தமிழர்களின் ஆதரவும் ஏகேடி க்கே.

 தனக்கு படைக்கபடும் லட்டு கலப்படம் செய்யாரங்கன்னு கூட தெரியாம திருப்பதி பெருமாள் கண்ணை மூடிட்டு இருந்திருக்கார். இதில் 11 நாள் தவமா

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் பூங்கா, பசுமைவெளி அமைக்கப்படும்!: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
“மோடி வெளிநாடுகளில் மட்டுமே இருக்கிறார் - இந்தியாவில் இருப்பது குறைவு தான்” : தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!





தமிழர்களின் ஆதரவும்

 ஏகேடி க்கே.

கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக இன்று பதவியேற்கிறார். இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்க உள்ளார்.

 இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார். 

தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அநுர குமார திசநாயக இலங்கையின் புதிய அதிபராகிறார். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்தது. 

இதில் அனுர குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அது யாருக்கும் கிடைக்காததால், முதல் இரண்டு இடங்களை பிடித்த அனுர குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

 நேற்று 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இதில் அனுர குமார திசநாயகே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

 இதனையொட்டி கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் அனுர குமார இன்று (செப்.23) இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.

இவர் இலங்கையின் 9வது அதிபர் ஆவார். அனுர குமார திசநாயக்கே அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஜேவிபி (ஜனதா விமுக்தி பெருமுனா) எனப்படும் இடதுசாரி கட்சியின் தற்போதைய தலைவராக உள்ள இவர் இலங்கையில் மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தவர்.

 ஏகேடி என அழைக்கப்படும் அனுர குமார திசநாயக்க கடந்த 2022-ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்.

 மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு, இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகேடி

 சில குறிப்புகள்..

அநுர குமார திசநாயக்கே(ஏகேடி)வை பற்றி பார்ப்பதற்கு முன் அவரின் மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுனா) கட்சியைப் பற்றி பார்த்தாக வேண்டும்.

அப்போதுதான் அநுர குமாராவின் எழுச்சியையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும். ஜனதா விமுக்தி பெரமுனா மார்க்சிய சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்ட இடதுசாரி கட்சி. இலங்கையில் இடதுசாரி கட்சிகளின் இயக்கம் 1935-லிருந்து தொடங்குகிறது.


லங்கா சமநிலை சமூக கட்சி என்ற கட்சிதான் அந்த சமயத்தில் இலங்கையின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியாக இருந்தது. கருத்து மோதல்களால் இந்த கட்சி உடைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சி உதயமாகிறது. சோவியத் யூனியனிலும் சீனாவிலும் நடந்த மாற்றங்களைத் தொடர்ந்து இந்த கட்சியும் இரண்டாகப் பிரிந்தது.


1964-ல் இலங்கையில் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. அப்போது வாடிக்கொண்டிருந்த மக்களின் பக்கம் நிற்காமல் அரசின் பக்கமாக இந்த இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நிற்கவே அதிருப்தி ஏற்படுகிறது. இந்த சமயத்தில்தான் ரோஹன விஜேவீராவின் எழுச்சி ஆரம்பிக்கிறது.


கம்யூனிச பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர் ஒரு ஸ்காலர்ஷிப்பின் மூலம் மாஸ்கோவுக்குச் சென்று உயர்கல்வி படித்து வந்தார். இங்கிருக்கும் பழைய இடதுசாரி இயக்கங்களினால் உழைக்கும் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எனக் கூறி புதிய கட்சியைத் தொடங்கும் வேலையில் இறங்குகிறார். பழைய இடதுசாரி இயக்கங்கள் அரசுடன் கைகோத்து நின்றதால் ரோஹன விஜேவீரா அரசால் கைதும் செய்யப்படுகிறார்.

ரோஹன விஜேவீரா

சிறையிலிருந்து வெளியே வந்தவர் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சியையும் தொடங்குகிறார். கொழும்புவில் கட்சியின் முதல் பேரணியை விஜேவீரா நடத்தியபோது பழைய இடதுசாரி இயக்கங்கள் இவரை அமெரிக்காவுடைய சிஐஏவின் கைக்கூலி என்று விமர்சித்தனர்.


அந்த தொடக்கக்காலத்துக்கு பிறகும் கிளர்ச்சிகள், போராட்டம், வன்முறைகள், அடக்குமுறை என எவ்வளவோ விஷயங்களை கடந்துதான் ஜனதா விமுக்தி பெரமுனா அதிபர் தேர்தலில் வெல்லும் நிலைக்கு வந்திருக்கிறது.


அநுர குமார திசநாயக்கே 1968-ல் அநுராதப் புரத்தில் கூலித்தொழிலாளியின் மகனாக பிறந்தவர். இலங்கை பெரும்பாலான சமயங்களில் எதோ ஒரு அரசியல் நெருக்கடியால் பீடிக்கப்பட்ட தேசமாகவே இருந்திருக்கிறது. அநுர குமார வளர்ந்து வந்த காலக்கட்டமும் ஜனதா விமுக்தி பெரமுனா பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த காலக்கட்டமும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தவை.


80 களின் இறுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் கால் பதித்ததற்கு எதிராகவும் ராஜிவ் காந்தி ஜெயவர்த்தனா ஒப்பந்தத்துக்கு எதிராகவும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டது. இந்த சமயத்தில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்த அநுரா ஜனதா விமுக்தியின் மாணவர் அமைப்பில் சேர்கிறார். தீவிரமான அரசியலில் ஈடுபடுகிறார்.

1990 களுக்குப் பிறகு ஆயுதப் போராட்டங்களை விடுத்து ஜனநாயக அரசியலுக்குள் முழமையாக இறங்குவதாக ஜனதா விமுக்தி பெரமுனா அறிவிக்கிறது. அநுராவும் மாணவர் அமைப்பு மூலம் கட்சிக்காக தீவிரமாக உழைக்கிறார். 1995 இல் சோசலிச மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அநுரா தேர்வாகிறார். ஜனதா விமுக்தியின் மத்திய குழுவிலும் அவருக்கு இடம் கிடைக்கிறது.


1998 இல் கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் பொலிட்பியூரோவில் உறுப்பினராகிறார். 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றிபெற்றார். படிப்படியாக முன்னேறியவர் 2014 இல் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்து சேர்ந்தார்.

அநுரா

2022 இல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் மக்களை ஜனதா விமுக்தியை நோக்கி திரும்ப வைத்தது. 'நாட்டு மக்கள் இதுவரை ஆட்சி செய்த கட்சிகளின் மீது அதிக நம்பிக்கையை வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர். இங்கே ஒரு அடிப்படை மாற்றமே தேவைப்படுகிறது.' என அநுரா பிரசாரம் செய்தார்.


பொருளாதார நெருக்கடியை நீக்குகிறேன் என்ற பெயரில் நம்முடைய நாட்டின் வளங்களையும் மதிப்புமிக்க சொத்துகளையும் வெளிநாடுகளிடமும் சர்வதேச அமைப்புகளிடமும் ஆளும்தரப்பினர் அடகு வைக்கின்றனர் என்றார். 'மக்கள் கையறு நிலையில் இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையிலிருந்து எங்களால் மட்டுமே தேசத்தை மீட்க முடியுமென மக்கள் நம்புகின்றனர்' என்றார். தங்களுடைய கட்சியினர் நிகழ்த்திய கடந்தகால வன்முறைகளுக்காக பகிரங்க வருத்தத்தை தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி தங்களுடைய கொள்கைகளிலும் வளர்ச்சி சார்ந்து சில சமரசங்களை செய்து கொண்டார்.


கிட்டத்தட்ட பாழ்பட்டு போயிருக்கும் சமூகத்தை மீட்க வந்த புரட்சியாளனாக மீட்பனாக தன்னையும் ஜமுதா விமுக்தி பெரமுனாவையும் மக்கள் நினைப்பதாக அநுரா எண்ணினார். இப்போது தேர்தல் முடிவுகள், அவரை அதிபராக்கியிருக்கின்றன.


பிரேமதேசாவின் மகன் என குடும்ப சென்டிமென்ட் பேசிய சஜித் பிரேமதேசாவையும் மக்கள் சீண்டவில்லை. 'கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்தவரை தேசத்தை மீட்டுவிட்டேன். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருக்கிறது. அதற்காக வாய்ப்புக் கொடுங்கள்.' என ஒன்ஸ்மோர் கேட்ட ரணில் விக்ரமசிங்கேவையும் மக்கள் நிராகரித்திருக்கின்றனர்.


கடந்த அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அநுரா 3.16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

காலம் மாறியிருக்கிறது.

சூழல் மாறியிருக்கிறது.


ராஜபக்சே ஆட்சி அவலம்,பொருளாதார வீழ்ச்சி மக்களின் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.


அநுரா குமார திசநாயக்கே அதிபர் அரியணையில் அமரவிருக்கிறார்.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?