நூற்றுக்கு முட்டை.
மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி: அரியானா பேரவை தேர்தலையொட்டி காங். வாக்குறுதி.
உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்.
திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்.
தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் ஆலங்காயம் வட்டாரகல்வி அதிகாரிசித்ரா கைது.
ஒரேநாடுஒரேதேர்தல் ஒன்றிய பாஜக அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.
நூற்றுக்கு முட்டை.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவி யேற்று நூறு நாள் முடிந்ததையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் சாதனை கையேட்டை வெளியிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி என்பது இந்த ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை இது வரை துவங்காததற்கு என்ன காரணம் என்று கேட்க கொரோனா பரவலை கைகாட்டுகிறார் அமித்ஷா.
கொரோனா பரவல் முடிந்துவிட்டது என்று ஒன்றிய அரசே ஒப்புக் கொண்ட பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பை துவங்க மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. வழக்கம் போல விரைவில் துவங்கும் என்ற வழக்க மான பல்லவியையே பாடியுள்ளார் ஒன்றிய அமைச்சர்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு கணக்கெடுப்பு பணி துவங்கும் போது தெரியும் என்று மழுப்பியுள்ளார் அமித்ஷா.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக வன்முறை இல்லை என்ப தையே பெரும் சாதனையாக கூறியுள்ளார் அமித்ஷா. இதுவரை பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை.
யாரு டனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் மூன்று நாட்கள் மோதல் இல்லை என்பதையே தங்களுடைய மூன்றாவது முறை ஆட்சியின் பெரும் சாதனையாக பீற்றிக் கொள்கிறார் அமித்ஷா.
ஆனால் தங்களது ஆட்சிக்காலம் முடிவ தற்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடை முறைப்படுத்தியே தீருவோம் என்றும் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை விரைவில் நிறை வேற்றுவோம் என்றும் கூறுகிறார் அமித்ஷா.
இந்த திட்டங்கள் ஒன்றிய அரசின் மதப் பகைமை அடிப்ப டையில் கொண்டு வரப்படுபவை. இதற்கு காட்டும் அவசரத்தை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்து வதில் ஏன் காட்ட மறுக்கிறது மோடி அரசு.
முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது அளித்த வாக்குறுதிகளை கூட நரேந்திர மோடி இதுவரை நிறைவேற்றவில்லை.
வேளாண் விளை பொ ருட்களுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதல் விலை தருவோம் என்றார். ஆனால் இப்போதும் கூட குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளோம் என அடக்கி வாசிக்கிறார் அமித்ஷா.
மொத்தத்தில் செய்ய வேண்டியவற்றை செய் யாமலும், செய்யக் கூடாததை செய்தும் நாட்களை கடத்தி வருகிறது மோடி அரசு.
மூன்றாவது தவணையின் நூறாவது நாளும் மக்களுக்கு கசப் பையும், கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு இனிப்பை யும் தருவதாகவே இருக்கிறது.