சி.ஏ.ஏ.

 பழனிசாமியின் ஓரங்க நாடகம்!

தனது நாற்­கா­லி­யைக் காப்­பாற்­றிக் கொள்ள சிறு­பான்­மைச் சமூ­கத்­துக்­குத் தொடர்ந்து துரோ­கம் இழைத்து பா.ஜ.க.வின் பாதம் தாங்­கி­யா­கச் செயல்­பட்ட பழ­னி­சாமி, இப்­போது சிறு­பான்­மை­யி­ன­ரின் காவ­ல­ரா­கக் காட்ட முயற்­சித்து தனது துரோக நாட­கத்­தின் அடுத்த அத்­தி­யா­யத்தை நடத்­திக் காட்டி வரு­கி­றார்.

“அ.தி.மு.க. சிறு­பான்­மை­யி­னரை அரண் போல காத்து வரு­கி­றது. அ.தி.மு.க. ஆட்­சி­யில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் இரும்­புக் கரம் கொண்டு அடக்­கப்­பட்­டன.

 இசு­லா­மி­யர்­க­ளுக்­காக நிறைய திட்­டங்­க­ளைத் தீட்டி இருக்­கி­றோம். நாட்டு மக்­க­ளுக்­காக சூழ்­நிலை கருதிபா.ஜ.க.வுடன் கூட்­டணி வைத்­தோம். இனி பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்­டணிவைக்­காது. கூட்­டணி வேறு, கொள்கை வேறு என்­ப­தில்உறு­தி­யாக இருக்­கி­றோம். கூட்­ட­ணி­யில் இருந்து வெளியே வந்த போதி­லும்முத­ல­மைச்­சர் ஸ்டாலின் அவர்­கள், அ.தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் தொடர்­பு­ப­டுத்­திப் பேசி வரு­கி­றார்.

 எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும், சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் பா.ஜ.க.வுடன் கூட்­டணி இல்லை என்று திட்­ட­வட்­ட­மாகஅறி­விக்­கி­றேன். சிறு­பான்மை மக்­கள் அ.தி.மு.க.வுக்கு ஆத­ரவு தர வேண்­டும்”- இது­தான் எஸ்.டி.பி.ஐ. கட்­சி­யின் மாநாட்­டில் பழ­னி­சாமி பேசி­யது ஆகும்.

இனி வருங்­கா­லத்­தில் பா.ஜ.க.வுடன் கூட்­டணி இல்லை என்று சொல்­லிக் கொள்­ளும் பழ­னி­சாமி, அந்த மாநாட்­டில் பா.ஜ.க.வை விமர்­சித்து ஏதா­வது பேசி­னாரா என்­றால் இல்லை. சிறு­பான்­மை­யி­னர் நடத்­தும் மாநாட்­டில் கலந்து கொண்ட பழ­னி­சாமி, சிறு­பான்மை இனத்­துக்கு பா.ஜ.க. செய்த துரோ­கங்­க­ளைப் பட்­டி­யல் போட்­டாரா என்­றால் இல்லை. 

மொத்­த­மும் தி.மு.க.வையும் முத­ல­மைச்­ச­ரை­யும், கழக ஆட்­சி­யை­யும்­தான் விமர்­சித்­துப் பேசி விட்டு, ‘பா.ஜ.க.வுடன் கூட்­டணி இல்லை’ என்­பதை மட்­டும் சொல்லி சிறு­பான்மை இனத்தை ஏமாற்­றப் பார்த்­தி­ருக்­கி­றார்.

பா.ஜ.க.வுடன் கூட்­டணி இல்லை என்று சொல்­வது பழ­னி­சா­மி­யின் தற்­கா­லிக நாட­கங்­க­ளில் ஒன்று. 

சிறு­பான்­மை­யின வாக்­கு­களை உடைப்­ப­தற்­காக பா.ஜ.க.வால் உரு­வாக்­கப்­பட்ட சதிச் செய­லின் பிர­தி­நி­தி­தான் பழ­னி­சாமி என்­பதைஅ.தி.மு.க.வினரே அறி­வார்­கள். உள்­ளார்ந்த ஈடு­பாட்­டு­டன் பா.ஜ.க.வுடன் கூட்­டணிஇல்லை என்ற முடிவை எடுத்­தி­ருந்­தால் அவர் பா.ஜ.க.வை விமர்­சித்­தி­ருக்க வேண்­டும்.

 பா.ஜ.க.வின் தொங்கு சதை­யான பழ­னி­சாமி அந்­தக் காரி­யத்தை எப்­ப­டிச் செய்­வார்?

சூழ்­நிலை கருதி பா.ஜ.க.வுடன் கூட்­டணி வைத்­தா­ராம்? 

என்ன சூழ்­நிலை?

 மக்­க­ளுக்­காக கூட்­டணி வைத்­தாரா?

 தனது நாற்­கா­லி­யைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­காக பா.ஜ.க.வின் பாதம் தாங்­கி­னார். பா.ஜ.க. செய்த செயல்­கள்அனைத்­தை­யும் கைகட்டி வர­வேற்­றார். 

குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்தை ஆத­ரித்­த­தை­விட அவர் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இழைத்த பெரிய துரோ­கம் வேண்­டுமா?

மாநி­லங்­க­ள­வை­யில் குடி­யு­ரி­மைச் சட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­வர்­கள் :–

அ.தி.மு.க. எம்.பி.க்கள்:

1. SR பால­சுப்­பி­ர­ம­ணி­யன்

2. N சந்­தி­ர­சே­க­ரன்

3. A முக­மது ஜான்

4. AK முத்­துக்­க­ருப்­பன்

5. A நவ­நீ­த­கி­ருஷ்­ணன்

6. R சசி­கலா புஷ்பா

7. AK செல்­வ­ராஜ்

8. R. வைத்­தி­லிங்­கம்

9. A. விஜ­ய­கு­மார்

10. விஜிலா சத்­ய­நாத்

பா.ம.க. எம்.பி.:

11. அன்­பு­மணி ராம­தாஸ்

-– இவர்­க­ளால்­தான் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான குடி­யு­ரி­மைச் சட்­டம் மாநி­லங்­கள் அவை­யில் நிறை­வே­றி­யது. 

அதா­வது ஆத­ரித்­த­வர்­கள் 125 பேர். எதிர்த்து வாக்­க­ளித்­த­வர்­கள் 105 பேர்.

 அன்­பு­மணி மற்­றும் அந்த10 அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஓட்­டு­தான் குடி­யு­ரி­மைச் சட்­டம் நிறை­வே­றக் கார­ணம்.

அந்த 11 பேரும் எதிர்த்து வாக்­க­ளித்­தி­ருந்­தால்

ஆத­ரவு 125–-11=114 ஆக குறைந்­தி­ருக்­கும்.

எதிர்ப்பு 105+11=116 என்று உயர்ந்­தி­ருக்­கும்.

எதிர்த்­த­வர்­கள் 116 பேர் என்­றும்

ஆத­ரித்­த­வர்­கள் 114 பேர் என்­றும் வந்­தி­ருக்­கும். குடி­யு­ரி­மைச் சட்­டம் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கும்.

116 க்கும் 114 என்ற கணக்­கில் CAA சட்­டம் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கும். இந்­தப் பித்­த­லாட்­டத்­தைச் செய்த பழ­னி­சாமி தான் இன்று சிறு­பான்­மை­யர்க்கு ஆத­ர­வாக நாட­கம் ஆடு­கி­றார்.

குடி­யு­ரி­மைச் சட்­ட­மா­னது இசு­லா­மி­யர் உள்­ளிட்ட சிறு­பான்மை­ யின­ரை­யும், ஈழத்­த­மி­ழர்­க­ளை­யும் மட்­டு­மல்ல; இங்­குள்ள தமி­ழர்­க­ளுக்­கும் அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டுத்­தப்­போ­கும் சட்­டம் என்­ப­தால் நாடா­ளு­மன்­றத்­தின் இரு அவை­க­ளி­லும் தி.மு.க. சார்­பில் கடு­மை­யாக எதிர்க்­கப்­பட்­டது.

 மாபெ­ரும்போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. மக்­க­ளி­டம் கையெ­ழுத்து இயக்­கம் நடத்­தப்­பட்­டது.கோடிக்­க­ணக்­கான கையெ­ழுத்­துக்­க­ளு­டன் குடி­ய­ர­சுத் தலை­வ­ரையே சந்­தித்துவழங்­கப்­பட்­டது. 

அப்­போது பழ­னி­சாமி என்ன சொன்­னார்? ‘யாருமே பாதிக்­கப்­ப­ட­வில்­லையே’ என்று கேட்­டார். சட்­ட­மன்­றத்­தில் 2021 பிப்­ர­வரி 20 ஆம் தேதி, குடி­யு­ரி­மைச் சட்­டத்­துக்கு ஆத­ர­வாக பெரிய வகுப்பு எடுத்­தார் பழ­னி­சாமி.

ஆட்சி மாறி­யது. 2021 செப்­டம்­பர் 8 அன்று, ‘நாட்­டின் ஒற்­று­மை­யை­யும் ஒரு­மைப்­பாட்­டை­யும் கேள்­விக்­கு­றி­யாக்­கும் ஒன்­றிய அர­சின் குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டத்தை திரும்­பப் பெற வேண்­டும்’ என்று சட்­ட­மன்­றத்­தில் தனித் தீர்­மா­னத்தை முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கொண்டு வந்­தார்­கள்.

 இந்த தனித் தீர்­மா­னத்தை சட்­ட­மன்­றத்­துக்­குள் இருந்து அ.தி.மு.க. ஆத­ரித்­­­­­திருக்க வேண்­டும். அல்­லது தீர்­மா­னத்தை எதிர்த்­தி­ருக்க வேண்­டும். இரண்­டை­யும் செய்­ய­வில்லை. வேறு ஒரு கார­ணத்­தைச் சொல்லி முன்­ன­தா­கவே வெளி­ந­டப்பு நாட­கத்தை நடத்தி வெளி­யேறி விட்­டார்­கள். 

இது­தான் இவர்­கள் பா.ஜ.க.வை எதிர்க்­கும் லட்­ச­ணம்.

‘ஓ.பன்­னீர்­செல்­வம் இருந்து பா.ஜ.க.வை ஆத­ரிக்க கட்­டா­யப்­ப­டுத்­தி­னார்’ என்­பது உண்­மை­யா­னால், இப்­போது தான் பன்­னீர்­செல்­வம் தனி­யா­கப் போய்­விட்­டாரே. 

அதன்­பி­ற­கும் ஏன் குடி­யு­ரி­மைச் சட்­டத்தை எதிர்க்­கத் தயங்­கி­னார் பழ­னி­சாமி? 

ஏனென்­றால், இப்­போது நடத்­து­வ­தும் பா.ஜ.க. போட்­டுத் தந்த ‘ஓரங்க நாட­கம்’ தான் என்­ப­தால்!

முரசொலி(12.01.24)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?