இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்று..

படம்
13/11/2024.   தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய இணையதளம் அல்லது மொபைல் செயலி வழியாக முன்பதிவு செய்பவர்களுக்கு பம்பர் பரிசு காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. முதல் பரிசாக இரு சக்கர வாகனம், இரண்டாம் பரிசாக எல்இடி டிவி, மூன்றாம் பரிசாக பிரிட்ஜ் ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் குழுக்கள் முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ------------- திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுவரை 8 பெட்டிகளுடன் இயங்கி வந்த வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்க்கப்பட்டு விரைவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  --------------- கொடைக்கானலில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 12 அடி நீளம் உள்ள வாகனங்கள் அனைத்தும் கொடைக்கானல் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது நவம்பர் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என திண்டுக்கல்

கல்யாண கலாட்டா?

படம்
  ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுஉத்தேசவிடைகள்இணையதளத்தில் வெளியீடு. ”பழனிசாமியின் முதலைக்கண்ணீரைப் பார்த்தால் முதலையே தோற்றுவிடும்” : அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி. புதிய சாமி. இவர் நாகதேவனாம் இவர்கிட்ட கொத்து வாங்கினா வரம் கிடைக்குமாம்.நல்லதே நடக்குமாம். கல்யாண கலாட்டா? கும்பகோணத்தில் "சூரியனார் கோயில் ஆதீனம் "அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது தலைமை மாடதிபதியாக மகாலிங்க சுவாமி (வயது 54) என்பவர் இருந்து வந்தார். இவர் திடீரென ஹேமா ஸ்ரீ (வயது 47) என்ற பெண் பக்தர் ஒருவரை மகாலிங்க சுவாமி திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் பெங்களூரில் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனையடுத்து திருமணம் செய்து கொண்டது தொடர்பாக மகாலிங்க சுவாமி விளக்கம் அளித்திருந்தார். அதில், ‘திருமணம் ஆனவர்களும் ஆதீன மடாதிபதியாக இருந்துள்ளனர். எனவே நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்து கொண்ட ஹேமா ஸ்ரீ, மடத்துக்கு பக்தராக வந்து சென்றவர் ஆவார். இனியும் அவர் மடத்திற்குப் பக்தராக மட்டுமே வந்து செல்வார்’

காசு மேல காசு வாங்கி...

படம்
  ஸ்டெர்லைட்ஆலைதீர்ப்பைமறுஆய்வுசெய்ய வேதாந்தா அனில் அகர்வால்மனு .தள்ளுபடி செய்ததுஉச்ச நீதிமன்றம். சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு. திருவாரூர் அருகே ஒன்றிய அரசின் மத்திய பல்கலை விடுதி உணவில் புழு, பூச்சிகள்.காணோலி பரவல். சோலார், காற்றாலை இயந்திரங்கள் ஏற்றுமதியில் முறைகேடு; ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. காசு மேல காசு வாங்கி... நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் ஆணையராக பதவி வகித்து வருகிறார் ஜஹாங்கீர் பாஷா. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் பேரிடர் அபாயம் நிறைந்த ஊட்டி நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அந்த விதிமுறைகளை மீறி தனியாருக்கு சில அனுமதிகளை ஆணையர் ஜஹாங்கீர் பாஷா வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை காரில் சொந்த ஊருக்கு கிளம்பியிருக்கிறார் ஜஹாங்கீர் பாஷா. தனது காரில் பல லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை ரகசியமாக அவர் எடுத்துச்‌ செல்வதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆணையர் பாஷா காரை விரட்டிச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், தொட

புதியதோர் உலகம்.

படம்
  விசாகப்பட்டினத்தில் போலீசார் அதிரடி அதிக ஒலி எழுப்பிய பைக் சைலன்சர்கள் நசுக்கி அழிப்பு. கியூபா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு. பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. புதியதோர் உலகம். காலநிலை மாற்றத்தால் பாலைவனத்தில் பனி மழை பெய்கிறது. வெப்பமான காலத்தில் மழை கொட்டுகிறது. நில அதிர்வே ஏற்படாத பகுதிகளில் நில அதிர்வு ஏற்படுகிறது. இதனால் பூமியானது எந்த நேரத்திலும் அழிந்து விடும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் 70 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில்  பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் பூமியானது முற்றிலும் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார்கள். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு நிகழ்வின் பின்னர் டைனோசர்கள் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக Delhi Mail report-ன் அறிக்

தற்செயலாக....

படம்
  எக்ஸ்-ரே. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கை 34 இடங்களை வீணாக்கிய மாணவர்கள்: அடுத்த ஓராண்டு வரை மருத்துவப்படிப்பில் சேர தடை. தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு. சென்னை எழும்பூர் போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவு.செல்போன்அணைத்துவைத்தார். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்து இலங்கை கடற்படை. டிரம்ப் வெற்றி. இந்தியாவுக்கு பாதிப்பு? அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் மாற்றம் இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.  முன்னதாக வர்த்தகத்தை பொறுத்தவரை இந்தியா துஷ்பிரயோகம் செய்வதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், அவர் தனது பதவிக் காலத்தின் முதல் பகுதியில் வர்த்தகத்திற்கான வரிகளை உயர்த்த முடியும் என்றும்,  75 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.   டிரம்ப் இதற்கு முன்பு அதிபராக இருந்த போது, பாதுகாப்ப