இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாடாளுமன்ற சம்பளம்

படம்
  நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர்,  துணை முதல்வர் கைது: சிபிஐ விசாரணை. தருமபுரி அருகே பிரசித்தி பெற்ற பிலியனுர் முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை . ''விவாதத்தை தலைமையேற்று நடத்த வேண்டிய பிரதமர் விவாதிக்க விரும்பவில்லை'' - நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி . கைவிட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. எம்.பி. சம்பளம்? எம்.பிக்கள் தங்களது தொகுதி மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தைத் தவிர தினசரி படி, அலுவலக வசதிகள், பயணச் செலவுகள், தங்குமிடம் எனப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. தற்போது தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள எம்.பி.களில் புதுமுகம், அனுபவம் வாய்ந்தவர்கள் எனப் பலர் இடம்பெற்றுள்ளனர். மேலும் எம்.பிக்களின் அனுபவத்திற்கு ஏற்ப வீடு, ஓய்வூதியம் ஆகிய சலுகைகளை அரசு வழங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதியி

பட்ஜெட்டுக்கு முன்னர்

படம்
  ஒன்றிய பட்ஜெட்டில் பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களும், துறைவாரியான சம்மேளனங்களும் கூட்டாக ஒன்றிய நிதி அமைச்ச ருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளன.  அதன் விவரம் வருமாறு:  “நாட்டின் அரசமைப்புச்சட்டம் மற்றும் ஜனநாயகத் தின்மீது நம்பிக்கைகொண்டு, நாட்டின்செல்வத்தைஉருவாக்குபவர்களாகிய தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் பட்ஜெட்டுக்கு முன் நடை பெற்றுவந்த கலந்தாலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர்  மாநாட்டை கூட்டவில்லை எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது கடந்த பத்தாண்டுகளில் முத்தரப்பு அமைப்பான ஐஎல்சி எனப்படும் இந்தியத் தொழிலாளர் மாநாட்டை (ILC-Indian Labour Conference) கூட்ட வில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் கூட்டப்பட்ட ஒரே ஐஎல்சி மாநாடு என்பது முந்தையமாநாடுகளில்பரிந்துரைக்கப்பட்டவற்றை அமல் படுத்த வேண்டும் என்பதற்காகவே கூட்டப்பட்டதா கும்.  எனினும் அவை கேளாச் செவியினரிடம் கூறியவை போன்றே ஆயிற்று. அவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. அபராதத் தொகை  விகிதம் குறைப்பு நாங

மோடி திறந்தால் பகீர்?

படம்
  விஷ சாராய வழக்கு: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாா் முடிவு. கர்நாடகாவில் குன்டேனகள்ளி கோவிலுக்குச்சென்று திரும்பிய வேன் கோர விபத்து: 2 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி. கனமழை பெய்துவரும் நிலையில் டெல்லியில் மோடி இரு மாதங்களுக்கு முன் திறந்த விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.ஒருவர் பலி.நான்குபேர் படுகாயமடைந்தனர். டீபோட்டுத்தராததால்ஆத்திரம்:ஐதரபாத்தில்  மருமகளை கழுத்தை நெரித்து கொன்ற மாமியார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் - ட்ரம்ப்நேரடிவிவாதம்தொடங்கியது! குடியரசு தலைவர் வாசித்தது ஒன்றிய அரசு தயாரித்த பொய்கள் நிரம்பிய உரை:- எதிர்கட்சிகள் . மோடி திறந்தால் பத்திரம்? அடல் சேது பாலம், ராமர் கோயில் வரிசையில் தற்போது டெல்லி விமான நிலையமும் இணைந்திருக்கிறது. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருந்தது. இதனை வழமைபோல் (கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி) மோடி திறந்து வைத்திருந்தார். இப்படி இருக்கையில் தற்போது இதன் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. மோடி தொடங்கி வைத்த பல திட்ட பணிகள் இதேபோல சேதமடைந்திருக்கின்றன என எதிர்க்கட

வெறும் சங்கம் மட்டுமே

படம்
  நாடு தழுவிய அளவில் பல லட்சம் மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நீட், ஜேஇஇ, யுஜிசி நெட் உள்பட 15-க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ – நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) என்பது உள்ளபடியே சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சாதாரண சங்கம் மட்டுமே (அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கத்தைப் போல)! 2017-ல் உருவாக்கப்பட்டு, 2017 நவம்பர் 10-ல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2018, மே 15 ஆம் தேதி 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், ‘சுதந்திரமான, தன்னதிகாரம் கொண்ட, தானே செயல்படக் கூடிய முதன்மையான அமைப்பு’ என்ற அறிவிப்புடன் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. 2018 செப்டம்பர் அரசு ஆணையில், ‘உலகத் தரத்தில் தொழில்நுட்பங்களை உள்வாங்கித் தேர்வுகளை நம்பகத்தன்மை கொண்ட, வெளிப்படையான, தரமிக்கதாக’த் தேர்வுகளை முகமை நடத்தும் என்று குறிப்பிட்டுள்ளது. உருவாக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தேசிய தேர்வுகள் முகமை செயல்பட்டிருக்கிறதா? என்றால் கேள்விக்குறிதான். 2021-ல் முதன்முதலாக ஒரு ச

நிரூபிக்க வேண்டும்!

படம்
  5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த ஒன்றிய அரசுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.  நேற்று முடிவடந்த அலைகற்றை ஏலம் விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.11,340 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அலைகற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசு திரட்ட திட்டமிட்டிருந்த தொகையில் ரூ.11,340 கோடி என்பது 12% மட்டுமே. நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல். சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி. முன்னாள் ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி. கனமழை  கூடலூர், பந்தலூர் வட்டம் பள்ளிகளுக்கு இன்று(27-06-2024) விடுமுறை . தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.6000 கோடி கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு. தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும்! உலகப் புகழ்பெற்ற தொழில் அதிபரான எலான் மஸ்க், வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து வெளியிட்ட பதிவானது, இந்திய அரசியல் களத்தில் வெப்ப அலைகளை மட்டுமல்ல, சந்தேக அலைகளையும் அதிகரித்துள்ளது. மஸ்க் தம்முடைய ‘எக்ஸ்’ ஊடகப் பக்கத்தில்