சுயபுத்தி" இனி கேள்விக்குறி

 சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 40 சுங்கத் துறை அதிகாரிகள் இடமாற்றம்.

கலைஞரின் மூத்தமகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“ஸ்மார்ட் போன்களை Unlock செய்ய கைரேகை, கருவிழியைப் பயன்படுத்துவது போல மனிதனின் மூச்சுக் காற்றையும் பயன்படுத்தலாம்”- சென்னை ஐஐடி தகவல்.

மாலத்தீவு அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து.. பட்டப்பகலில் நடந்த  சம்பவம்

பாஜக விற்கு திமுக தான் கொத்தடிமை. முன்னர் Goback Modi என்றவர்கள் இன்று Come come Modi என்கிறார்கள். ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் திமுக விற்கும் பாஜகவுக்கும் உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

''மோடி வெற்றி பெற்றால் அரசியல் சாசனமே இருக்காது" -ஆ.ராசா

உலக அளவில் ஊழல் நிறைந்த நாடுகள் 93வது இடத்தில் இந்தியா.

எ.ம,எ.ம, நடைபயணத்தில் ரூ.2 லட்சம், செல்போன் திருட்டு

பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின்கேட்டுமனுதாக்கல்.தலைமறைவான அவரை தனிப்படை  தேடி வருகிறது.

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மன்வேந்திரசிங் மனைவி கார் விபத்தில் பலி.


"சுயபுத்தி" 
இனி கேள்விக்குறி?

 நியூராலிங்க் என்னும் நியூரோடெக்னாலஜி றுவனம் மனித மூளைக்கும், கம்ப்யூட்டருக்கும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. 

இதன் வெற்றியாக நரம்பியல் தொடர்பான வியாதிகளுக்குத் தீர்வு காண முடியும் எனக் காட்டியுள்ளது.

எலான் மஸ்க்-ன் நியூராலிங்க் உருவாக்கியுள்ள சிப் மற்றும் தொழில்நுட்பம் மூலம் ALS, Parkinsons போன்ற நரம்பியல் தொடர்பான வியாதிகளுக்குத் தீர்வு காண முடியும் எனப் பல சோதனையில் உறுதி செய்யப்பட்டது. 
இதைத் தொடர்ந்து இந்தச் சிப் குரங்குகளுக்கு வைத்துப் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் ஆய்வு முடிவுகளை அமெரிக்க FDA அமைப்பிடம் முன்வைக்கப்பட்டுச் சில மாதங்களுக்கு முன் மனித மூளையில் சிப் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து நியூராலிங்க் பல கட்ட ஆய்வுகளைச் செய்து ஒரு நோயாளியை தேர்வு செய்தனர். 
தற்போது இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருடைய மூளையில் சிப் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் எலான் மஸ்க் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

சிப் வைக்கப்பட்டதில் ஆரம்பக்கட்ட தீர்வுகளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் நியூரான் ஸ்பைக் கிடைத்துள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

 நியூராலிங்க் உருவாக்கியுள்ள இந்தச் சிப் பெயர் "Link", இது 5 நாணயங்களை அடுக்கி வைத்தது போல் வடிவத்தில் இருக்கும். கலிப்போர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூராலிங்க் நிறுவனத்தில் இதுவரையில் 400 பேர் பணியாற்றும் வேளையில் 363 மில்லியன் டாலர் தொகையை முதலீடாகத் திரட்டியுள்ளது. 

எலான் மஸ்க்-ன் நியூராலிங்க் உருவாக்கிய இந்தக் கட்டமைப்பின் பெயர் brain-computer interface research அல்லது ப்ரைன் மெஷின் என அழைக்கப்படுகிறது. இத்துறையில் நியூராலிங்க் முன்னோடியாக உள்ளது.

மேலும் இந்தச் சிப் வைக்க மண்டை ஓட்டை திறக்கும் கடினமான அறுவை சிகிச்சை தேவையில்லை, 
invasive surgery எனப்படும் துளையிட்டு ஊடுருவும் அறுவை சிகிச்சை மூலம் சிப் மனித மூளைக்குள் பொருத்தப்படும்.

 நியூராலிங்க் நிறுவனத்திற்கு முன்பு 2022 ஜூலை மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் Synchron என்னும் நிறுவனம் உருவாக்கிய சிப் அமெரிக்க நோயாளி மூளையில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த சிப் வைக்கும் தொழில் நுட்பம்
நோய்களைத் தீர்க்கும் என்பதைத்தாண்டி பல பின்னணி நோக்கங்கள் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
மனித மூளையைக் வெளியிலிருந்தே கட்டுப் படுத்தலாம்.நாம் விரும்புவதையே செய்யக் கூறலாம். சுயபுத்தியும்,பகுத்தறிவும் கேள்விக் குறியாவிடும்.
மனிதனை ரோபாவாக மாற்றி எந்திரத்தனமாகவே செயல்புரிய வைக்கலாம்.

நேரம்,உணவை மறக்கடித்து இரஙு,பகலாக வேலை வாங்கி சக்கையாகப் பிழிந்து நடை பிணமாக்கிவிடலாம்.
ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு(AI) காலம் ஆரம்பம்.
இதில் மனிதன்மூளையில் 'சிப்'வேறு .உலகம் விளங்கிடும்.
இதை வளரவிடாமல்,இந்த ஆய்வை முளையிலே கிள்ளி எறியவேண்டிய கட்டாயம் உலகநாடு அரசுகளுக்கு உள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?