பழனிக்கு திகார்தான்.

கொலை வழக்கில் தொடர்புடைய ரகு மற்றும் கருப்பு அசான் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் புதிய ரயில்வே பாலம் அருகே பதுகியிருந்தபோது போலீசார் பிடிக்கச் சென்றனர்.அப்போது ரவுடிகள் இருவரும் போலீசாரை கத்தியால் தாக்கினர்.போலீசார் திருப்பி தற்காப்புக்கு சுட்டதில் இரண்டு ரவுடிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.காயம் அடைந்த இரண்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிவு.. தொழிற்சாலையை  மக்கள் முற்றுகையிட்டனர். 

டெல்லியில் வரலாறு காணாத பனிமூட்டம் - மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

ராமர் கோயில் திறப்புவிழா அழைப்பு கலந்துகொள்ள CPI(M) மறுப்பு.

கோரிக்கை மனு.

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதியின் முக்கிய தேவையை சுட்டிக்காட்டி ஒரு விரிவான 72 பக்க கோரிக்கை மனுவை அளித்தார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் "இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான கடலோரப் பகுதிகளைக் கொண்டுள்ளதுடன், கடந்த நூறாண்டுகளில் 50 புயல்களை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு தொடர்ந்து இத்தகைய இயற்கைச் சீற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது.

 மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளோடு சேர்ந்து, அண்மையில் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையும் மாநிலத்தில் பெரும் சேதத்தை விளைவித்திருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் மூத்த அதிகாரிகள் ஒன்றிய நிதியமைச்சர்  தற்போதைய நிலையையும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் பற்றி எடுத்துரைத்தனர். மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளைக் குறித்த விவரங்கள் அடங்கிய 72 பக்க விரிவான கோரிக்கை மனுவையும் அளித்து, 

இப்பேரிடரை எதிர்கொண்டு, நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஆதாரங்களின் தேவையை வலியுறுத்தினர்.

மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே இருக்கும் நிலையில், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதனைவிட பன்மடங்கு மிகுதியாக உள்ளன. 

எனவே, இதுவரை இல்லாத அளவிலான இந்தச் சவாலான சூழ்நிலையைத் தமிழ்நாடு எதிர்கொள்ளப் போதிய நிதி உதவியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என அக்கறையோடு கோருகிறோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

----------------------------------------

பழனிக்கு திகார்தான்.

ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகளை நான் வெளிப்படுத்தினால் திகார் சிறைக்குதான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செல்ல வேண்டும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கோவை சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, "பாஜகவுடன் எங்களுக்கு உறவு சீராக இருக்கிறது.

 கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். எனவே, மீண்டும் அவர் பிரதமராக வந்தால் நாடு நன்றாக இருக்கும். அந்த எண்ணத்தில்தான் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம்.

 இதுதான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு. அரசியல் ரீதியாக பழனிசாமி இனி மேலே வரவே முடியாது” என்றார்.

அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை வெளியில் சொன்னால் பழனிசாமிக்கு திகார் சிறைதான் என மேடையில் பேசியது குறித்த கேள்விக்கு, "அதிமுக ஆட்சியின்போது சில தவறுகள் உள்ளே நடந்தன.

 தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடித்து, தண்டிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் சொன்னார். அதில் ஆறு கொலைகள் நடந்துள்ளன. ஒன்றும் செய்யவில்லை.

 சில அரசியல் ரகசியங்கள் உண்மையில் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியுமா?” என்றார்.

முன்னதாக, தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "பழனிசாமி முதல்வராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அப்போது நான் கையெழுத்திட்டுதான் கோப்புகள் அனைத்தும் அடுத்தடுத்து செல்லும்.

நான் அந்த ரகசியங்களை வெளியில் சொன்னால், திகார் சிறைக்குதான் பழனிசாமி செல்ல வேண்டும். அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் தனி கட்சி தொடங்குங்கள் என என்னிடம் பலர் கூறுகின்றனர்.

 அதிமுக எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறுவதற்குதான் நான் அரசியல் கடமையாற்றுவனே ஒழிய, தனி கட்சி தொடங்க எந்நாளும் நான் முன்வர மாட்டேன். இதுதான் என்நிலைப்பாடு” என்றார்.

----------------------------------------

செயற்கை நுண்ணறிவால்(A I) வேலையிழப்பு!

"பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன், செலவு குறைப்பு நடவடிக்கையாக 100 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது."

 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

 நிறுவனத்தைப் பொருத்தவரையில் செயல்பாட்டில் ஆட்டோமேஷனைக் கொண்டு வருவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

 அந்த வகையில், பல்வேறு பிரிவுகளில் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 

இது எதிர்பார்த்ததைக்காட்டிலும் அதிக பலனை கொடுத்துள்ளது. இதையடுத்து, செலவு குறைப்பு நடவடிக்கையாக விற்பனை, பொறியியல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிருந்தும் மொத்தம் 100 பணியாளர்களை நீக்க முடிவு செய்யப்பட்டது.

ஏஐ தொழில்நுட்பமானது எங்களின் பணியாளர்களின் செலவினத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்க உதவியுள்ளது.

 ஃபின்டெக் நிறுவனங்களில் தொடர் நிகழ்வு பணிகளில் ஏஐ தொழில்நுட்பம் எதிர்பார்ப்புக்கும் அதிகமான பலனை வழங்கி வருகிறது.

 எனவே, செயல்திறனற்ற தேவைக்கும் அதிகமாக இருக்கும் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இருப்பினும், எங்களது முக்கிய ஆதரமாக இருக்கும் பேடிஎம் நிறுவனத்தில் வரும் ஆண்டில் மேலும் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான புதுமையான தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. 

தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் பணப்பட்டுவாடா தளத்தை விரிவாக்கம் செய்ததுடன், அதனை வலிமையான வகையில் கட்டமைத்துள்ளதாம்..

 எனவே வரும் காலங்களில் புதிய வணிகங்களின் விரிவாக்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது

-----------------------------

* பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது.*

போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மற்றும் அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன், பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் அளித்தார். 

அவர் அளித்த புகாரின் படி சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்

இதனையடுத்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் துவங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தை துவக்கியது தெரியவந்துள்ளது.மேலும் பலகுற்றச்சாட்டுகள் இவர்மீது ஏற்கனவே உள்ளன.RSS செயல்பாடுகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக இவர்மீது பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?