இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொழுப்பு லட்டு?

படம்
  திருப்பதி லட்டு தயாரிக்க கடலைமாவை பூந்தியாக்க எண்ணை அல்ல சுத்தமான ஆவின (பசுவின்)நெய்யே பயன் படித்துவார்கள் அதனால்தான தனி சுவை் ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்டநெய் கலப்படமானது என்றும், அதில் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது 4 ஆய்வக பரிசோதனைகளிலும் உறுதியாகி இருப்பதாகவும் திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர்  “திருப்பதி பெருமாள் கோயிலுக்கு நெய் சப்ளை செய்பவர்கள் தரமான நெய்யை சப்ளை செய்கிறார்களா என்பதை பரிசோதிக்க கோயிலுக்குச் சொந்தமாக ஆய்வக வசதி இல்லை. வெளியே ஆய்வு செய்யலாம் என்றால், ஆய்வகக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. நெய் சப்ளை செய்பவர்கள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன. எனவே நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும் ஒப்பந்தக்காரரை ப

இவர் அவரில்லை!

படம்
  வடலூர் வள்ளலார் பெருவெளி நிலத்தில் மருத்துவமனை : அறநிலையத்துறைக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு! தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்கள் (Iconic Projects) தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  இவர் அவரில்லை! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.   குற்றம் சாட்டப்பட்ட வருவாய் அலுவலர் மு.கண்ணணுக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்றும் பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியாகியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதா

இப்படியும்

படம்
கட்சிக்கு ஆள் சேர்க்கலாம்.  புதுச்சேரி மாவட்டம் முத்தியால்பேட்டை பகுதியில் மக்களிடம் தீபாவளி பரிசு தருவதாக செல்போன் நம்பர்கள் வாங்கப்பட்ட நிலையில் அவர்கள் பாஜகவில் இணைக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அறக்கட்டளையிலிருந்து வருகிறோம் என்று சொல்லி சிலர் மொபைல் நம்பர்களை கேட்டதாகவும் பல்வேறு மக்கள் தங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.  மேலும் தீபாவளி பரிசு கொடுக்கப்படும் என்றும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் எனவும் சொன்னதால் அந்த பகுதியில் உள்ள பல பேர் தங்களுடைய செல்போன் நபர்களை கொடுத்துள்ளனர். ஆனால் திடீரென ' நீங்கள் பாஜகவில் இணைந்து விட்டீர்கள்' என செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இது குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், 'சில நேரங்களில் இதுபோல் போன் கால்கள் வரும். நீங்கள் பாஜகவில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்பார்கள்.  ஆனால் இப்படி செய்வார்கள் என்று நினைக்கவில்லை. தீபாவளி கிப்ட் கொடுக்கிறேன் என்று சொல்லி தா

நூற்றுக்கு முட்டை.

படம்
  மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி: அரியானா பேரவை தேர்தலையொட்டி காங். வாக்குறுதி. ரூ.26.61 கோடி டெண்டர் மோசடி;அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 11 பேர்கள் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி. உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம். திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு: முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டு. தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் ஆலங்காயம் வட்டாரகல்வி அதிகாரிசித்ரா கைது. ஒரேநாடுஒரேதேர்தல் ஒன்றிய பாஜக அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு. நூற்றுக்கு  முட்டை. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவி யேற்று நூறு நாள் முடிந்ததையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் சாதனை கையேட்டை வெளியிட்டுள்ளார்.  அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி என்பது இந்த ஆட்சியின் அலங்கோலங்களை

மோசடி வியாபாரம்!

படம்
  மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை :  "மதுரை எய்ம்ஸ் குறித்து, பாஜ தலைவர்கள் இங்கொன்றும், அங்கொன்றும் பேசுவதை எடுத்து கொள்ள முடியாது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுவதை மட்டுமே எடுத்து கொள்ள முடியும். மதுரை எய்ம்ஸ்சுக்கு எத்தனை முறை தான் ஒப்பந்தபுள்ளியில் கோளாறு வரும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமான பணிக்கு எப்படி கோளாறு வருகிறது. இது தொடர்ச்சியாக, நமக்கான பங்கை மறுக்கும் வேலை." அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழிப்பு.மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு. சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை. மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: மாணவர் சேர்க்கை குழ

என்ன பிணக்கு?

படம்
  டெல்லி முதல்வர் பதவியை விட்டு இன்று கெஜ்ரிவால் விலகல். கந்துவட்டிக் கொடுமையால் பேக்கரி கடைக்காரர் தற்கொலை; ஆபத்தான நிலையில் மனைவி. தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம். ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு.அகிலேஷ் குற்றச்சாட்டு. கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன்மோடி குறைக்கவில்லை? எதிர்கட்சிகள் கேள்வி! எனக்கும் கடவுளுக்கும் என்ன பிணக்கு? "எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்." தந்தை பெரியார் தன்னைப் பற்றி இப்போது எழுதியிருந்தால் என்ன எழுதியிருப்பார் என அவர் கூற்றிலேயே எழுத்தாளர் மருதன் இந்து தமிழ் இணையதளத்தில் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்று வரவேற்பைப் பெற்றுள்ளது. “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்...” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை பின்வருமாறு : “என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டி