அதிகாரசபை பட்டியல்
அலப்பறைகள் முடிவதில்லை..
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ரூ558 கோடி ரொக்கம், தேர்தல்அன்பளிப்புப் பொருட்கள் பறிமுதல்.
10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரிப்பு; தமிழ்நாட்டின் மின்தேவை 2026-27ல் 23,013மெகாவாட்டாகஅதிகரிக்கும்.ஆய்வில் தகவல்.நெல்லை, தென்காசியில் முன்னாள் M.P,உட்பட 16 இடங்களில் ஐடி சோதனை. ஊழியர்களிடம் விசாரணை.உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை: சாம்சங் ஊழியர் தொழிற்சங்கவழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.தெலுங்கு மக்கள் குறித்து அசிங்கமான அவதூறு பேச்சு; முன்னாள் நடிகை கஸ்தூரி கைதாகிறார்: 7வழக்குகள் பதிவு.சம்மன் அனுப்பும் பணியில் காவல்துறை தீவிரம்.கஸ்தூரி ஐதராபாத் ஓட்டம்.கஸ்தூரியின் பிராமணரல்லாத அரசு ஊழியர்கள் மட்டுமே லஞ்சம் வாங்குவதாக அவதூறுக்கு அரசு ஊழியர்,தலமைச்செயலக ஊழியர்,வருவாய்த்துறைஊழியர்சங்கங்கள் கண்டனம்.ஒடிசாவில் ஓடும் ர யில் மீது துப்பாக்கிச் சூடு .
சட்டவிரோதமாக வீடுகளை இடிக்கும் உ.பி,பா.ஜ.கஅரசு.உச்சநீதிமன்றம் அபராதம் விதித்து கண்டனம்.
பள்ளம் தோண்டி வெடிக்க வைத்து ராக்கெட் லாஞ்சரை ராணுவ அதிகாரிகள் செயலிழக்க செய்தனர்.
இந்த `பசுக்கா’ ராக்கெட் லாஞ்சர் ஆயுதங்கள் பீரங்கி, டாங்கிகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படுகின்றன. 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட இந்த ராக்கெட் லாஞ்சர் எப்படி இங்கு வந்தது என விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
இந்தியாவன் அதிகாரசபை பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 8வது இடம் பெற்றுள்ளார்.
‘இண்டியா டுடே’ இந்த நவம்பர் மாத இதழில் “இந்தியாவின் அதிகார சபை” என்ற தலைப்பில் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டாப் 10 பட்டியலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் என நீளும் இந்த பட்டியலில் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றதற்கான காரணம்?
v அடக்கமான போர்வீரன்
v தென் கோட்டையைப் பிடித்து வைத்திருப்பவர்.
v மொழித் தடையால் மு.க. ஸ்டாலின் அவர்களின் பேச்சு வடக்கு மாநிலங்களை அடையாமல் இருக்கலாம், ஆனால் பூர்வீக நிலமான தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரின் குரல் டெல்லி
அதிகாரத்தின் செவியை எட்டுகிறது.
v லோக்சபாவில் தி.மு.க.வுக்கு 22 எம்.பி.க்கள், ராஜ்யசபையில் 10
எம்.பி.க்கள் மட்டுமின்றி தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 70% வாக்குகளுடன் வெற்றி வாகை சூடியது.
v எல்லா மாநிலங்களிலும் பாஜகவுக்கு சில தொகுதிகள் கிடைத்த சூழலிலும் தமிழ்நாட்டில் ஒரு இடம்கூட கிடைக்காமல் செய்தது பாஜகவுக்கு அதிக வருத்தத்தை தந்தது. எனவே, தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு ஒரு முக்கிய அம்சமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் எஃகு போல திகழ்கிறார்.
v 2021ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆனதில் இருந்து, அவரது தி.மு.க. அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் உலகின் முன்னணி நிறுவனங்களான பார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட 130 நிறுவனங்களிடம் இருந்து ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
அலப்பறைகள் முடிவதில்லை..
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடி மரம் சேதமான நிலையில் அதனை மாற்றி அமைக்கும் பணியில் கடந்த 3-ந் தேதி இந்து அறநிலை துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஈடுபட்டனர்.
இதற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து வழக்கு 4-ந் தேதி சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும், 15 நாட்களுக்கு எந்தவிதமான பணியும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர்.
இந்த நிலையில் கோவில் தீட்சிதர்கள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பிரதான வழியை இரும்பு கதவு வைத்து அடைத்துள்ளனர். இதனால் பல நூற்றாண்டு காலம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழி தடைபட்டுள்ளது.
இந்த கோவிலில் பூஜை செய்யும் பட்டாசிரியர்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தற்போது நடராஜர் கோவில் வழியாகச் சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றம் 15 நாட்களுக்கு கொடிமர பணிகளுக்கு மட்டுமே தடை விதித்துள்ளது. ஆனால் தீட்சிதர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பிரதான வழியை இரும்பு கதவு வைத்து அடைத்துள்ளனர்.
எனவே இதனைத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புகார் சிதம்பரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.