இடுகைகள்

படம்
🔷 புதிய தலைமைச்செயலகம் அமைப்பதற்கு எதிராக வரும் 29-ம் தேதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம். பட்டினப்பாக்கம் பகுதியை மீனவர்களின் நீண்டகால குடியிருப்பு பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல். 🔷 சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு. தவெக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்திலும் திமுக சார்பில் மனு 🔷 மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர்களுக்கு தவெகவினர் பணப்பட்டுவாடா. தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல். 🔷 மதுராந்தகம் தொகுதியில் பரப்புரைக்கு சென்ற புஸ்சி ஆனந்துக்கு எதிராக மக்கள் முழக்கம். தாராபுரத்தில் கடும் எதிர்ப்பால் காவலர்கள் புடைசூழ வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் சத்யபாமா. 🔷 தமிழ்நாடு முழுவதும் 43 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. கணக்கில் வராத ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஜிபே பரிவர்த்தனை கண்டுபிடிப்பு. 🔷 பாலியல் வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணியின் உதவியாளர் கணேசனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல். போக்சோ நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையிலடைப்பு. ராசிபுரம் அரு...

பட்டிணபாக்கம்- பரந்தூர்.

படம்
இந்திய நாடாளுமன்றம் கட்டவே ரூ.900 கோடி தான் செலவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம் கட்டப் போகிறார்களாம் என்று முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது. சுனாமி பாதித்த இடம் பட்டினப்பாக்கம் மீனவர்கள் வாழ்விடம.! உருப்படியாகச் செய்ய வேண்டிய எதையும் முதலமைச்சர் விஜய் செய்யவில்லை. ஒரு புதிய ஆட்சி வந்தால், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். அதைச் செய்யவில்லை. அறிவிக்கப்பட்ட ஓரிரு திட்டங்களும் அரைகுறையாகச் செய்து தரப்பட்டுள்ளன. அல்லது கடந்த ஆட்சி செய்த திட்டங்களைத் தொடர வேண்டும். அதையும் செய்யவில்லை விஜய். பல திட்டங்களை முடக்கிவிட்டார். பல திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றிவிட்டார். இதுதான் விஜய் செய்திருப்பது. அவருக்கோ அவரது அமைச்சர்களுக்கோ கனவுகள் இல்லை. சிந்தனைத் திறன் இல்லை. தொலை நோக்குப் பார்வை இல்லை. மொத்தத்தில் ஆட்சி அதிகாரத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் கெட்ட எண்ணங்கள் மட்டும் நிறைய இருக்கின்றன. அவதூறுகள் மூலமாக ஆட்சி நடத்துவது போலக் காட்டிக் கொள்ள நினைக்கிறார். தி.மு.க. மீது பழிபோட்டு தனது ஆட்சியை நகர்த்தப...

குவாரிகளுக்காக போக்சோ

படம்
  பல ஆயிரம் கோடி மதிப்பு கிரானைட் குவாரியை கொடுக்காததால் ரெட்டி கும்பல் ஆத்திரம்: ‘ ஜெம் வீரமணி’ வழக்கில்  அதிர்ச்சி தகவல்கள் ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கு திடீரென சூடுபிடித்துள்ளது. தொழிலதிபர் வீரமணி கடந்த 50 ஆண்டுகளாக இந்திய அளவில் அசைக்க முடியாத கிரனைட் தொழிலில் முன்னணியில் உள்ளார். இதனால், ஆந்திராவில் உள்ள கிரானைட் தொழிலதிபர்களுக்கும் வீரமணிக்கும் பல ஆண்டுகளாக தொழில் போட்டி இருந்து வருகிறது. ஆந்திராவில் கிரானைட் தொழிலில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர்கள், நண்பர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, ரெட்டி சமூகத்தினர் ஆந்திராவில் உள்ள அனைத்து குவாரிகளையும் தன்வசப்படுத்தி சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டினர். பின்னர், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக வந்தார். அதன் பிறகு ஆந்திராவில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகளை நடத்திய தொழிலதிபர்களை முற்றிலும் ஒழித்தார். இதனால் ஆந்திரா ரெட்டி தொழிலதிபர்கள் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளனர். குறிப்பாக, ஆந்திர கும்பல் சென்னை கிழக்கு கடற்...

ஜெம் வீரமணி வழக்கு ?

படம்
🔷 வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றுழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அடுத்த 24மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் 🔷 மேட்டூர் அணை திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் கடைமடையை எட்டாத தண்ணீர். நீரின்றி சம்பா பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் விவசாயிகள் 🔷 சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் காவிரி நீர் கிடைக்காமல் இழப்பை சந்தித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு. விளம்பரத்திற்காக தவெக அரசு  விவசாயிகளை வஞ்சித்து விட்டதாக கண்டனம் ழ 🔷 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 10 கிராம மீனவ மக்கள் சந்திப்பு. புதிய தலைமைச்செயலகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர் 🔷 தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு இல்லையென பெ.சண்முகம் மீண்டும் திட்டவட்டம். பொதுமக்களுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்த முயன்றால் எதிர்ப்போம் என உறுதி. 🔷 யாருடைய ஆசைக்காக புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுகிறது? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி. மீனவர்களுடன் இணைந்து தி.மு.க. மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கை 🔷 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடு...

இஸ்மாயில். ஆணையம்

படம்
செயல்படாத சென்னை ரேடார் சென்னை துறைமுகக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சென்னை வானிலை மையத்தின் ரேடார் கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே பழுதடைந்தது. அதற்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால் பழுது நீக்குவதில் தற்போது வரை சிக்கல் நீடித்துவருவதுடன், அவ்வப்போது செயல்பட்டு வந்தாலும் முழுமையான செயல்பாடு இல்லாமல் உள்ளது அதே சமயம், பருவமழை நெருங்கும் சூழலில், பள்ளிக்கரணை NIOT வளாக ரேடார், ஸ்ரீஹரிகோட்டா ரேடார், திருவனந்தபுரம் இஸ்ரோ ரேடார்கள் மற்றும் காரைக்கால் ரேடார் ஆகியவற்றின் தரவுகள் மூலமே தற்போதைய வானிலை கணிக்கப்பட்டு வருகிறது இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது கட்டாயம் - உதயநிதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சட்டமன்ற மாண்பை கெடுத்த த.வெ.க அரசின் முகத்திரையை கிழிக்க இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டிய கட்டாயம் என்று மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி 2,281 கன அடி...