இன்று..(09/11/2024)
*இனி வரும் புயல்கள் வலிமையானதாக இருக்கும் என்று ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் பெரும் சவாலமாக இருக்கும் நிலையில், இனி வரும் நாட்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும் மத்திய அரசு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
*வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது தமிழகத்தை நோக்கி வரும் என்றும் அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
*சென்னைக்கு வரும் 12ஆம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
*சென்னை போதைப் பொருளுடன் துணை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
*2 நாள் சுற்றுப்பயணமாக விருதுநகர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
*நிதி முறைகேடு புகார் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
*ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் வரி அமைப்பு முறையை மாற்றியுள்ளதாக மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
*தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி காட்டும் அரசியல் புத்தகம் போலியானது என்றும் இடஒதுக்கீட்டை பறிக்கும் கெட்ட நோக்கம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
*மேற்கு வங்க மாநிலத்தில் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
*மருமகளை டிவி பார்க்க விடாததும், அக்கம் பக்கத்தினரை சந்திக்கவும், கோயிலுக்கு செல்லவதை அனுமதிக்காததும் கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தற்கொலை வழக்கில் மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
*பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
*கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளதாகவும், அவர்கள் ஓட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரநிதிகள் அல்ல என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
*ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு முதலமைச்சராக சுக்வீந்தர் சுக்கு பதவி வகித்து வருகிறார். இதனிடையே கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி சிம்லாவில் உள்ள சிஐடி காவல்துறை தலைமை அலுவலகத்தில் இணையவழி குற்றப்பிரிவு நிலைய திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று குற்றப்பிரிவு நிலையத்தை திறந்து வைத்தார்.
இதனிடையே முதலமைச்சருக்கு என தனியாக வைக்கப்பட்டிருந்த சமோசா மற்றும் கேக்குகள் காணாமல் போனதைக் கண்டு மூத்த சிஐடி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சரின் பாதுகாவலர்களுக்கு பெண் சார்பு கண்காணிப்பாளர்கள் சமோசா மற்றும் கேக்குகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் சிஐடி எஸ்பி கூறியுள்ள தகவலின்படி, “ஐஜி அளவில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி தான் சாப்பிடுவதற்காக அங்கிருந்து உதவி ஆய்வாளர் ஒருவரிடம் சிற்றுண்டி கேட்டுள்ளார்.
அவரோ முதலமைச்சருக்காக வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டிகளை எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த உயர் அதிகாரிகளுக்கு முதலிலேயே தெரிந்துள்ளது. முதலமைச்சருக்கு என வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி என கீழே இருந்தவர்களும் எடுத்து கொடுத்துள்ளனர்.
இச்சம்பவத்திற்பெண்கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் தான் காரணம் எனவும், அவர்கள் மாநில அரசுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளனர். உயர் அதிகாரியிடம் கேட்காமல் பல கைகள் மாறி அந்த சிற்றுண்டி சென்றுள்ளது” என்று கூறினார்.
இதனால் விஐபிக்கு அந்த உணவுகளை பாதுகாப்பு காரணங்களுக்காக பரிமாற முடியவில்லை.
இது மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று சிஐடி எஸ்பி அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பெயர்களையும் குறிப்பிட்டு இருப்பது இமாச்சலப் பிரதேசத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் மாநில அரசையும் முதல்வர் சுக்வீந்தர் சுக்குவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மாநில வளர்ச்சியில் அக்கறையில்லாத அரசானது, முதலமைச்சருக்கு வழங்க வேண்டிய சமோசா மீது மட்டும் அக்கறை செலுத்தி வருகிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் இதை பெரிய பிரச்சினையாக மாநில அரசை யோசித்துக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த பிரச்சனை மூலம் அரசு அதிகாரிகளுக்கு இடையே உள்ள தகவல் தொடர்பு குறைபாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் ரணதீர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய சமோசா மற்றும் கேக்குகளை பாதுகாப்பு ஊழியர்கள் சாப்பிட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிஐடி காவல்துறை அளித்துள்ள அறிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பலரும் இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் கடுமையாக கிண்டல் செய்துள்ளனர். பொதுவாக அரசு விழாக்கள் என்றால் அதில் பங்கேற்கும் முதலமைச்சர் தொடங்கி முன்னணி நிர்வாகிகள் வரை அனைவருக்கும் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் சிற்றுண்டிகள், உணவுகள் வழங்கப்படுவது வழக்கம்.
சில நேரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகும் நேரமின்மை, உணவு கட்டுப்பாடு போன்றவை காரணமாக முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய உணவுகளை சாப்பிடாமல் சென்றுவிடுவார்கள்.
இது பின்னர் அங்கு இருப்பவர்களால் காலி செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை அந்த உணவுகள் தனியாக பாதுகாக்கப்படும். பொது நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க இம்முறை பின்பற்றப்படுகிறது.
அதேசமயம் முறையான கணக்கு வழக்குகளை சம்பந்தப்பட்ட நிர்வாக துறையினர் தாக்கல் செய்ய வேண்டும். இப்படியான நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று நாடு முழுவதும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (09-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
குஜராத்தில் உள்ள ஒரு குடும்பம் பாரம்பரிய சடங்குகளுடன் காருக்கு இறுதி சடங்கு செய்துள்ளனர்.
குஜராத் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் போலாரா.
இவர் 12 ஆண்டுகளுக்கு முன் வேகன் ஆர் காரை வாங்கி உள்ளார்.
அந்த காரை தங்கள் அதிர்ஷ்டமாக எண்ணி அதை பொக்கிஷமாக வைத்து அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். எனினும் கார் பழையதாகி விட்டதால் அதனை பயன்படுத்த முடியாமல் போனது.
இந்த நிலையில், அந்த காருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக உயிரிழந்தவர்களுக்கு செய்வது போல் இறுதி சடங்குகளை சஞ்சய் போலாரா குடும்பத்தினர் செய்துள்ளனர்.
இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலகரிக்கப்பட்ட அந்த கார், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பொக்லைன் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
கிராமத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு கார் புதைக்கப்பட்டது.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் சுமார் 1,500 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய காரை புதைப்பதற்காக 15 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கார் இறுதி ஊர்வலம்,அடக்கச் செலவு என ரூபாய் நான்கு லட்சம் செலவிடப்பட்டது.