை தமிழக அரசு உடனடியாக அம்பலப் படுத்தியுள்ளது.

  “ஒன்றிய அரசு 2014 - 15ம் ஆண்டு முதல் 2022 - 23 ஆம் ஆண்டு வரை ரூ.4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கி யுள்ளது. இந்த ரூ.4.75 லட்சம் கோடியில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், ரூ.2.28 லட்சம் கோடி என்பது தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய மானியங்கள் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் வழங் கப்பட்டவைதான்.

அதேநேரத்தில் நேரடி வரிவருவாயாக தமிழ கத்தில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி ஒன்றிய அரசு பெற்றுள்ளது. 

இதில் எவ்வளவு தொகை மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கொடுத்துள்ளது என்று கேட்டால் பாஜக அரசு பதிலளிக்க மறுக்கி றது. தமிழகத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் அங்கிருந்து தமிழகத்துக்கு கிடைப்பது வெறும் 29 பைசா தான்.

 ஆனால், பாஜக ஆளும் மாநிலங்கள் குறை வாக வரிவசூலித்துக் கொடுத்தாலும் திரும்ப அளிக்கப்படும் நிதி அதிகமாக உள்ளது.

12-வது நிதிக் குழு மத்திய வரியில் இருந்து தமிழகத்துக்கு 5.30விழுக்காடு வரி பகிர்வாக வழங்கியது. தற்போது இது 4.079 விழுக்கா டாக  குறைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கொடுக்க  வேண்டிய உரிய நிதி வரவில்லை என்பதற்கு இதைவிட விளக்கமும் விபரமும் தேவை யில்லை.

 இதன் பின்னரும் ஒன்றிய நிதியமைச்சர் உளறிக் கொட்டுவதை நிறுத்தினால் நல்லது. இல்லை என்றால் இந்தியாவின் கோயபெல்ஸ்  என்ற பட்டம் தான் அவருக்கு கிடைக்கும்.

•---------------------------------------------- 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?