இன்று..

 14/11/2024.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் செயல்படுத்தப்பட இருந்த டிஜிட்டல் முறை மதுபான விற்பனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் இருப்பில் உள்ள பழைய மதுபானங்கள் விற்றுத் தீர்ந்த பின்னர், நாளை முதல் டிஜிட்டல் முறையை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் எதிரொலியாக காஞ்சிபுரம், போடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், புறநோயாளிகள் பிரிவில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் கோவையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 16-ந் தேதி வரை பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்களை போலவே பெண்களின் திருமண வயதையும் 21-ஆக உயர்த்துவது குறித்து, வரும் 22-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. இரு பாலருக்கும் திருமண வயது 21-ஆக உயர்த்தி கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்கள் விற்பனை தொடங்கியுள்ள நிலையில் க்யூஆர் கோட் பயன்படுத்தி பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
மதுபாட்டில்களில் இருக்கும் விலையை விட கூடுதலாக 10-40 வரை வசூலிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.

"உலகநாயகன் பட்டத்தை துறந்தது, தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு.

இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தமிழிசைக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது என்று, மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், கூறியுள்ளார்.


திருச்சி நாமக்கல் சாலையில், இரு சக்கரவாகனத்தில் சென்றபோது வாகனம் சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 சிறுமிகள் உயிரிழந்த நிலையில், ஒரு சிறுமி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமின் கோரி கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?