இடுகைகள்

சிங்கள-இந்தி " கஃபே"

படம்
இந்தியாவில் எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழக உணர்வாளர்களும் தமிழ் அமைப்புகளும், அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் தங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக தமிழக காவல்துறை ஆணையாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த படத்தை இயக்கி, நடித்த ஜோன் ஆபிரகாம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் நாங்கள் படத்தை முன்கூட்டியே காட்டுவோம் என்று தெரிவித்தார்.  திரைப்படக் குழு, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு  மற்றும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்குநர் கௌதமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சீமான் ஆகியோர் உட்பட பலரும் இப்படத்தை பார்த்தனர். படத்தைப் பார்த்த இவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். படத்தை பார்த்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோது, மிகவும் கோபத்துடன் ‘மெட்...

கேரளா கபே

படம்
கேரளா மக்களும் நாமும் அண்ணன் தம்பி என்று நாம் சொல்லிக் கொண்டு அலைந்தாலும் அவர்கள் மனதில் நம்மை ரொம்ப கீழ்த்தரமாக பாண்டியாக அல்லது  உணர்கிறார்கள். ‘டாம் 999” படத்தில் முல்லைப்பெரியாறை கேரளாவை அழிக்க வந்த அணை போல் சித்தரித்தார்கள்.இப்போது மெட்ராஸ் கபேயில் ஜான் ஆப்ரஹாம் கேரளாவில் இருந்து மனித குலத்தை ரட்சிக்க புறப்பட்டு இலங்கை சென்று ஈழத்தமிழர்கள்-விடுதலிப்புலிகள் என்ற அரக்கர்களை வதம் செய்து இலங்கையையும்-இந்தியாவையும் காப்பாற்றி விட்டு விடுதலிப்புலிகள் அண்ணல் ராஜீவை கொல்வதை தடுக்க புறப்பட்டு வந்து கொண்டிரூக்கையில் அது கையை மீறி படுகொலையாவதாக கதை முடிக்கிறார்கள். இதன் மூலம் சொல்லவரும் கருத்து . ராஜ பக்ஷே தமிழர்களை கொன்று குவித்தது தவறே இல்லை.அவர்கள் அழிக்கப்பட  அரக்கர்கள் வம்சத்தினர்தான்.பக்ஷே,சோனியா,மன்மோகன் சிங்,மேனன் கூட்டம் ஈழத்தமிழர்கள்-விடுதலிப்புலிகள் மீது தொடுத்த அழித்தொழிப்பு நடவடிக்கை இந்த மெட்ராஸ் கபே மூலம் நியாயப்படுத்தப்படுகிறது. இப்போது இப்படி ஒரு படம் எடுக்க வெண்டிய அவசியம் ஏன் வந்தது ?அவசியம் என்ன ? தமிழர்களை,அதுவும் ஈழத் தமிழர்களை கொலை...

மணல் ஆ [தர ]ய் வுக் குழு

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திரு ஆஷிஷ் குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத் தில் கனிம மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்யவும், மணல் கொள்ளை அடித்த நிறுவனங்கள் மீது நடவடிக் கை எடுக்கவும் உத்தரவிட்டதாகவும், அதன் பின்னணியில் அவர் திடீரென அரசால் இட மாற்றம் செய்யப்பட்ட தாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. மாவட்ட ஆட்சியர் திரு ஆஷிஷ் குமார் வேம்பார் பகுதி கடற் கரையில் சுமார் 40 ஹெக்டேர் பரப்பில் சுமார் 2.30 லட்சம் மெட்ரிக் டன் கனிம மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட் டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதன் பேரில் வி.வி. மினரல்ஸ் நிறுவ னம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சுரங்கத்துறை கமிஷன ருக்கு இம்மாதம் 6 ம் தேதி இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். இதை அடுத்து சுரங்கத்துறை ஆணையர் ஆகஸ்ட் 8ம் தேதி தமிழக அரசின் தொழில் துறை முதன்மை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்" தூத்துக்குடி மாவட்டத்தில் குத்தகைக்கு விடப் பட்ட சில சுரங்கங்களில் விதிமுறை களை மீறி அத...

ஓடு....! “தலைவா” .... ஓடு....!!

படம்
த வறானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன் வைத்து சரியான கொள்கைகளை ஆதரிக்குமாறு கோரினால் தவறானவர்களை தண்டித்த அநீதியான நடவடிக்கையே மேல் என்று மக்கள் முடிவு செய்யக் கூடும். சான்றாக ஊர் மக்கள் பலரை கொன்று போட்ட ஒரு நாடறிந்த ரவுடியை ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக போலி மோதலில் போலிஸ் கொல்கிறது. பொதுவில் போலி மோதலை எதிர்ப்பது வேறு, இந்த ரவுடியின் ஜனநாயக உரிமையை முன் வைத்து எதிர்ப்பது வேறு. பின்னதை நாடினால் மக்கள் பாசிசமே மேல் என்று முடிவு செய்வார்கள். எனவே சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை வைத்தே போலிசின் காட்டுமிராண்டி தர்பாரை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் போலிசு குறித்த உண்மையை உணர வைக்க முடியும். தற்போது ‘தலைவா’ படப் பிரச்சினையை முன் வைத்து சிலர் ஜனநாயக உரிமை பேசுகிறார்கள். சினிமா எனும் முதலாளிகளின் தொழிலை முன் வைத்துதான் ஒரு நாட்டின், சமூகத்தின் ஜனநாயக உரிமை பேசப்படும் என்றால் அந்நாட்டில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே உரிமை இல்லை என்று பொருள். அதன் பொருட்டே சிட்னி நகரில் டான்ஸ் ஆடு...

சவால் விடும் ஆசிய இணையச்சேவைகள்.

படம்
உலகளாவிய ரீதியில் பெரிதும் பிரபலமான இணையச் சேவைகளாகக் காணப்படுகின்ற  Facebook, Google  போன்ற சேவைகளுக்குச் சவால் விடுக்கும் வண்ணம் சில ஆசியத்   தயாரிப்புகள் இணைய உலகில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.  இவ்வளர்ச்சியினைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலையும் தற்போதைய இணைய ஜாம்பவான்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கையடக்கத் தொலைபேசியுகமானது தற்போது வேகமாக வளர்ந்து வருகின்ற நிலையில் ,  கையடக்கத் தொலைபேசிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சீனாவின்  Tencent   நிறுவனத்தின் தயாரிப்புகளான  K akaoTalk, Line, WeChat   ஆகிய இணையச்சேவைகள் தற்போது அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றன. கையடக்கத் தொலைபேசியின் இணைய இணைப்பினை அடிப்படையாகக் கொண்டு இலவசமாக குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் குறித்த சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் ,  அவற்றின் இலகுவான பாவனை மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்கள் ஆகியவை மூலம் குறித்த சேவைகள் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்து வருகின்றன.  குறித்த சேவைகள் தற்போது வரையிலும்  600  மில்லியன் ...

பட வரிசை [இரு] பத்து

படம்
வெடித்த நீர் மூழ்கிக்கு அஞ்சலி மாடி மேலே இறக்க சொன்னார் ? யாராச்சும் ஒருத்தர் முடி வெட்டினால் அடையாளம் தெரியும். இன்னைக்கு சுதந்திர தினம்னாங்களே .எங்கே போச்சு.? இதெல்லாம் டான்ஸ் ஆடி பார்க்க,தலையெழுத்துப்பா ? தலைவா படம் இப்படியாவது பார்க்க முடியுமா ? பாகிஸ்தான் தீவிரவாதிகள் இப்படித்தான் மாறு வேசத்தில் வந்து இந்திய படை வீரார்களை கொன்னாங்கனு அந்தோணி சொன்னாரு ? ரியல் எஸ்டேட் காரன் பிளாட் போடதுக்குள்ள ரசியுங்க . காங்கிரசு கட்சியைவிட கிளை கோஷ்டிகள் குறைவுதான். சேர்த்து வாங்கதுக்குள்ள விலை கூடி போயிடுது.பழையபடியும் சேர்க்கத்தான் முடியுது. அந்நிய மூலதனம் வந்தா டாலர் விலை குறையும்னு மன்மோகன் சொல்லுதாராம். என் அடுத்த வாரிசு இவர்தான். தண்ணீர் வசதி உள்ள வீட்டைப் பாருங்கனா .இப்படியா ? படி எறி வீட்டுக்குள்ள போக முடியாது. சர்க்கஸ் பார்த்து வந்து ,வளையத்துக்குள்ள நுழைய பயிற்சி எடுக்காப்புள்ள . கொஞ்ச நேரம் கொஞ்ச விடுறானா.குரங்குப்பய? இன்னைக்கு பூவ கொடுத்...