மிஞ்சியது என்ன?
எல்லோருக்கும் லிவிங்ஸ்டன் நடித்த திரைப்பட நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வரும். படையப்பா ஸ்டைலில் மவுத்தார்கான் வாசிக்க, ஒரு புற்றிலிருந்து அவர் ஏற்பாடு செய்த பாம்பு வெளிவர, இன்னொரு புற்றிலிருந்து மற்றொரு பாம்பு தலையைத் தூக்கி படமெடுக்கும். மோடியின் நிலைமையும் அப்படி ஆகிவிட்டது. பணமதிப்பு நீக்க புற்றிலிருந்து அவர் எதிர்பாராமல் பல பாம்புகள் படமெடுக்கின்றன. பணமதிப்பு நீக்கத்தால் உள்ளே வந்து சேர்ந்த செல்லாத நோட்டுக்களையெல்லாம் ரிசர்வ் வங்கி எண்ணி முடித்த போது கறுப்புப்பணமும் பிடிபடவில்லை, கள்ளப்பணமும் பிடிபடவில்லையென படமெடுத்த பாம்புகள்... மோடி பக்த கோடிகளின் ஆட்சி நடைபெறுகிற தமிழகத்திலேயே சட்டமன்றத்தில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் 50000 சிறு தொழிலகங்கள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வீதியிலே நின்றார்கள் என்று அமைச்சரொருவர் அறிவித்தபோது படமெடுத்த பாம்பு... இது நாதர்முடி நல்ல பாம்பு மோடியின் கோட்டைக்குள் இருந்தேபடமெடுத்துள்ள பாம்பு இது. ஆம்! மத்தியவிவசாய அமைச்சகம், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அளித்துள்ள அறிக்கையில், பணமதிப்பு நீக்கம் விவசாயிகளைக...