கல்யாண கலாட்டா?
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுஉத்தேசவிடைகள்இணையதளத்தில் வெளியீடு.
கும்பகோணத்தில் "சூரியனார் கோயில் ஆதீனம் "அமைந்துள்ளது.
இந்த ஆதீனத்தின் 28வது தலைமை மாடதிபதியாக மகாலிங்க சுவாமி (வயது 54) என்பவர் இருந்து வந்தார்.
இவர் திடீரென ஹேமா ஸ்ரீ (வயது 47) என்ற பெண் பக்தர் ஒருவரை மகாலிங்க சுவாமி திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் பெங்களூரில் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனையடுத்து திருமணம் செய்து கொண்டது தொடர்பாக மகாலிங்க சுவாமி விளக்கம் அளித்திருந்தார். அதில், ‘திருமணம் ஆனவர்களும் ஆதீன மடாதிபதியாக இருந்துள்ளனர். எனவே நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை.
நான் திருமணம் செய்து கொண்ட ஹேமா ஸ்ரீ, மடத்துக்கு பக்தராக வந்து சென்றவர் ஆவார். இனியும் அவர் மடத்திற்குப் பக்தராக மட்டுமே வந்து செல்வார்’ எனத் தெரிவித்திருந்தார். சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி மகாலிங்க சுவாமி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
அதேசமயம் ஆதீன மடத்தின் சுமார் 1,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை மகாலிங்க சுவாமிகளும், அவர் திருமணம் செய்து வந்துள்ள பெண்ணும் முயற்சி செய்வதாக மகாலிங்க சுவாமியின் உதவியாளரான சுவாமிநாத சுவாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மகாலிங்க சுவாமி, ‘அவரை யாரோ தவறாக இயக்குகின்றனர்.
தான் திருமணம் செய்து கொண்டது குறித்து அறநிலையத்துறைக்கும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதற்குக் கட்டுப்படுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான், ‘மகாலிங்க சுவாமி மடத்தை, விட்டு உடனே வெளியேற வேண்டும். திருமணப் பந்தத்தில் ஈடுபட்ட அவரால் மடத்தின் புனிதம் கெட்டுவிட்டது’ எனக் கூறி அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு மற்றொரு தரப்பினரோ, ‘மகாலிங்கம் சுவாமி மடத்தை விட்டு ஆதீனம் வெளியேறக் கூடாது’ எனக் கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இருதரப்பினரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மகாலிங்க சுவாமி மடத்திலிருந்து வெளியேறி வேறொரு பகுதியில் அமர்ந்தார்.
அப்போது அங்கிருந்த அவரது எதிர்ப்பாளர்கள் உடனே மடத்தின் கேட்டிற்கு பூட்டுப் போட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மகாலிங்கம் சுவாமி மடத்தின் பொறுப்பு மற்றும் அதன் சொத்துக்களை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டார்.
அதன்பின்னர், “இந்த மடத்தில் இருக்கும் சொத்துக்களுக்கு எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது’ என்ற எண்ணத்தினாலேயே மடத்தை விடு வெளியே வந்து விட்டேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
இதனையடுத்து தனது உடைமைகளை எடுத்துக்கொண்டுஅங்கிருந்துகிளம்பினார்.