இயற்கை இன்று! செயற்கை அன்று!!

 2015 நவம்பர் 8, 9, 12, 13, 15, 23 தேதிகள்:

சென்னையில் கனமழை பெய்கிறது.

நவம்பர் இறுதி வாரம் (தோராயமாக 26ஆம் தேதி):  

1) சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.

2) எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித்துறை செயலாளரிடம் (PWD Secretary) செம்பரப்பாக்கம் ஏரியில் 22 மீட்டரில் (72அடி) இருக்கும் நீரின் அளவை 18மீட்டராக (60அடி) குறைக்க சொல்கிறார்கள்.  குறைத்தால் மட்டுமே வர இருக்கும் அதீத கனமழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கிறார்கள்.


நவம்பர் 27ஆம் தேதி:

எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 28ஆம் தேதி:

எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 29ஆம் தேதி:

எந்த நடவடிக்கையும் இல்லை.

நவம்பர் 30ஆம் தேதி:

எந்த நடவடிக்கையும் இல்லை.

அதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த (Dry days) நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். 

 தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். (இந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்சின் உத்தரவுக்காக தலைமைச் செயலாளர் காத்திருக்கிறார் என்றுதான் நாம் எழுதியிருக்க வேண்டும்.  

ஆனால் இது அம்மாவின் ஆட்சி.  அம்மாவின் ஆட்சியில் “அணையை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்…  அணையை மூட நான் ஆணை பிறப்பித்துள்ளேன்,” என எல்லா வேலைகளையும் அம்மாவே இழுத்துப்போட்டுச் செய்வார் என்பதால் இதில் மட்டும் நாம் ஓ.பி.எஸ்சை இழுத்துவிடுவது அறம் அல்ல. 

 அதனால் தலைமைச் செயலாளர் அம்மாவின் ஆணைக்காகத்தான் காத்திருந்திருக்கிறார் என்பது குழந்தைக்கும் தெளிவு)

டிசம்பர் 1:

·         சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)

·         செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு அரசு தளத்தின்படி 3141மில்லியன் கன அடியாக இருக்கிறது.

·         டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு, செம்பரபாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் நொடிக்கு 5000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு நொடிக்கு 7500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும் மொட்டையாக ஒரு செய்தி கிடைக்கிறது.

·         மாலை 5 மணிக்கு முதலில் ஏரியை திறக்கிறார்கள்.  பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நொடிக்கு 10000 கன அடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்துவிட முடிவுசெய்த அரசு கண்டிப்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள் என தான் நம்பியதாகவும் wired இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

·         ஆனால் தமிழக அரசின் இணையதளத்தில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு வெறும் 900கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கிறார்கள்.

ஆகமொத்தத்தில்,

செய்தியாளர்களுக்கு கலக்டர் சொன்னபடி நொடிக்கு 5000-7000 கன அடியை திறந்துவிட்டார்களா? 

 அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000 கன அடி நீர் திறந்துவிட்டார்களா?

 அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர் தான் திறந்துவிட்டார்களா? 

எது உண்மை?  

உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!

 டிசம்பர் 2ஆம் தேதி:

·         அரசு தளத்தின்படி டிசம்பர் 1ஆம் தேதி ஏரியில் நீரின் அளவு 83.48அடி  (3141 மில்லியன் கன அடி).  டிசம்பர் 2ம் தேதி ஏரியில் நீரின் அளவு 74.08அடி (1134மில்லியன் கன அடி).  ஆக 2007 மில்லியன் கன அடி நீர் முந்தைய இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறது. 

 அதாவது  அறிவித்த நொடிக்கு 7500கன அடிக்கு மாறாக கிட்டத்தட்ட நொடிக்கு 29000 கன அடி நீரை டிசம்பர் 1ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியேற்றியிருக்கிறார்கள்.  

அதிகாலை 2மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது.  இரவு 10மணிக்கு அபாயகரமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ளம் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது.     

வெள்ளத்திற்கான காரணங்கள்:

1)   26ஆம் தேதியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27,28,29,20 ஆகிய மழையில்லா தேதிகளில் எழவு காத்த கிளி போல ‘மேலிட’ உத்தரவுக்காக காத்திருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

2)   டிசம்பர் 1ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு வெறும் 7500கன அடி மட்டுமே திறக்கப்போகிறோம் என செய்தி கொடுத்துவிட்டு, இரவு 10 மணிக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல் திடீரென நொடிக்கு 29000கன அடி நீரை திறந்துவிட்டது. 

3)   சொல்லாமல் கொள்ளாமல் திறந்துவிட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6மணிக்கு திறந்துவிட்டிருந்தால் இரவு 10மணிக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும்.  ஆனால் இரவு 10மணிக்கு திறந்ததால் அதிகாலை 2மணிக்கு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்டார்கள்.  இவ்வளவு அபாகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது என்பது மிகப்பெரிய தவறு.

4)   இந்த 29000 கன அடி திறப்பைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை.  மீண்டும் மீண்டும் கேட்டபின் சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே இதை டிசம்பர் 2ஆம் தேதி எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கிறார்கள்.

5)   பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என வாளியைக் கவிழ்ப்பதைப் போல கழிப்பது மரபல்ல.  அபாயகரமான அளவை எட்டிவிட்டால் வாளியில் துளையிட்டு நீரை வெளியேற்றுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதுதான் முறை.  இதை நவம்பர் 27,28,29,30ஆம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும் இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, முழுக்க முழுக்க அரசுதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.   

6)   இதெல்லாம் போக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம்.  அந்த குப்பைகள், கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில் கலக்கும் வழியை அடைத்துக்கொண்டதும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

7)   சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப்பாதைகளையும், ஓட்டெரி, பங்கிங்காம் கால்வாய்களையும் ஜூன் ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம்.  ஆனால் இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ/சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் முறையாக தூர்வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள்.

ஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் 2015 வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல.  

கனமழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும் ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது.  இப்போது நாம் அனைவரும் ‘ஸ்டிக்கர்’ பணிகள் பற்றி பேசுவதிலும், அதிமுகவை கிண்டலடிக்கும் மீம்கள் செய்வதிலும். எல்லா கட்சிகளும் இப்படித்தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதும் என பிசியாக இருக்கிறோம். 

 இன்னும் சிலரோ ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும், பல்லாண்டு காலம் செய்த தவறு என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனபோக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றார்கள்.  அரசும் அதையேதான் விரும்புகிறது. 

இந்திய ஊடகங்கள் நம்மை கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள்.  இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? 

எந்த அளவுக்கு நிர்வாரணப்பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்களோ அதே அளவில் உண்மையை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.  

ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் முறையான சுதந்திரமான விசாரணைக் கமிஷன் வைத்து உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும்தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் செய்யும் உண்மையான நிவாரணம் ஆகும்.

-டான் அசோக்

(2015ல் எழுதியது)

இதை வெளியிட்டது விகடன்,தினமலர் இதற்காக ஜெயலலிதா அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

---------------------------------------


இயற்கை இன்று!

செயற்கை அன்று!!

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "வரலாறு காணாத பெருமழை நேற்றைய தினம் கொட்டித் தீர்த்துள்ளது. மீனம்பாக்கம் 43 செ.மீ, பெருங்குடியில் 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. 

பல இடங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த அரசு பொறுப்பு ஏற்ற பிறகு நவம்பரில் பெரு மழை ஏற்பட்டது. அதனை மனதில் வைத்துதான் சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர்தேங்காமல் இருக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழு அளித்த ஆய்வின் அடிப்படையில் 4 ஆயிரம் கோடியில் வெள்ள நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம்.

அதனால்தான் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தத்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது. 

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகம். 2015ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் நடந்த வெள்ளப்பெருக்கில், நுங்கம்பாக்கத்தில் 29.4 செமீ மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் 34.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதனை ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது பெய்துள்ள மழை மிக, மிக மழை பதிவாகி உள்ளது.

 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். 

ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். 

ஆனால் இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கக் கூடாது. இதற்காக மிகவும் வருந்துகிறேன். 

2005ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம், இது இயற்கை வெள்ளம். அன்றைக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென நீர் திறந்துவிடப்பட்டது அன்று வெள்ளம் ஏற்பட காரணம்.

அடையாற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திடீரென்று திறக்கப்பட்டது. வெள்ளம் ஏற்பட இது முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்த நீரை முன்கூட்டியே திறந்துவிட்டதால் இத்தகைய பெருமழையை ஓரளவு சமாளித்துள்ளோம்.

 இத்தைய பெருமழையின்போதும் அதிகபட்சமாக 8 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீரை திறந்துவிட்டுள்ளோம்.

 இப்போது செம்பரம்பாக்கத்தில் முன்கூட்டியே நீர் திறந்துவிடப்பட்டதால் பாதிப்பு குறைக்கப்பட்டது. 

சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

அடையாறு, கூவம் முகத்துவாரங்களில் அலைகளில் அளவு அதிகம் இருந்ததால் வெள்ளம் மெதுவாக வடிந்தது. 9 மாவட்டங்களில் 61,666 நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. காலை முதல் 1 லட்சம் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை புயலின் போது மக்கள் நலம் பேணும் முக்கிய தலைவர்களின்  (05-12-2023) நிகழ்ச்சிகள்!

🔸 மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்‌.ரவி அவர்கள்கிண்டி ராஜ் பவன் இல்லத்தில் ஓய்வில் உள்ளார்.

முக்கிய மசோதாக்களில் ஒப்பதல் தராமல் இருப்பது எப்படி என உள்துறை யுடன் ஆலொசனை நடத்துகிறார்


🔸 எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை இல்லத்தில் ஜெயலலிதா இறந்த நன்னாளில்  என உறுதி மொழி எடுத்துவிட்டு ஓய்வில் உள்ளார்.

🔸 ஓ.பன்னீர் செல்வம் அவர்கள்

சென்னை இல்லத்தில் தியானத்தில் உள்ளார்.


🔸 டிடிவிதினகரன் அவர்கள் 

ஓய்வில்உள்ளார்.


🔸 சீமான் அவர்கள் புயருடன் போர் கற்பனை செய்து கொண்டு கடும் ஓய்வில் உள்ளார்!


🔸மருத்துவர் ராமதாஸ் அவர்கள் 

தைலாபுரத்தில் உள்ளார்.


🔸 மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் துபாயில் COP28 கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.


🔸அண்ணாமலை அவர்கள்

பெங்களூரில் தன் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.


🌤️ முதலமைச்சரும் சக அமைச்சர்களும் வேறு வேலை வெட்டி இல்லாமல் மக்களுடன் களத்தில் உள்ளனர்! 

**************



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?