கடுமையான கஜா,
தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும், வரும் 15-ம் தேதி கடலூர், புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கும் போது காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான்எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்று எழுதிவரும் பிரதீப் ஜான் முகநூல் பக்கத்தில் இருப்பதாவது:
தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும்.
மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா புயல் 13.5 வடக்கு அட்சரேகையில் இருக்கிறது. இது மேலும் மேற்கு வடமேற்காக நகர்ந்து வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் நாகை முதல் சென்னை வரை அல்லது புதுச்சேரி அல்லது கடலூர் பகுதிக்குத் தள்ளப்படும்.
ஆனால், எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று உறுதியாக இப்போது கூற முடியாது. மேற்கு, தென்மேற்காகப் புயல் நகரும்போது வேகமாக நகரும். ஆதலால், 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடக்கும்.
கஜா புயல் எவ்வளவு வலிமையானது?
கடந்த 40 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தமிழகக் கடற்கரையை கடந்த புயலின் அழுத்தம் குறித்த விவரங்கள் .
1. 1978-ம் ஆண்டு இலங்கை புயல் 953 எம்.பி.(பிரஷர்)
2. 2000-ம் ஆண்டு கடலூர் புயல் 959 எம்.பி.
3. 1996-ம் ஆண்டு சென்னை புயல் 967 எம்.பி.
4. 1993-ம் ஆண்டு காரைக்கால் புயல் 968 எம்.பி.
5. 2011-ம் ஆண்டு தானே புயல் 969 எம்.பி.
6. 2000-ம் ஆண்டு இலங்கை புயல் 970 எம்.பி.
7. 1984ம் ஆண்டு கடலூர் புயல் 973 எம்.பி.
8. 2016ம் ஆண்டு வர்தா புயல் 975 எம்.பி.
9. 1984-ம் ஆண்டு ஸ்ரீ ஹரிகோட்டா புயல் 975 எம்.பி.
எனவே, தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் ஆழ்ந்த புயலாக மட்டுமல்லாமல் கடும் புயலாகவும், கடல்பகுதியில் மிகக் கடும் புயலாகவும் இருக்கும்.
வடக்கு தமிழக கடற்பகுதியை நெருங்கும்போது காற்று தீவிரமாகும். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால், வரும் நாட்களில் அதன் தீவிரத்தன்மை தெரியவரும்.
சென்னை வானிலை மையம் அறிவிக்கும் ‘ரெட் அலர்ட்’ என்பது புயலோடு தொடர்புடையது. ஆதலால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
24 மணிநேரத்தில் 200மிமீ மழையைப் பெய்துவிட்டு செல்லும்.புதுச்சேரி அல்லது கடலூர் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதலால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.
அதன்பின், புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குள் செல்லும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கேட்டி, கொடநாடு, கோத்தகிரி பகுதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியவை.
கடலூரை நோக்கி கஜா புயல் சென்றுவிட்டால் சென்னைக்கு குறைந்த அளவே பாதிப்பு இருக்கும்.
கடந்த 25 ஆண்டுகளில் புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகையில் புயல்கள் கரையைக் கடக்கும்போது பெய்த மழை அளவு விபரங்கள் :
1. 2015-ம் ஆண்டு நவம்பரில் புதுச்சேரியில் புயல் கரைகடந்த போது சென்னையில் ஒரேநாளில் 200 மி.மீ. மழை பதிவானது.
2. 2013-ம் ஆண்டு வில்மா புயலால் சென்னையில் 2 நாட்களில் 110மி.மீ மழை பெய்தது.
3. 2012-ம் ஆண்டு நிலம் புயலால் சென்னைக்கு 2 நாட்களில் 120 மி.மீ மழை கிடைத்தது.
4. 2011-ம் ஆண்டு தானே புயலால் கடலூர், சென்னையில் ஒரே நாளில் 100 மி.மீ மழை பெய்தது.
5. 2008-ம் ஆண்டு நிஷா புயலால் காரைக்கால், சென்னையில் 4 நாட்களில் 400மி.மீ மழை பதிவானது.
இந்தப் புயல்கள் அனைத்தும் தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மேற்குவடமேற்காக நகர்ந்து தமிழகம் நோக்கி வந்தது. 1996-ம் ஆண்டு புயல் மட்டும் வடமேற்கு வங்கக்கடலில் இருந்து மேற்குதென்மேற்கு நோக்கி வந்தது.
இப்போதுவரை கணித்தபடி கடலூரில் புயல் கரையைக் கடக்கும்.சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை இருக்கும். 15-ம்தேதியில் இருந்து காற்றுவீசக்கூடும். ஆனால், பெரிய அளவுக்குப் பாதிப்பு இருக்காது.
தமிழக கடற்கரைப் பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும்.
வட மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும்.
கேரள மாநிலத்தில்கூட மழை பெய்ய வாய்ப்புண்டு.
ஆனால், கஜா புயலால் தென் மாவட்டங்களுக்குக் குறைவான மழையே கிடைக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதுவரை 23 சதவீதமும், சென்னையில் 52 சதவீதமும் மழை பற்றாக்குறையாக உள்ளது.
இந்த கஜா புயலால் நல்ல மழை கிடைக்கும்.
வேகமாகப் புயல் நகரும்போது, குறைந்தநேரத்தில் அதிகமான மழையைக் கொடுக்கும்.
=========================================================================================
மரபணு சோதனைக்கு
வந்த சோதனை.
மரபணுவின் வரலாற்றை தெரிந்து கொள்ள பலரும் தேர்ந்தெடுக்கும் வழி டி.என்.ஏ பரிசோதனை. பொதுவாக டி.என்.ஏ பரிசோதனை செய்ய ஒரு டியூப்பில் எச்சிலை சேகரித்து கட்டணத்துடன் சேர்த்து அனுப்பினால் மட்டுமே போதும் அனைத்து தகவலும் கைக்கு வந்துவிடும்.
நமது தலை முதல் கால் வரை அனைத்தும் அறியப்படும். நமக்கு பிடித்த உணவில் இருந்து பிடித்த நபர் வரை அனைத்தையும் அப்டேட் செய்துவிடும் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள். இதுவரை சோதனை செய்யப்பட்ட மரபணுக்களின் எண்ணிக்கை 25 லட்சத்திற்கும் குறைவு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அதன் மூலம் நமக்கு கிடைக்கும் தகவல் உண்மையா?
அதனை மக்கள் ஏற்றுகொள்ளலாமா?
இது போன்ற கேள்விகள் தற்போது எழுகின்றது.
ஆம், கடந்த 2003-ம் ஆண்டு மனித உயிரணுவில் 20 ஆயிரம் மரபணுக்கள் கொண்ட மரபணுக்கோப்பினை முழுவதுமாக ஆய்வு செய்து, அதிலுள்ள தகவல்களை சேகரித்து பதிவு செய்யும் "மரபணுக்கோப்பு திட்டம்" வெற்றியடைந்தது.
அத்திட்டம் வெற்றியடைந்ததால் மரபணு சோதனை செலவு குறைவோடு மிக வேகமாக ஆய்வு செய்ய முடிந்தது. சுலபமாக செய்ய முடிந்ததால் பலரும் இதனை வியாபாரமாக செய்ய ஆரம்பித்தனர்.
இதன் மூலம் கிடைக்க பெறும் மரபணு சோதனையின் தகவல் 40 சதவிகிதம் தவறாகவே உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது செய்து வரும் சோதனைகள் யாவும் முழுமையாக செய்யவில்லை.
குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே ஆய்வு செய்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இதனை எப்படி ஏற்று கொள்ள இயலும்?
நமது எச்சில் மூலமாக பிரபல நிறுவனங்கள் தரும் பரிசோதனை முடிவுகள் மிக மிக குறைவானவை மிகவும் சிக்கலானவையும் கூட.
அதனால் நன்கு தெரிந்து கொண்டு அதனுடன் தொடர்புடைய ஆய்வுகள் மூலமாக உண்மையை உறுதி செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
========================================================================================
இன்று,நவம்பர்-13.
- உலக கருணை தினம்
- கிரீஸ் நாட்டின் புதிய அரசியலமைப்பு பெறப்பட்டது(1864)
- கார்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது(1957)
- உலக வலைப் பின்னல்(WWW) ஆரம்பிக்கப்பட்டது(1990)
தேவை அமித் ஷா மீது நடவடிக்கை.
தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், குடியரசுத்தலைவர், பிரதமருக்குஓய்வுபெற்ற 30 ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
“நாட்டின் அரசமைப்புச்சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்தோ அல்லது மத்திய ஆட்சியைப் பயன்படுத்தி மோசமான அரசியல் நடவடிக்கை மூலமாகவோ சீர்குலைத்திட எந்தவொரு தனிநபருக்கும், குழுவிற்கும், அல்லது அரசியல் கட்சிக்கும் உரிமை கிடையாது,” என்றும், எனவே கேரள மாநிலம் கண்ணூரில் பாஜகவின் தலைவர் அமித்ஷா, சபரிமலை தொடர்பாக அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமாகப் பேசியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரி ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் 30 பேர் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளான எஸ்.பி.அம்புரோஸ், என். பாலபாஸ்கர், ஜி.பாலச்சந்திரன், வப்பாலா பாலச்சந்திரன், கோபாலன் பாலகோபால், சந்திரசேகர் பாலகிருஷ்ணன், மீரான் சி.பொர்வாங்கர், சுந்தர பர்ரா, ஆர்.சந்திர மோகன், சோம் சதுர்வேதி, கல்யாணி சௌத்ரி, அண்ணா டானி, சுர்ஜித் கே. தாஸ், விபாபூரி தாஸ், நிதின் தேசாய், எம்.ஜி. தேசசகாயம், சுசில் துபே, கே.பி. ஃபாபியான், ஆர். கோவிந்தராஜன், மீனாகுப்தா, வஜஹாத் ஹபிபுல்லா, சஜ்ஜத் ஹசன், ஜகதீஷ் ஜோஷி,வினோத் சி கன்னா, பிரிஜேஷ் கமார், பி.எம்.எஸ். மாலிக், ஹர்ஷ் மண்டர், அதிதி மேத்தா, சிவசங்கர் மேனன் மற்றும் சோபா நம்பீசன் ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
"நாங்கள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளாவோம். கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசிலும், மாநில அரசாங்கங்களிலும் பணியாற்றியிருக்கிறோம்.
நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல.
அதே சமயத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பாரபட்சமற்ற முறையில் நம்பிக்கை கொண்டவர்கள்.
நாங்கள் அதிகாரியாகப் பணியாற்றியபோது எந்த விதத்தில் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உறுதிஎடுத்துக்கொண்டோமோ அத்தகைய உறுதிமொழியை தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள்.
ரள மாநிலம், கண்ணூரில் 2018 அக்டோபர் 27 அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, நாட்டின் பிரதான ஆளும் கட்சியின் தலைவர், ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட இரண்டு விமர்சனங்களைக் கூறியுள்ளார்.
"உச்சநீதிமன்றம் அமல்படுத்தத் தக்க ஆணைகளை வெளியிட வேண்டும் என்பது ஒன்று. கேரளாவில் ஆட்சி புரியும் மாநில அரசு, சபரிமலை கோவிலுக்குள் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பான போராட்டத்தில் ஐயப்ப பக்தர்களைக் கைது செய்ததன் மூலமாகவும், நசுக்கியதன் மூலமாகவும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் மடத்தனமான துணிச்சலை மேற்கொண்டிருப்பதற்காகவும் எனவே அந்த அரசு பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று கூறியிருப்பது. மற்றொன்று.இவ்வாறு பேசியதன் மூலம், அவர் நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமான உச்சநீதி மன்றத்தையே கேள்விக்கு உட்படுத்தி, அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்.
மேலும், "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்து வதிலிருந்து கேரள மாநில அரசு தன்னைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் தங்கள் கட்சியினர் வீதியில் இறங்கி ரகளை செய்து ஆட்சியை அகற்று வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் "என்றும் மிரட்டியிருக்கிறார்.
மாநில அரசு, மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்படும் என்பதுபோன்ற அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி இருக்கிறார்.நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசமைப்புச்சட்டத்திற்கும், சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை உயர்த்திப்பிடித்திடவும் உண்மையான விசுவாசத்துடன் செயல்படுவோம் என்றும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உயர்த்திப்பிடித்திடுவோம் என்றும் உறுதிமொழியை அளித்திட வேண்டும்.
அவ்வாறு அரசமைப்புச்சட்டத்தின்கீழ் செயல்பட மறுக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடிய உரிமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
நாட்டின் ஆளும் கட்சித் தலைவரின் பொதுக்கூட்ட உரையானது, அரசமைப்புச் சட்டத்தை ஒட்டுமொத்தமாக மீறிய நடவடிக்கையாகும். இப்பேச்சானது நம் நாட்டின் அரசியலிலேயே மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திடக்கூடும்.
எனவே, தேர்தல் ஆணையம் மேற்படி பேச்சின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியிடமிருந்து விளக்கம் கோரி, அரசமைப்புச்சட்டத்தின் புனிதத்தைக் காப்பாற்றும் விதத்திலும், நாட்டின் சட்டங்களின் கீழும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அதேபோன்று நாட்டின் பிரதமரும் தமது கட்சித் தலைவரின் பேச்சுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடையாது என்று அறிவித்திட வேண்டும்.
உச்சநீதிமன்றம் இவருடைய பேச்சு குறித்து சுயமாகவே கணக்கில் எடுத்துக்கொண்டு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
குடியரசுத் தலைவரும் நாட்டின் அரசமைப்புச் சட்டகண்ணியத்தைக் காப்பாற்றிடவும் அமல்படுத்திடவும் தேவையான நடவடிக்கை கள் எடுத்திட வேண்டும்."
இவ்வாறு அவர்கள் தங்கள் கடிதத்தில்எழுதியுள்ளனர் .
"ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சர் ஆவார்; 234தொகுதியிலும் காவி கொடி பறக்கும்" - அர்ஜுன் சம்பத்
வந்தா டவுசர்தான் பறக்கும்!
வந்தா டவுசர்தான் பறக்கும்!