மோடிக்கு டாட்டா?

 நட்டாக்கு நோட்டீசா??

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸவாடாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடு, "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள். 

உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். 

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?

இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். 

தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன்சிங் என்ன சொன்னார் தெரியுமா? 

நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று பேசியிருந்தார்.

இவ்வாறு அவர் பேசியது உண்மைக்கு மாறான தகவல் எனவும், தங்களது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் விளக்கமளித்துள்ளனர்.

மட்டுமல்லாது, பிரதமரின் பேச்சு மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

 அதில், "இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 152பி, 289, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். 

சென்னையிலும் சிபிஎம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாயை மூடி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இன்று பிரதமர் பேச்சு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்கமாக சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம்கேட்டு,சம்பந்தப்பட்டவருக்குதான் நோட்டீஸ் அனுப்பப்படும்..

 ஆனால் இந்த முறை மோடிக்கு நோட்டீஸ் அனுப்பாமல், நட்டாவுக்கு அனுப்பப்பட்டிருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளளனர்.

 விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மோடி. ஆனால், ஏன் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பாஜக ஆதரவாளர்கள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, நட்சத்திர பேச்சார்களின் பேச்சுக்கு கட்சித் தலைவர்களே பொறுப்பு என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 77வது பிரிவு கூறுகிறது. 

எனவேதான் பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

அதுசாதாரணபேச்சாளர்களுக்குத்தான்.மோடி தலைவர் மட்டுமல்ல.நாட்டின் பொறுப்பான பதவியில் பிரதமராக இருப்பவர்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?