முக­ம் மாறுமா?

 நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் கிரிமினல் வழக்கு. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.

முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தாகூறிய விவகாரம். "நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேச கூடாது" உச்ச நீதிமன்றம் கண்டனம்.

இஸ்ரேலில் தயாராகும் ஆயுதங்களுக்கு அதானி லேபிள் ஒட்டப்பட்டு இந்திய ராணுவத்துக்கு சப்ளை செய்யப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 50 பேரவை தொகுதிகளுக்கு ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 40 பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோப்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “மேக் இன் இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருவதாக பாஜ பேசுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இஸ்ரேலிய நிறுவனங்கள் ஆயுதங்களையும், ஆளில்லா விமானங்களையும் தயாரிக்கிறது. அதற்கு அதானியின் லேபிள் ஒட்டப்படுகிறது. அவை அனைத்தும் அதானியால் தயாரிக்கப்பட்ட இஸ்ரேலிய ஆயுதங்கள். அவை எப்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என சொல்ல முடியும். விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாதுகாப்புத்துறை ஆயுதங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள்கள் கூட அதானியின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையங்களுக்கு அதானி வரியும், மொபைல் போன்களுக்கு அம்பானி வரியும் விதிக்கப்படுகிறது. நீங்கள் சாலையில் செல்ல வேண்டுமென்றால் அதற்கான வரி அதானிக்கு செல்கிறது.

தானிய உற்பத்திக்கான வரி, ராணுவ ஆயுதங்கள், தோட்டாக்கள் மீதான வரிகளும் அதானிக்கு போகிறது. ஒரு விமான நிலையத்தை வேறு யாரேனும் நடத்தினால், அவர்கள் அந்த வசதியை அதானியிடம் ஒப்படைக்கும்படி சிபிஐ, அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகின்றனர். அதானி, அம்பானி போன்ற 25 தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை ரத்து செய்த பாஜ அரசு, விவசாயிகள், மாணவர்கள், அதிக செலவு செய்த நோயாளிகளின் வங்கி கடனை ரத்து செய்ய மறுக்கிறது. பாஜ ஆட்சியில் அதானி, அம்பானிக்கு மட்டுமே இடம் உள்ளது. ஜிஎஸ்டியும், பணமதிப்பிழப்பும் அதானி, அம்பானியை மேலும் வளப்படுத்தவே கொண்டு வரப்பட்டன. ஆனால் இவை எல்லாம் இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்?” என்று புள்ளிவிவரங்களுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முக­மும் குண­மும் மாறுமா?

இலங்­கைக்கு புதிய அதி­பர் வந்து விட்­டார். அந்த நாட்­டின் முக­மும்

குண­மும் மாறுமா என்­பதே இப்­போது எழுந்­துள்ள கேள்வி ஆகும்.

வகுப்­பு­வாத - – இன­வாத - – எதேச்­ச­தி­கார அர­சாட்­சி­யாக நடை­பெற்று அனைத்து வகை­யி­லும் மிக­மோ­ச­மான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளான நாடாக இலங்கை இருந்து வந்­துள்­ளது. மகிந்த ராஜ­பக்­சே­வின் ஸ்ரீலங்கா தேசி­யக் கட்­சி­யாக இருந்­தா­லும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கே­வின் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யாக இருந்­தா­லும் மாறி மாறி ஆட்­சிக்கு வந்து, ஒரே மாதி­ரி­யான இன­வா­தத் தன்­மை­யு­டன் அந்த நாட்டை வழி­ந­டத்­தி­ய­தன் விளை­வாக ஈழத் தமி­ழி­னம் அடைந்த துன்ப துய­ரங்­கள் சொல்லி மாளாது.

சிங்­க­ள­வர்­க­ளுக்­கா­வது நன்மை செய்­தார்­களா என்­றால் அது­வும் இல்லை. மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு அந்த நாட்­டைத் தள்­ளி­னார்­கள்.

இதோ இப்­போது இலங்கை அதி­பர் தேர்­தல் நடந்து, புதிய அதி­ப­ராக அனுர குமார திச­நா­யக தேர்ந்­தே­டுக்­கப்­பட்­டுள்­ளார். தேசிய மக்­கள் சக்தி முன்­னணி என்ற கூட்­ட­ணி­யின் வேட்­பா­ள­ராக இவர் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றி­ருக்­கி­றார். இப்­போது இலங்கை அதி­ப­ராக இருக்­கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்கே மூன்­றா­வது இடத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார். இப்­போது எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்து, அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யிட்ட சஜித் பிரே­ம­தாச இரண்­டா­வது இடத்­தையே பெற்­றார். மிகக் கொடூ­ர­மான பேர் பெற்ற மகிந்த ராஜ­ப­க்ஷே­வின் மகன், நாமல் ராஜ­ப­க்ஷே­வும் போட்­டி­யிட்­டார். அவ­ரும் தோற்­றுப் போனார்.

இலங்­கைக்கு இது 9 ஆவது அதி­பர் தேர்­தல் ஆகும். 38 வேட்­பா­ளர்­கள் போட்­டி­யிட்­டார்­கள். ஜனதா விமுக்தி பெர­முனா (ஜே.வி.பி.) கட்­சித் தலை­வ­ரான அனுர குமார திச­நா­யக, தேசிய மக்­கள் சக்தி முன்­னணி என்ற கூட்­ட­ணியை உரு­வாக்கி அதன் சார்­பில் இவர் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றி­ருக்­கி­றார். ஜே.வி.பி. எனப்­ப­டும் இந்த கட்சி இட­து­சா­ரிக் கொள்கை கொண்ட கட்­சி­யாக தன்னை அறி­மு­கம் செய்து கொண்ட கட்­சி­யா­கும். மார்க்­சிஸ்ட் –- லெனி­னிஸ்ட் கொள்கை கொண்­ட­தாக தன்னை அறி­வித்­துக் கொண்ட கட்சி. இதன் மூல­மாக இலங்­கை­யின் முதல் கம்­யூ­னிஸ்ட் அதி­பர் என்று இவரை அழைக்­க­லாம்.

2019 ஆம் ஆண்டு இவர் உரு­வாக்­கிய தேசிய மக்­கள் சக்தி முன்­னணி கூட்­ட­ணி­யா­னது மொத்­தமே 3 விழுக்­காடு வாக்­கு­களை மட்­டுமே பெற்­றது. ஆனால் இப்­போது நடை­பெற்ற தேர்­த­லில் 55.89 விழுக்­காடு வாக்­கு­களை இவர் பெற்று அதி­பர் ஆகி இருக்­கி­றார். அவரை அடுத்து வந்த சஜித் பிரே­ம­தாச, 44.11 விழுக்­காடு வாக்­கு­க­ளையே பெற முடிந்­தது.

இந்த தேர்­தல் முடி­வு­க­ளின் மூல­மாக இலங்­கை­யின் முக்­கி­யக் கட்­சி­கள் இரண்­டை­யும் அந்த நாட்டு மக்­கள் நிரா­க­ரித் திருக்­கி­றார்­கள். இட­து­சாரி இயக்­கத்­தின் மீது தங்­க­ளது நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள்.

ஜனதா விமுக்தி பெர­முனா என்ற இயக்­கத்­தின் தொடக்க காலம் கசப்­பா­னது ஆகும். ஆயுத வழியே சரி­யா­னது என்­ப­தில் உறு­தி­யாக இருந்த கட்சி அது. இலங்­கைத் தமி­ழர் பகு­தி­யில் போரா­ளி­கள் அமைப்­பு­கள் இருந்­த­தைப் போல சிங்­க­ளப் பகு­தி­யில் ஆயு­தம் தாங்­கிய போராட்­டத்தை இந்­தக் கட்சி நடத்­தி­யது. 1970 ஆம் ஆண்­டு­க­ளில் சுமார் 13 ஆயி­ரம் பேர் இந்த அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் கொல்­லப்­பட்­டார்­கள்.

1987 ஆம் ஆண்டு இந்­திய - – இலங்கை ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­ன­போது அத­னை­யும் இந்­தக் கட்சி எதிர்த்­தது. இலங்­கை­யின் உள்­நாட்­டுப் பிரச்­சி­னை­யில் இந்­தி­யா­வின் தலை­யீடு கூடாது என்று இந்­தக் கட்சி சொன்­னது. இந்­திய நாட்­டின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக மிகப்­பெ­ரிய கிளர்ச்சி நடத்­தி­யது. அதி­லும் இரண்டு தரப்­பி­லும் பல­ரும் கொலை­யுண்­டார்­கள்.

அதி­லும் பல்­லா­யி­ரக்கணக்கான­வர்­களை இக்­கட்சி இழந்­தது. அப்­போது மாண­வ­ரா­கக் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் இருந்­தார் அனுர குமார திச­நா­யக.

இலங்­கை­யில் இருக்­கும் சிறு­பான்­மை­யி­னர் உரி­மையை மறுத்த கட்­சி­யா­கத்­தான் ஜே.வி.பி. இருந்­தது. அதனை வன்­முறை வழி­யா­கச் சென்று போராட்­டம் நடத்­தி­யது. ஆனால் காலப் போக்­கில் வன்­மு­றைப் பாதையை அக்­கட்சி விட்­டு­விட்­டது.

சிங்­க­ள­வர் -– தமி­ழர்­கள் – இசு­லா­மி­யர் ஒற்­றுமை குறித்து பேசத் தொடங்­கி­யது. 2016 ஆம் ஆண்டு முதல் படிப்­ப­டி­யாக இந்த மாற்­றத்தை உணர்த்­தி­யது ஜேவிபி.

இலங்­கை­யில் வாழும் தமிழ் மக்­க­ளை­யும், மற்ற சிறு­பான்மை சமூ­கங்­க­ளை­யும் அதன் பிரச்­சி­னை­க­ளை­யும் கவ­னிக்­கத் தொடங்கி அது குறித்து பேசத் தொடங்­கி­யது ஜே.வி.பி. அவர்­க­ளுக்கு தனித்­தனி பிரச்­சி­னை­கள் இருக்­கின்­றன என்­பதை வலி­யு­றுத்­தி­யது.

மேலும் இப்­போது ஆட்­சிக்கு வந்­தி­ருப்­பது தனிப்­பட்ட ஜே.வி.பி. அல்ல. பல்­வேறு அமைப்­பு­கள் இணைந்து தேசிய மக்­கள் சக்தி முன்­னணி என்ற கூட்­ட­ணியை உரு­வாக்கி உள்­ளன. இக்­கூட்­ட­ணி­யின் அதி­ப­ரா­கத்­தான் அனுர குமார திச­நா­யக, நாட்­டின் அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்­றுள்­ளார்.

முன்பு இந்­தியாவின் தலை­யீட்டை நிரா­க­ரித்த அனுர குமார திச­நா­யக, கடந்த பிப்­ர­வரி மாதம் இந்­தி­யா­வுக்கு வந்­தி­ருந்­தார். இந்­திய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் ஜெய்­சங்­க­ரை­யும், இந்­திய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜீத் தோவ­லை­யும் சந்­தித்­தார். இது அவ­ரது கட்­சி­யின், கூட்­ட­ணி­யின் நிலைப்­பாடு மாறி இருக்­கி­றது என்­ப­தற்கு எடுத்­துக் காட்டு ஆகும்.

“நூற்­றாண்­டு­க­ளாக நாம் கண்ட கனவு இறு­தி­யில் நிறை­வேறி இருக்­கி­றது. கனவை நன­வாக்க, இந்த நிலத்­திற்­குப் புதிய தொடக்­கம் தேவை. சிங்­க­ளர்­கள், தமி­ழர்­கள், முஸ்­லீம்­க­ளின் ஒற்­றுமை, புதிய யுகத்­தின் தொடக்­க­மாக இருக்­கும். இதன் அடிப்­ப­டை­யில்­தான் மறு­ம­லர்ச்சி தோன்­றும்” என்று சொல்லி இருக்­கி­றார் அனுர குமார திச­நா­யக.

இலங்­கை­யின் முக­மும், குண­மும் இனி­யா­வது மாறுமா? 

சொன்­ன­படி நடப்­பாரா புதிய அதி­பர்?




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?