இதிலேயும்v ஏழை-வசதியானவர்கள்பாகுபாடு ?
மக்களின் உயிரை காவு வாங்கும் வகையில் தரம் குறைந்த மற்றும் போலி மருந்துகள் இந்தியா வில் விநியோகிக்கப்பட்டு வருவதாக வெளி வந்திருக்கும் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியளிப்ப தாக இருக்கிறது. 2017 புள்ளிவிபரத்தின் படி இந்தியாவில் 10,189 பேருக்கு ஒரு அரசு மருத்துவர் மட்டுமே இருக்கி றார். 90,343 பேருக்கு ஒரு அரசு மருத்துவனை என்ற அடிப்படையில்தான் மருத்துவ வசதி இருக் கிறது. ஆனால் உலக அளவில் மருந்துகள் விற்ப னையில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. அப்படி உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 34 சதவிகிதம் தரம் குறைந்தவையாகவும் ஆபத்தை விளை விக்கக் கூடியதாவும் இருக்கிறது என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் செய்த சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதம மந்திரி பாரதிய ஜனாயுஷாதி பரியோ ஜனா என்கிற பெயரில் மத்திய அரசு குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் வகையில் மருந்தகங்களை ஏற்படுத்தி பாஜக ஆதரவாளர்க ளின் கைகளில் கொடுத்திருக்கிறது. அந்த மருந்த கங்களில் விற்கப்படும் மருந்துகளை பரிசோதனை ...