இறுதி வெற்றி!
கடும்பொருளாதாரவீழ்ச்சி,குழப்பங்களுக்குப் பின்னர் இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இலங்கை அதிபராக கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளர் அநுர குமார. திசநாயக்க அதிபராவார்.
1982-ஆம் ஆண்டு முதல் 8 ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக ஆட்சி செய்துள்ளனர்.
இலங்கையின் 9வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு செப்டெம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. அதிபராக38பேர்கள் களத்தில் நின்றனர்.
நாட்டின் 2.2 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை.
என்.பி.பி. எனப்படும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்
அநுர குமார. திசநாயக்க மற்றும் பிரேமதாச ஆகியோர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இருவருமே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.
இலங்கையில் உள்ள வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மூன்று வேட்பாளர்களை தரவரிசைப்படுத்தி ஒரு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஒரு வேட்பாளர்அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றால், அவர்வெற்றிபெற்றதாகஅறிவிக்கப்படுவார்.
இல்லையெனில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தேர்வு வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இரண்டாவது சுற்று எண்ணும் பணி தொடங்கும்.
முன்னிலையில் திசநாயக்க, பிரமதேசா இரண்டாம் இடம் பெற்றதால் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்ட ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே; குடும்பத்தினர் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இலங்கையின் தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, இதுவரை எண்ணப்பட்ட ஒரு மில்லியன் வாக்குகளில் 53 சதவீத வாக்கு எண்ணிக்கையுடன் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் திசநாயக்க முன்னணியில் உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 22 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது இடத்தில் உள்ளார்.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் பெரும் பின்னடைவை சந்தித்தார். ஏறத்தாழ தோல்வியடைந்து விட்டதால், நமல் ராஜபக்சேவின் மனைவி, மாமனார் உள்ளிட்டோர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டனர். கட்டுநாயக்க பண்டார சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டுக்கு புறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று அதிகாலை 3.30 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றுள்ளனர். அமெரிக்காவுக்கு செல்ல நேரடி விமானம் இல்லாததால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று இலங்கை அதிபராக தேர்வாகவுள்ள அநுர குமார திசநாயக்க பிரசாரத்தின் போது ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக பேசியிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் நமல் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.