இந்திய மனித. உரிமைகள் பாதுகாப்பு?

 1948 டிசம்பர் 10 அன்று வெளியிடப் பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை  நினைவுகூரும் வகையில் டிசம்பர் 10 ஆம் நாள் உலகளவில் மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

இது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு உலகளாவிய தரநிலையாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறி விக்கப்பட்டது.சாதி, பாலினம், நிறம், மதம், மொழி அரசியல் நம்பிக்கை அல்லது வேறு எந்த வகையிலான மனித உரிமை மீறல்க ளில் ஐநாவின் மனித உரிமை அமைப்பின் 75 ஆண்டுகால செயல்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் பெருமளவில் அங்கீகரித்துள்ளன.

இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி உறுதி.

இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 30 ஆண்டுகளில், 22.48 லட்சத்துக் கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

 22.41 லட்சத்துக்கும் அதிக மான வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ளது.  மனித உரிமை மீறல்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணமாக 230 கோடி ரூபாயைப் பெற்றுத் தந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் 2023 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை ஆணையம் 80,376 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, இதில் 117 வழக்குகள் தானாக முன்வந்து விசா ரணை செய்யப்பட்டவையாகும்.

 சம்பந்தப்பட்ட பொது அதிகாரிகளின் விசாரணை அறிக்கை கள் மற்றும் விசாரணைக் குழுக்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பழைய மற்றும் புதிய வழக்குகள் உட்பட 88,451 வழக்குகளை அது தீர்த்து வைத்துள்ளது. 

390 வழக்குகளில், மனித உரிமை மீறல்க ளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ.18.27 கோடிக்கு மேல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. 

ஆனால், அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி  தலைமையிலான அரசாங்கம் மதம் மற்றும் பிற சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீது  திட்டமிட்டு பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதோடு அவர்கள் மீது களங்கத்தையும் சுமத்தி வருகிறது.

பாஜக ஆதரவாளர்கள் திட்டமிட்டு சிறு பான்மையினர் மீது வன்முறைத் தாக்குதல் களை அதிகளவு நடத்தியுள்ளனர். 

இந்தத் தாக்குதல்கள் ஒன்றிய அரசாங்கத்தின் இந்து பெரும்பான்மைச் சித்தாந்தம், நீதி அமைப்பு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அதிகாரங்கள் கொண்ட நிறுவனங்களில் ஒரு சார்புநிலையே பிரதிபலிக்கிறது.

அரசின் துஷ்பிரயோகங்களை அம்பலப் படுத்துபவர்களை அல்லது விமர்சிப்பவர்க ளை சிறையில் அடைக்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி, சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுயாதீன பத்திரிகையாளர்களை மௌனமாக்குவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். 

மனித உரிமைக் குழுக்கள், அரசியல் எதிரிகள் மற்றும் பிறரைத் துன்புறுத்துவ தற்காக அரசாங்கம் வெளிநாட்டு நிதியுதவி விதிமுறைகள் மற்றும் நிதி முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தியது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியல மைப்பு சிறப்பு அந்தஸ்தை (370 ஆவது பிரிவை) அரசாங்கம் ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேச பகுதிகளாகப் பிரித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், வன்முறை தொடர்ந்தது, 

2022-ஆம் ஆண்டு அக்டோபர் வரை 229 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 28 பொதுமக்கள், 29 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 172 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட தீவிர வாதிகள் என்று வர்ணிக்கப்பட்டவர்களில் சிலர் உண்மையில் பொதுமக்கள் என்று உள்ளூர் காஷ்மீரிகள் புகார் தெரிவித்தனர். 

சுதந்திர மாக நடைபெற்ற விசாரணை எதிலும் கொல் லப்பட்டவர்கள் தீவிரவாதிகளா என்பது தெளிவு படுத்தப்படவில்லை.

2022-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் காவல்நிலையக் காவலில் 147 இறப்புகள்,  நீதிமன்றக் காவலில் 1,882 இறப்புகள், சட்டத்திற்குப் புறம்பான கொலை கள் 119  என தேசிய மனித உரிமைகள் ஆணை யம் பதிவு செய்துள்ளது.

2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 50,900 நடைபெற்றுள்ளதாக  தேசிய குற்ற  ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

 பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் 8,802 நிகழ்ந்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் ஆபத்தான நிலையிலேயே உள்ளது. 2021-ஆம் ஆண்டு  31,677 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 அதாவது சராசரியாக தினசரி 86 வழக்குகள் என்பது அதிர்ச்சியளிக் கக்கூடிய ஒன்றாகும்.

 மோடி அரசு சில வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ் மாவட்டங்களின் எண்ணிக்கையை குறைத்தது.

 எவ்வாறாயினும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் நான்கு வடகிழக்கு மாநிலங்க ளில் உள்ள 90 மாவட்டங்களில் 43- இல் இது நடைமுறையில் உள்ளது. 

 இங்கு பாது காப்புப்படையினர்  மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடுப்ப திலிருந்து விலக்கு அளிக்கிறது.

இந்தியாவில்  மோடி ஆட்சி நடைபெறும் நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடு குறைந்து விட்டது. 

உதாரணத்திற்கு மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான பாலி யல் வன்முறை புகாரில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்த பிறகுதான்,  தேசிய மனித உரிமைகள் ஆணை யம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து மணிப்பூர் மாநிலத்திற்கு நோட்டீஸ் அனுப்ப முன்வந்தது. 

பாஜக-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்தும் எந்த அறிக்கையும் வெளியிட வில்லை. 

சட்டப்பிரிவு 370 ரத்து, திருமண சமத்து வம், வெறுப்புப் பேச்சு அல்லது மணிப்பூர் என எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மௌனம் காத்தே வந்துள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலை மையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமை கள் ஆணையம்” என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது.

இந்த ஆணையம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 2023 செப்டம்பர் வரை வரப்பெற்ற 2 லட்சத்து 60 ஆயிரத்து 55 முறையீடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, 

2 லட்சத்து 17 ஆயிரத்து 918 முறையீடுகள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?