அலைகடலென திரண்டு..
"வரலாற படிக்காம Fascism-னா என்னவென்றே தெரியாதவங்ககூட எல்லாம் நாம அரசியல் செய்ய வேண்டியிருக்கு..!-மதிவதனி .
சர்க்கரை நோய் வந்து விட்டாலே வாழ்க்கை முழுவதும் தினசரி மாத்திரை மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். மாத்திரை,மருந்துகள் இல்லாமலேயே அதை குறைக்க முடியுமா என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது.
மாத்திரை மருந்துகள் இல்லாமல் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும் என்றும் அதற்கு சரியான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை ஆரம்ப கட்டத்திலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
என்னென்ன உடற்பயிற்சிகள் செய்து சர்க்கரை அளவை குறைக்கலாம் என்னென்ன உணவுகள் சாப்பிட்டு சர்க்கரையை குறைக்க முடியும் என்றெல்லாம் இதில் பார்க்கலாம்.
ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட உடற்பயிற்சிகள் தான் இவை. இதில் முதலில் கூறுவது சைக்கிள் உடற்பயிற்சி. சைக்கிள் ஓட்டுவது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
ஒரு நாளைக்கு 12 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது நல்லது. அந்த 12 நிமிடம் சைக்கிள் ஓட்டுவதால் உடலில் சர்க்கரை அளவு குறையும். அதேபோல இன்சுலின்கள் சுரக்கும் ஆனால் பாதிக்காது. கொழுப்புச் சத்து குறைய ஆரம்பிக்கும், இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தையும் குறைக்கும்.
எல்லா வயதினருமே இந்த சைக்கிள் ஓட்டும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
சைக்கிள் ஓட்ட முடியவில்லை என்றாலும் சைக்கிள் ஓட்டுவது போன்ற அசைவு தரக்கூடிய நிறைய உடற்பயிற்சி உபகரணங்கள் உண்டு. அதையும் வாங்கி பயன்படுத்தலாம்.
12 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது சர்க்கரை நோய் மட்டும் கிடையாது அன்றைய நாள் முழுதும் உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும்.
மிகவும் அதிக வயதானவர்கள் சைக்கிள் ஓட்ட முடியாது என்பதால் படுத்துக்கொண்டு பாதத்தை நீட்டி மடக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும். கால்களில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிய ஆரம்பிக்கும் போது ரத்தநாளங்களில் விரிவடையும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இந்த உடற்பயிற்சியை அமர்ந்து கொண்டும் செய்யலாம். அதாவது குனிந்து நிமிர்ந்து பாதத்தை தொட்டும் செய்யலாம். இதனால் இடுப்பு பகுதிக்கும் நல்லது நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.
இதே மாதிரி உள்ளங்கையையும் கீழே மேலே என அசைக்கலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுகள் என்னென்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
டீ, காபி குடிப்பவர்களுக்கு சர்க்கரை, ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு வேளை டீ, காபிகளை குடிக்கலாம்.
வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, ப்ரோக்கோலி மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். கேரட், கொய்யா, பூசணிக்காய், ஆப்பிள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக முதன் முதலில் உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக பலத்தை போட்டு உடற்பயிற்சி செய்யக்கூடாது.
மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். அதேபோல தண்ணீர் அவ்வப்போது குடிக்க வேண்டும்.
அலைகடலென திரண்ட
கனடாவில் இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 பேர் மட்டுமே வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இந்த விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியிருந்தது. இந்த நிலையில் கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோயிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இதை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக கண்டித்திருந்தார். இந்த நிலையில் இந்துக் கோயில்களை தாக்கிய பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் வருவோர் என எதிர்பார்க்கப்பட்டதால் உதவி ஆணையர் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
ஆனால் இன்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுன் சம்பத் உள்பட 11 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து அர்ஜுன் சம்பத், அவருடைய ஓட்டுநர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் அவருடைய கார் சாலையில் கேட்பாரற்று இருந்தது. பின்னர் போலீஸார்அந்தகாரைஓரமாகநிறுத்தினர்..