அத்துமீறலின் பின்னணி

 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின்துணைமுதலமைச்சராகிறார்.திட்டமிடல்மற்றும்வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. 
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  புதிதாக 4 பேர் அமைச்சர்களாக சேர்ப்பு.  இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. 
மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்.
கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது. 150 ஆண்டுகால பழமையான டிராம் சேவையை நிறுத்துவது என்று மேற்கு வங்க அரசு முடிவு. கொல்கத்தாவில் 1873-ல் அறிமுகமான டிராம், பிறகு நாசிக், சென்னை, நாசிக், மும்பையில் இயக்கப்பட்டது.மக்கள் குறைந்த கட்டணத்தில் சென்று வர டிராம் உதவிகரமாக இருந்தது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில்27சிப்காட்தொழிற்பூங்காக்கள் தொடக்கம்: மேம்படும் பொருளாதார வளர்ச்சி - உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு ; அடுத்தாண்டிற்குள் 22 தொழில் பூங்காக்களை உருவாக்க அரசு திட்டம்.

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைப்பு!”

துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.

 செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்.

மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!


அத்துமீறலின் பின்னணி


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடித்த கதை யாக உள்ளது.


வரம்பு மீறிப் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்ட அவர், தற்போது இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தையே  கேள் விக்குறியாக்கும் அளவிற்குச் சென்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆர். என்.ரவி, “மதச்சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பியக் கருத்து. இது ஒரு இடைச்செருகல். இந்தியாவிற்கு மதச்சார்பின்மை தேவை யில்லை” என்றெல்லாம் பேசியுள்ளது அதிர்ச்சி யளிப்பதாக உள்ளது.

தி டிரிபியூன் ஏடு தனது தலையங்கத்தில் ஆளுநர் ரவி தன்னுடைய அரசியல் சாசன கடமையை மறந்துவிடக்கூடாது என்றும், பொறுப்போடு நடத்து கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, நாட்டின் மதச் சார்பற்ற கட்டமைப்பை பலவீனப்படுத்த முயல்வது விபரீதமானது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.  


ஆளுநர் என்பது அலங்காரப் பதவி தான்

இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை உரு வாக்குவதற்காக அரசியல் நிர்ணயசபையில் நீண்ட, நெடிய விவாதங்கள் நடந்துள்ளன.  அப்போது, எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விக ளுக்கு அண்ணல் அம்பேத்கர் பதிலளித் துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கே அதிகாரம் என்றும், ஆளுநர் அதற்குக் கட்டுப்பட்டவரே என்று அம்பேத்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.


30.5.1949 - அன்று அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பதவி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டுமா;  அல்லது நிய மிக்கப்பட வேண்டுமா என்ற விவாதத்திற்குப் பதிலளித்த அம்பேத்கர், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன, நியமிக்கப் பட்டால் என்ன, ஆளுநர் என்பது அலங்காரப் பதவிதான்; அவருக்கென்று அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தவொரு அதிகாரமும் கொடுக் கப்படவில்லை என்றார். 


மேலும் பல்வேறு தருணங்களில் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப் பட்டவர்தான் ஆளுநர் என்பதை உச்சநீதி மன்ற தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலவரையறையின்றி கிடப்பில் போட்டு வைத்திருந்ததை எதிர்த்து திமுக அரசு தொடுத்த வழக்குகளிலும் மாநில அரசை விட ஆளுநர் மேலதிகாரம் உடைய வரல்ல எனச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் ஆளுநர் தலையில் ஓங்கிக் கொட்டியது.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இதே போல் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் அடாவடி செய்தபோதும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றம் ஆளுநரை இடித்துரைத்தது.


கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில நிதிஅமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவியிலிருந்து நீக்கவேண்டுமென்று முத லமைச்சர் பினராயி விஜயனுக்கு கட்டளை யிடும் அளவிற்குச் சென்றார். அமைச்சர்கள் நியமனம் என்பது முதல்வரின் பிரத்தியேக உரிமை என்பதைக்கூட அவர் மறந்துவிட்டார். ஆனால், இவருடைய மிரட்டலுக்கு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு பணியவில்லை.


ஆளுநர் பொறுப்பு என்பது ஒன்றிய ஆட்சியாளர்களால் வழங்கப்படுகிற ஒரு நியமனப் பதவி தான். கடந்த காலங்களில் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் இருந்த போது அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களைக் கலைப்பதற்கு ஆளுநர்களின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு பயன் படுத்திக்கொண்டது.


அரசியல் சட்டத்தின் 356-ஆவது பிரிவு ஒன்றிய அரசால் பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி முதன்முதலாக தோழர் இ.எம்.எஸ். தலைமையிலான  கம்யூனிஸ்ட் கட்சி அரசு 1959-ஆம் ஆண்டு அன்றைய ஜவஹர்லால் நேரு அரசால் கலைக்கப்பட்டது.


தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் அரசியல் சட்டத்தின் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்திக் கலைக்கப்பட்டுள் ளன. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் அரசியல் சட்டத்தின் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்து வதற்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்ட பிறகுதான் மாநில அரசுகளை இஷ்டம்போல் கலைப்பது ஓரளவு மட்டுப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ்  பிரச்சாரகர் போல்...

நரேந்திரமோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பி னால் பயிற்றுவிக்கப்பட்ட பலர் மாநில ஆளு நர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்க ளில் ஒருவர் தான் ஆர்.என்.ரவி. இவர் காவல்துறையில் பணியாற்றியபோதோ அல்லது நாகாலாந்தில் ஆளுநராக இருந்த போதோ இவருடைய செயல்பாடுகள் சிறப்பு மிக்கதாக இல்லை. இவர் அரசியல்வாதியல்ல.


காவல் துறை அதிகாரியாக இருந்து ஆளு நராக நியமிக்கப்பட்டவர். காவல்துறையில் எப்படி மேலதிகாரிகளின் உத்தரவை கீழே உள்ளவர்கள் அப்படியே அமல்படுத்து வார்களோ அப்படியே இவரும், ஒன்றிய அரசும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூறுவதை அப்படியே செய்து வருகிறார். 

தமிழ்நாட்டின் ஆளுநராக இவர் நிய மிக்கப்பட்ட பின்பு ஒரு போட்டி அரசாங்கத் தையே நடத்த முயல்கிறார்.


அரசியல் சட்ட நெறிகளின்படி நடப்பதை விட ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் போலவே நடந்துகொள்கிறார்.

வெளிநடப்பு  செய்த ஆளுநர்

ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கைக் குறிப்பின் தொகுப்பே ஆகும். மாநில அரசு தயாரித்துத்தரும் உரையில் ஆளு நருக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதை முறையாகத் தெரிவிக்கலாம். ஆனால், ஆர்.என்.ரவி 9.1.2023 அன்று திமுக அரசு தயாரித்துக்கொடுத்த ஆளுநர் உரையில் சில பகுதிகளை படிக்க மறுத்தார். சிலவற்றை இவராக சேர்த்துக்கொண்டார். இப்படிச் செய்வ தற்கு இவருக்கு எந்த உரிமையும் இல்லை.


ஆளுநர் படிக்க மறுத்த பகுதிகளும் உரை யில் இடம்பெறுமென  பேரவை விதி 17-ஐ  தளர்த்தி முதல்வர் தீர்மானம் கொண்டுவந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையிலி ருந்து வெளிநடப்பு செய்தார். இது தமிழக சட்டமன்றத்தில் இதுவரை நடைபெறாத ஒன்று. இதே போல இவரது அத்துமீறல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


பல்வேறு விழாக்களுக்குச் செல்லும்போது மதச்சார்பற்ற இந்தியாவின் மாண்புகளுக்கும் விழுமியங்களுக்கும் மாறாக ஆர்எஸ்எஸ் பள்ளியில் படித்த பிற்போக்கான சரக்குகளை எடுத்துவிடுவதை இவர் வழக்கமாகக் கொண் டுள்ளார். குழந்தைத் திருமண முறையை ஆதரிக்கும் அளவிற்குச் சென்றது இவரது விபரீதப்போக்கு. நான்கூட குழந்தைத் திரு மணம் செய்துகொண்டவன் தான்.

எங்கள் இல்வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது என்றெல்லாம் தான் வகிக்கும் பொறுப்புக்கு அழகற்ற வகையில், சமூகத்தைப் பின்நோக்கி இழுக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

தமிழ்நாடு என்பதையே மறுத்தார்

மொழிவழி மாநிலங்கள் என்பதை முதன்முதலில் முன்மொழிந்தவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள்.


சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டு மென நாடாளுமன்ற மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவந்தவர் தோழர் பி.ராம மூர்த்தி. இது விவாதத்திற்கு வந்தபோது தோழர் பி.ராமமூர்த்தி அவையில் இல்லாத சூழலில் வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் பூபேஷ்குப்தா இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அறிஞர் அண்ணா இதை ஆதரித்துப் பேசினார்.


இந்தப்பின்னணியில் தான்  அறிஞர் அண்ணா முதல்வரான பிறகு 1967-ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப் பட்டது. இந்த பெயர் மாற்றத்திற்காகக் காங்கி ரஸ் தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம் செய்த வரலாறும் உண்டு. அன்று சங்கரலிங்க னாருக்குத் துணை நின்றவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள். ஆனால், ஆர்.என்.ரவி போகிற போக்கில் தமிழ்நாடு என்ற பெயர் பொருத்த மற்றது என்று உளறி, வாங்கிக் கட்டிக் கொண்டார்.


வள்ளுவருக்கு காவிச்சாயம்

திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது, இராமலிங்க அடிகளார் ஒரு வர்ணாசிரமவாதி என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி வந்த இவர், மாநில அரசின் கல்வித் திட்டம் தர மற்றது என்று ஆதாரமில்லாத அபாண்டத்தை யும் சுமத்தினார்.


இவர் வெற்று விளம்பரத்திற்கா கவும் பரபரப்புக்காகவும் சர்ச்சைகள் ஏற்ப டுத்துவதை தனது பாணியாகவே கடைப்பிடித்து வருகிறார் என்று மட்டும் கருத முடியாது; வலதுசாரி கருத்துக்களை வாய்ப்புக் கிடைக் கும் போதெல்லாம் பேசி வருவதாகவே கொள்ள முடியும்.

அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல்

இப்போது மதச்சார்பின்மை என்ற கோட் பாட்டின் மீதே தாக்குதல் தொடுத்துள்ளார் ஆளுநர்.


அரசமைப்புச் சட்டம் 42-ஆவது திருத்தத்தின்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் “இந்தியா என்பது இறையாண்மையுள்ள சோசலிச, மதச்சார் பற்ற, ஜனநாயகக் குடியரசு” என்று திருத்தப் பட்டது. இந்தத் திருத்தம் பொருத்தமான ஒன்று.  ஆனால், மதச்சார்பின்மை என்ற வார்த்தை யையே அகற்ற வேண்டும் என பாஜக-வினர் விரும்புகின்றனர். அதைத் தான் ஆளுநரும் பேசுகிறார்.


அரசியல் சட்டப்பிரிவுகள் 14, 15, 16 ஆகிய வற்றில் இந்தியக் குடிமக்களை மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறந்த இடத்தின் அடிப்ப டையில் பாரபட்சமாக நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசியல் சட்டப்பிரிவு - 25 அனைத்துக் குடிமக்களின் மதச்சுதந்தி ரத்தை உறுதிப்படுத்துகிறது. அந்தப் பிரிவு அவரவர் சார்ந்த மதப்பிரச்சாரத்தையும் உறுதிப்படுத்துகிறது.

அதே நேரத்தில் ஒருவர் எந்த மதத்தையும் சாராமல் இருப்பதையும் அனுமதிக்கிறது. அரசியல் சட்டப்பிரிவு -26 மதத்தின் அடிப்படையில் நிறுவனங்கள், அறக் கட்டளைகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை யை உறுதி செய்கிறது.


மதச்சார்பின்மை என்பது அரசிலிருந்து மதம் முற்றாக விலகி நிற்க வேண்டும் என்பது தான். மக்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற லாம். ஆனால், அரசு என்பது எந்தவொரு மதத்தின் அடிப்படையிலும் இருக்கக்கூடாது என்பதுதான் மதச்சார்பின்மையின் உயர்ந்த பொருளாகும்.


அரசியல் சட்டத்தின் சாராம்சமாக மதச் சார்பின்மை என்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அடிப்படைக் கடமைகள், வழிகாட்டு நெறி முறைகள் பகுதிகளிலும் மதச்சார்பின்மை என்பது உள்ளார்ந்த பொருளில் இடம் பெற்றுள்ளது.

அரசியல் சட்டத்தை ஏற்காதவர்கள்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதச்சார்பற்ற அர சமைப்புச்சட்டத்தை அப்போதே ஏற்க மறுத்தது. மனு நீதியின் அடிப்படையில் தான் அரசமைப்புச் சட்டம் இருக்கவேண்டுமென்பது அவர்களது கருத்தோட்டம்.


ஆனால், அதை நிராகரித்து அரசியல் சட்டத்தில் மதச்சார் பின்மை உறுதிசெய்யப்பட்டது. இதில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் ஆகி யோருக்கு முக்கியப்பங்குண்டு.

ஆனால் அன்றைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குரலையே ஆளுநர் இப்போது எதிரொலிக்கிறார். இது ஒரு தனி மனிதரின் கோளாறான கருத்து என்று மட்டும் கடந்துவிட முடியாது. 


மூலதனத்திற்கு  இது இப்போது தேவை

உலகம் முழுவதும் வலதுசாரி சக்திகள் சமீப காலத்தில் பலமடைந்து வருகின்றன. மறு புறத்தில் இடதுசாரிகளின் போராட்டங்களும் வலுவாகத்  தொடர்கின்றன. அமெரிக்காவில் டிரம்ப்பின் குரல் கடைந்தெடுத்த வலதுசாரி களின் கருத்தை பிரதிபலிப்பதாகும். பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இந்தப் போக்கு தலை தூக்கியுள்ளது.


மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அதிகாரத்தைத் தக்கவைக்கும் முயற்சிகள் உலகம் முழுவதும் உள்ளது. சர்வதேச நிதி மூலதனம் இதன் பின்னணியில் உள்ளது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பி னால் வழி நடத்தப்படும் பாஜக கூட்டணி ஆட்சி நவீன இந்தியாவின் மாண்புகளையும், விழுமியங்களையும் சிதைத்து தங்களது பிற்போக்குக் கொள்கைகளைப் பலமுனைக ளிலும் திணிக்க முயல்கிறது.

பிரதமர் நரேந்திமோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் தொடங்கி ஆளுநர்கள் வரை இதற்கேற்பவே பேசுகின்றனர். வகுப்புவாத திரட்சியை முதலாளித்துவம் தனக்குச் சாதகமானதாகவே கருதுகிறது. இந்தச் சூழ லைப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.

பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப் படும் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சியென்பது தங்களது சுரண்டலுக்கு மதம் மற்றும் சாதி, இன அடிப்படையிலான வெறுப்பு வளர்க்கப்படுவது நல்லது எனக் கருதுகிறது.


இந்தியாவில் வேலையின்மை, வறுமை போன்றவை மிக முக்கிய பிரச்சனைகளாக நீடிக்கின்றன. தொழில் வளர்ச்சி என்று ஆட்சி யாளர்கள் தப்பட்டம் அடித்தாலும் வேலை வாய்ப்பு உருவாகவில்லை. இதிலிருந்து மக்களை திசை திருப்ப ஏதாவது ஒரு பிரச்ச னையை கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கின்றனர்.  

பன்மைத்துவம் பாதுகாக்கப்பட...

கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் வகுப்பு வாதத்திற்கும் இடையே  நெருக்கமான பிணைப்பு உள்ளது.


இதைப் பாதுகாக்கவே நரேந்திரமோடி அரசு முயல்கிறது.

பன்னெடுங்காலமாக இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். விடுதலைப் போராட் டத்தின் அடிநாதமாக மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் இருந்தது. இதன் விளைச்சல் தான் விடுதலையும் மதச்சார்பின்மையைக் அடிப்படையாகக் கொண்ட அரசியல் சட்டமும் ஆகும்.


இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாது காக்க, மதச்சார்பின்மை என்கிற கருத்தியல் மிகவும் அவசியமாகும். ஆனால், அனைத்தி லும் ஒற்றைத் தன்மையைத் திணிக்க சங் பரிவாரங்கள் துடிக்கின்றன. மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, மாநில உரிமைகள் போன்ற கோட்பாடுகள் தங்களது எதேச்சதிகார நோக்கங்களுக்கு இடையூறாக இருப்பதால் அவற்றைத் தகர்க்க முயல்கின்றன.

அதைத் தான் தமிழ்நாடு ஆளுநரும் பிரதிபலிக்கிறார்.


இடதுசாரி சக்திகள் மாநில உரிமைக ளுக்காகவும், மதச்சார்பின்மை கோட்பாட்டிற் காகவும், ஜனநாயகத்திற்காகவும் தொடர்ந்து இடையறாது போராடி வருகின்றனர். அனை த்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் இடதுசாரி சக்திகளும் இணைந்து நின்று  மதச்சார்பின்மையையும் மாநில உரிமைக ளையும் பாதுகாக்க ஒன்றுபட்டுப் போராட வேண்டியது காலத்தின் தேவையாகும். 

டி.கே.ரங்கராஜன் 

மூத்த தலைவர், சிபிஐ(எம்) 

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?