மஞ்சள் மழை

 தேனியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம் .

சூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து.

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைக்ககு முதலமைச்சர் இன்று அடிக்கல்.
சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.
தேவஸ்தான அறங்காவலர்கள் அனுமதியுடன்தான் நெய் கொள்முதல்; திருப்பதி லட்டில் அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு: ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

மஞ்சள் மழை இங்கே போழிகின்றது?

சீனாவின் தெற்கு பகுதியில் வியட்நாம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரம் நான்னிங். சீனாவின் பரபரப்பு மிக்க நகரங்களில் ஒன்றாக இதுவும் உள்ளது. இங்குள்ள பிசியான சாலைகளில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும். 

இந்த நிலையில் தான் அங்குள்ள பரபரப்பான ஒரு இடத்தில் சாலையின் நடுவே கழிவு நீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் கட்டுமான பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

கட்டுமான பணியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் திடீரென கழிவு நீர் குழாய் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. கழிவு நீர் குழாய் வெடித்ததும் அதிலிருந்து மனித மலம் 33 அடி உயரத்திற்கு பீறிட்டு பாய்ந்தது. துர்நாற்றத்துடன் மழை போல கொட்டியதால் என்னடா இதுன்னு... அங்குள்ள வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மூக்கை பிடித்தபடி அதிர்ச்சியில் உறைந்தனர்.

சில கார்களின் ஜன்னல் கண்ணாடி, முன்பக்க கண்ணாடி முழுவதும் மனிதக் கழிவுப் படிந்தது.. நடந்து சென்ற சிலரின் தலை முதல் கால் வரை மனித மலம் மழை போல் பொழிந்ததால் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். சினிமாவில் கூட இப்படி எல்லாம் நடக்காது என யோசிக்கும் அளவுக்கு இந்த விசித்திரமான சம்பவம் கடந்த 24 ஆம் தேதி சீனாவில் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

காரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் பதிவான காட்சியில் தண்ணீர் போல செங்குத்தாக பல அடி உயரத்திற்கு சென்ற மனித கழிவுகள் மஞ்சள் மழையாக கொட்டுகிறது. வீடியோ எடுத்த காரின் முன்பக்க கண்ணாடி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியதால் வாகனத்தை இயக்க முடியாத நிலைக்கு அந்த வாகன ஓட்டி தள்ளப்பட்டார்.. ஒரு சில நிமிடங்கள் வரை இந்த மஞ்சள் மழை நீடித்தது.

பத்திர மோசடி வழக்கு.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவினர் முறைகேடு செய்து, அச்சுறுத்தி பணம் வசூல் செய்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.

இதனையடுத்து, தேர்தல் பத்திரம் நடைமுறைப்படுத்த ஒன்றிய நிதி அமைச்சகம் தான் முக்கிய காரணம்.

தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தது ஒன்றிய நிதி அமைச்சகம் தான்.

இதனால் தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூருவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது.


இதைத்தொடர்ந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய பாஜக தலைவர் விஜயேந்திரா மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?