வெள்ளி, 23 நவம்பர், 2018

ஆட்சியில் ஊழல் நடக்கலாம் ஆனால்,

  ஆட்சியே ஊழல் நடத்துவது புதியது!
மத்தியில் இருக்கும் பாஜக அரசு, தானே முன்னின்று ஊழல்களை செய்யும் அரசாக உள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 
அதனொரு பகுதியாக இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒருஆட்சியில் ஊழல் நடக்கலாம்தான்; ஆனால்,ஆட்சியே ஊழலை நடத்தக் கூடாது; மத்தியில் நடக்கும் மோடி ஆட்சியோ தானேமுன்னின்று ஊழலை நடத்திக் கொண்டிருக்கிறது; அதில் ரபேல் ஊழல் முதன்மையானதாக உள்ளது” என்று தாக்கியுள்ளார்.

ஊழலைக் கண்டுபிடிக்க வேண்டிய அரசு அமைப்பின் (சிபிஐ) முதலாம் மற்றும்இரண்டாம் அதிகாரிகள் ஊழலில் தொடர் புள்ளவர்கள் என்று கூறப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.ரிசர்வ் வங்கி உடனான மோடி அரசின்மோதல் போக்கு தவறானது என்றும்,மோடி அரசின் பல்வேறு நடவடிக்கைகளும் தவறாகவே முடிந்துள்ளதாக குறிப் பிட்டுள்ள மன்மோகன் சிங், அதில், “மோடிஅரசின் பணமதிப்பு நீக்கம் மிக முக்கியமான தவறு” என்று தெரிவித்துள்ளார்.

“இதனால் மோடி அரசு எதையும் சாதிக்கவில்லை; அது முழுக்க முழுக்கதோல்வி அடைந்து விட்டது; மோடி கூறியதுபோல கறுப்புப்பணம் எதுவும் மீட்கப்படவில்லை” என்று கூறியுள்ளார். 

வேலைவாய்ப்பை உருவாக்கும் விஷயத்திலும் மோடி அரசு தோல்வியையே அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.“கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடியை கடுமையான வார்த்தைகளால், நான் திட்டிவிட்டேன்; 
ஆனால், நான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது” என்று வருத்தப்படுவது போல கூறியிருக்கும் மன்மோகன் சிங், தான் திட்டுவதற்குப் பதில் “மோடியை மக்களின் முடிவுக்கே விட்டிருக்க வேண்டும்” என்றும் கிண்டல் அடித்துள்ளார்.
“தற்போது மோடியை பற்றி மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர்; இனி அவர்கள்நல்ல முடிவை எடுப்பார்கள்” என்று கூறியுள்ள மன்மோகன், “பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை மோசமான வார்த்தைகளால் திட்டுவதை நிறுத்த வேண்டும்; ஏனெனில் ஒரு பிரதமர் இவ்வாறு பேசுவதுசரியாக இருக்காது” என்று அறிவுரையும் வழங்கியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் நிலைமை குறித்தும் விவரித்துள்ள மன்மோகன்சிங்,
 “இங்கு 48 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்;
 90 ஆயிரம் குழந்தைகள் தங்களது முதல் பிறந்தநாளை கொண்டாடும் முன்பேஇறந்துள்ளனர்; 
3 லட்சத்து 63 ஆயிரத்து 424 பழங்குடி மக்களின் பட்டாகோரிக்கையை பாஜக அரசு நிராகரித்துள் ளது; 

மத்தியப்பிரதேசத்தில், 2018 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட பியூன் வேலைக்கு, எம்.பி.ஏ, எல்.எல்.பி. பி.எச்டி படித்த 2 லட்சத்து 81 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்த கொடுமை நடந்தது; 

நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மையால் அதிக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் முதன்மை மாநிலமாக மத்தியப்பிரதேசம் உள்ளது” என்று புள்ளி விவரங்களையும் அடுக்கியுள்ளார்.

==========================================================================================
தாத்தாவை மிஞ்சும் பெயரன்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிப்படைத் தன்மையாக இருப்பததாகக்  கூறி  ஆண்டுதோறும் தனது குடும்பத்தின் சொத்து மதிப்பை வெளியிட்டு வருகிறார். 
அந்த வகையில், இந்த ஆண்டு அவரது மகனும் ஆந்திர சட்டசபை அமைச்சருமான நாரா லோகேஷ் இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பை வெளியிட்டார். 

அதன்படி, சந்திரபாபு நாயுடுவின் குடும்பம் ரூ.81.83 கோடி சொத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.12.55 கோடி அதிகமாகும். சந்திரபாபு நாயுடுவின் பெயரில் ரூ. 8.30 கோடி சொத்து இருப்பதாகவும், ரூ.5.31 கோடி கடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 
இதனால் அவரின் சொத்து மதிப்பு 2.99 கோடி ரூபாய் என கணக்கிடப்படுகிறது. 

அதுவே அவரது 3 வயது பேரன் தேவன்ஷ், ரூ.18.71 கோடி சொத்து வைத்துள்ளார். 

இது சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பை விட 6 மடங்கு அதிகமாகும். 
3 வயதிலேயே சந்திரபாபுவின் மனைவிக்கு ரூ. 31.01 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=======================================================================================
ன்று,
நவம்பர்-23. 

 லைஃப்(life)  முதலாவது இதழ் வெளியிடப்பட்டது(1936)

கவிஞர் சுரதா பிறந்த தினம்(1921) 

அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது(2007) 


====================================================================================
 இந்திய தொலைக்காட்சிகளில் அதிகமாக விளம்பரம் செய்த 10 முன்னணி கம்பெனிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.அதில் பிறர் நெருங்க முடியா முதலிடத்தை பிடித்த கார்ப்பரேட் நிறுவனம் யார் தெரியுமா .நம்ம மோடியின் கார்ப்பரேட் நிறுவனமான பாஜகதான்.

 

 காஷ்மீரில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஜனநாயகம்

ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து மத்திய பாஜக அரசு மக்களின் விருப்பங்களுக்கு மாறாக நடந்து கொள்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. 
அம் மாநிலத்தில் பாஜக- மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி)க்கு இடையே பூசல் ஏற்பட்டவுடன் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த ஜூன்மாதம் 19ஆம் தேதி முதல் ஆளுநர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டு வந்தது. ஆளுநர் ஆட்சிஎன்று வெளியே சொன்னாலும் பாஜகவின்மறைமுக ஆட்சிதான் அங்கு நடந்தது. 

பாஜகவின் ஏவலுக்கு ஏற்றபடி நடந்துகொள்ளும் வகையில் சத்யபால் மாலிக் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இரண்டே எம்எல்ஏக்கள் கொண்ட சஜித்லோன், தமது மக்கள் மாநாட்டுக் கட்சி, பாஜகமற்றும் இதர எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சிஅமைக்க இருப்பதாக கூறி ஆளுநருக்கு வாட்ஸ் அப் மூலமாக செய்தி அனுப்பியிருந்தார். 

ஆனால், பாஜகவின் 25 எம்எல்ஏக்கள் தவிர,மீதமுள்ள 18 எம்எல்ஏக்கள் யார் என்ற விவரங்களை அதில் அவர் குறிப்பிடவில்லை.பாஜகவின் முயற்சியை முறியடிக்கும் வகையில் அம் மாநில அரசியலில் இதுவரை இரு துருவங்களாக இருந்த பருக் அப்துல்லா தமையிலான தேசிய மாநாட்டு கட்சியும் பிடிபி- யும்காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி அமைத்துஆட்சி அமைக்க மாநில ஆளுநரிடம் உரிமைகோரின. 

இவர்களுக்கு அறுதிப்பெரும்பான்மைக்கு மேல் ஆதரவு உள்ளது.

 எனவே இவர்கள் ஆட்சியமைத்து விட்டால் பாஜக கனவு தகர்ந்து விடும் என்று அஞ்சிய ஆளுநர் இரவோடு இரவாக புதனன்று மாநில பேரவையை கலைத்து உத்தரவிட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். 

சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க வாய்ப்பு அளித்திருக்க வேண்டும், அவர்கள் போதிய பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க தவறியிருந்தால் பேரவையை கலைக்க உத்தரவிட்டிருக்கலாம். 

ஆனால் அந்த வாய்ப்பை வழங்காமல் ஆளுநர் நடந்து கொண்டவிதம் கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும். ஆட்சியமைக்க உரிமைகோரி ஒரு மணிநேரம் கூட ஆக வில்லை. அதற்குள் அவசர அவசரமாக அவர் நடவடிக்கை எடுத்ததன் பின்னணியில் மத்திய அரசும் பாஜகவின் தலையீடும் உள்ளதை மறுக்கமுடியாது. 

இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமல்ல அரசியல் சாசனத்திற்கும் எதிரானது.எதிரான அரசியல் சிந்தனை உடையவர்கள் ஒன்று சேர்ந்து பொருத்தமான ஆட்சியமைக்க முடியாது என்று முடிவுக்கு வருவது ஆளுநரின் வேலையல்ல. 

 அப்படி என்றால் கடந்தசட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ஆட்சியமைத்த பிடிபி-யும் பாஜகவும் தேர்தலில் நேர்எதிராக போட்டியிட்ட கட்சிகள் தானே. 
அப்போதுஅளிக்கப்பட்ட வாய்ப்பு இப்போது எங்கே போனது?
 ஒன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி இருக்கவேண்டும், இல்லையென்றால் குறுக்கு வழியில் ஆளுநர் மூலமாக அம்மாநிலத்தை ஆளவேண்டும் என்று பாஜக விரும்புகிறது. 

சட்டப்பேரவை ஜனநாயகத்தை ஆளுநர் மூலமாக மத்திய அரசு கசாப்பு செய்திருப்பதன் மூலம் காஷ்மீர்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிட்டது.
 ===================================================, சீனாவுக்கும் டிஜிட்டல் காலனியாக ஆவதைத் தடுக்க பிரான்ஸ் கடுமையாக முயற்சி செய்து வருகிறது. 
பிரஞ்சு நாடாளுமன்றமும், பிரஞ்சு ராணுவ அமைச்சகமும் இனி கூகுளை தங்கள் வழக்கமான தேடு பொறியாகப் பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன.

கூகுளுக்கு மாற்றாக, பிரெஞ்சு-ஜெர்மானிய கூட்டு முயற்சியில் உருவான குவான்ட் (Quant) என்ற தேடல் பொறியை இனிமேல் பயன்படுத்தப் போகின்றன.

பிரெஞ்சு கம்பெனிகளை சைபர் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக, ஏப்ரல், 2018 லிருந்து இயங்கத் துவங்கியது குவான்ட்.

'நாங்கள்தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்' என்கிறார் பிரெஞ்சு நாடாளுமன்ற சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் இறையாண்மைக்குப் பொறுப்பாக உள்ள எம்.பியான புளோரியன் பேசெலியர்.


சீனாவிலோ   கூகுளுக்கு மாற்றாக சில தேடுபொறிகள் ஏற்கனவே உள்ளன.

ஏற்கனவே கூகுளை ஓரங்கட்டிவருகிறார்கள்.