இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தித்து செயல்படுங்கள்!

படம்
  திமுக ஒருபக்கம் நீட் விலக்கு பெற போராடிக் கொண்டிருக்கிறதுஆனா "நீட் மட்டும்தான் உலகமா" னு அதிமுகவும் நடிகர்விஜயும் பாஜகவை போலவே கேட்கிறார்கள்.-திமுக. கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு! 2வது நாளாக எடப்பாடி ஆலோசனை மாநிலங்களவை சீட்டை கூட்டணி கட்சிக்கு கொடுக்க அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு. அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு *தமிழ்நாட்டிற்கானதாக மாநிலங்களவையில் எனது குரல் இருக்கும்" என்று பேட்டி. சிந்தித்து செயல்படுங்கள்! பொதுமக்கள் தங்களது தங்க நகைகளை வைத்து கடன் பெறுவதில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டது. அந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை குறிவைத்ததாக அமைந்ததால், இந்திய அளவில் பலதரப்பட்டவர்களால், தங்க நகைக்கடனுக்கான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புகள் குவிந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், எளியவர்களை வஞ்சிக்கும் வரையறைகளை உள்ளடக்கிய நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சருக்கு கடி...

யார் இந்த

படம்
  "வேடன்" சினிமா ராப் பாடகராக இருந்த வேடன், இன்று நாடு முழுவதும் ஒரு தரப்பினரால் ஆதரிக்கவும் மற்றொரு தரப்பினரால் எதிர்க்கவும் படுகிறார். ஏன் இந்த ஆதரவும் எதிர்ப்பும்.? ஈழத் தமிழரான இவரது தாய் பிழைப்பிற்காக ஊட்டிக்கு வந்துள்ளார். பிறகு கேரளா, திருச்சூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டாவதாகப் பிறந்த குழந்தைதான் இந்த வேடன். ஹரிந்தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரை, சிறு வயதில் இவரது மீன் பிடிக்கும் திறனைக் கொண்டு நண்பர்கள் வேடன் என அழைக்க. பின் நாட்களில் அதுவே இவரது பெயராகிப்போனது. திருச்சூர் அருகில் உள்ள ஸ்வப்னபூமி என்ற பகுதியில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததும், பொருளாதார சூழ்நிலைக் காரணமாக வேலைக்குச் சென்றுள்ளார். தனது பாடல்களால் அங்கிருந்தவர்களைக் கவர்ந்து, பின்னர் எடிட்டர் பி.அஜித்தின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு ராப் பாடகர்களின் அறிமுகத்தின் மூலம் இவரும் ராப் பாடல்களை எழுதிப் பாடத் தொடங்கியுள்ளார். அப்படி இவர் 2020ல் “நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல…” என்ற வரிகளுடன் வெளியிட்ட ’Voice of vo...

நாவடக்கம் தேவை.

படம்
  நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் ரூ.499.08 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! "பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணியும் அவரது மனைவியும் எனது காலில் விழுந்து கெஞ்சினார்கள். இல்லையென்றால் அவருக்கு நான் கொள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்று அன்புமணி என்னை மிரட்டினார்"- பா.ம.கட்சி ராமதாஸ். பழனிசாமி தப்புக்காக அலைகிறார் ! சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைஎன்பது மாபெரும் கொடூரம் ஆகும். அந்தக் கொடூரம் நடந்த 157 நாட்களுக்குள்குற்றவாளி ஞானசேகரனுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தந்துள்ளதுதமிழ்நாடு காவல்துறை. இது பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதியாக மாறும்' என்பார்கள். அப்படி ஆகாமல் துரிதமாக வழக்கின் விசாரணையை முடித்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இல்லை. ஏதோ ஒன்று அவரை பிடித்து ஆட்டிக் கொண்டு இருக்கிறது. சொந்தக் கட்சியில் தனக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடியை மற...

திராவிட மொழிதானே கன்னடம்?

படம்
  ஒன்றும் கமல்ஹாசன் கன்னட மொழியை குறைத்துப் பேசவில்லை.  ஆனால் அவர் கன்னட மொழியை இழித்தும் பழித்தும் பேசியது மாதிரி கன்னடர்கள் கொந்தளிக்கின்றனர்.    தமிழில் இருந்து பிறந்ததுதான்  கன்னட மொழி என்று வரலாற்றைச் சொன்னதற்காக கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக கன்னட பாஜக கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன்  போஸ்டர்களை கிழித்துக் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன்,   ‘’கன்னட சூப்பர் ஸ்டார் சிவன்னா இங்கே என் மகனாக, ரசிகனாக வந்துள்ளார்.  நானும் அவரை சிவன்னா என்றே அழைக்கிறேன். ஆனால் அவருக்கு நான் சித்தப்பா.   இது அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என் குடும்பம். (சிவராஜ்குமாரைப் பார்த்து) அதனாலதான் அவர் இங்கு ( சிவராஜ்குமார் ) வந்திருக்கார்.   அதனால்தான் பேச்சை ஆரம்பிக்கும் போதே ‘’உயிரே, உறவே, தமிழே’’ என்று ஆரம்பித்தேன்.  தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் (கன்னடம்) பாஷை. அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்’’  என்றா...

ஜப்பானை, இந்தியா முந்திவிட்டதா?

படம்
  ரயில் ஓடும் போது மின்சார கம்பியிலிருந்து மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது, ரயில் டிரைவர் பிரேக் போடும்போது அந்த மின்சாரத்தை அதே கம்பிக்கே திருப்பி அனுப்புகிறது ரயில்-ஒன்றிய பாஜக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் .(இந்த அறிவாற்றல்தான் ரெயில்கள விபத்துகளே இல்லாமல் ஓடக் காரணம்? ) உலக வறுமை பட்டியலில் இந்திய முதலிடம்.ஐ.நா.சபை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.  கேரளாவில் இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம். பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியது தமிழ்நாடு அரசு. சென்னை நுங்கம்பாக்கம் பாரில் குடிபோதையில் தகராறு : அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது. குவார்டருக்கு ரூ.11ம், புல்லுக்கும் ரூ.47ம் அதிகரிப்பு புதுவையில் மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு: புதுவைஅரசுக்கு ரூ.185 கோடி கூடுதல் வருமானம். காவடி அரசியல்? இந்திய அரசியலில் தமிழ்நாடு எப்போதும் வித்தியாசமானது. இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பில் தொடங்கி, மாநிலக் கட்சியின் ஆட்சி உள்பட தமிழ்நாட்டின் அரசியல் தாக்கம் டெல்லியை கிடுகிடுக்க வைத்திருக்கிறது.  தி.மு.க.தான் இந்த...