சோம்பேறித்தனமா? உற்சாகமா??
கையில் இருக்கும் ரிமோட்டில் ஒரு பட்டனை அழுத்தினால் டிவி முன் உள்ள திரை விலகுகிறது. இன்னொரு பட்டனை அழுத்தினால் உங்களுக்கு விருப்பமான அலைவரிசை கிடைக்கிறது.
திரையில் காட்சிகள் ஓடத் தொடங்குகின்றன.
அல்லது உங்கள் கையில் உள்ள அதிநவீன கைபேசியில் பட்டன்களை மாற்றி மாற்றி அழுத்தி நேரத்தைச் செலவிடலாம். பாப்கார்ன் பாக்கெட் கொண்டுவரச் சொல்லி ஒரு ரோபாட்டிற்கு நீங்கள் ஆணையிடலாம். படுக்கையில் படுத்தவாறே இருக்கும் உங்களுக்கு ரிமோட் எப்போதும் உடனிருக்கும் துணைவன் அல்லது துணைவி.
நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்துஉங்களுக்கு வேண்டிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உங்கள் முன்னாலே கொணர்ந்து சமர்ப்பிக்கும் நவீன கருவிகள் உங்கள் கைவசம் இருக்கும் அலாவுதீனின் அற்புத விளக்குகள்.
“உடற்பயிற்சியா.. அதற்கெல்லாம் ஏது நேரம்?”
என்றதொரு மனநிலை வளர்ந்துவிட்டதால் உலகெங்கும் கடந்த இருபது ஆண்டுகளில் உடற்பருமன் குறைபாடு வேகமாக வளர்ந்திருக்கிறது.
1980-லிருந்து 2015 வரை 195 நாடுகளில் ஆய்வு நடந்தபிறகு தி நியூஇங்கிலாந்து மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை உலகம் முழுவதிலும் குழந்தைகளும் பெரியவர்களுமாக 2.2 பில்லியன் ( 220 கோடி) மக்கள்உடற்பருமன் குறைபாடுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்கிறது.
உடற்பருமன் உள்ள60 கோடி மக்களில் 7.94 கோடி பேர் அமெரிக்காவிலும் அதற்கடுத்து 5.73 கோடி பேர் சீனாவிலும் உள்ளனராம்.
ஆனால் குழந்தைகளை எடுத்துக் கொண்டால், 1.53 கோடி உடற்பருமன் குழந்தைகளுடன் சீனா முதல் இடத்தைப் பிடிக்கிறது. 1.44 கோடி உடற்பருமன் குழந்தைகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிப்பது இந்தியாதான்.
உடல் நலனுக்கு உதவாத துரித உணவும் தேவைக்கதிகமாக உட்கொள்ளும் உணவும் உடற்பருமன் அதிகரிப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன.
மரபணுஅம்சங்களும் கூட சிலரது உடற்பருமனுக்குக் காரணமாக இருக்கின்றன.
வரவர அதிகரித்துக் கொண்டேஇருக்கும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையும் கூட உடற்பருமன் கூடுவதற்குக் காரணமாக அமைகிறது.
உடற்பயிற்சியினால் விளையும் நன்மைகள்பற்றி ஆய்வுகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.
ஆனால் நமதுஆழ்மனது சோம்பேறித்தனத்தின் மீது ஈர்க்கப்பட்டிருக்கிறதோ?
ஆம் என்கிறது அண்மையில் நடத்தப்பட்டதோர் ஆராய்ச்சி.
எழுந்திருப்பதா அல்லது படுத்திருப்பதா என்ற கேள்வி வரும்போது பிந்தையதே பெரும்பாலும் வெற்றி பெறுகிறது என்கிறது பிரிட்டிஷ்கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாத்யூபோய்ஸ்காண்டியர் நடத்திய ஆய்வு.
சோம்பேறித் தனத்தைத் தவிர்ப்பதற்கு நமது மூளையை கடுமையான முறையில் மறுகட்டமைப்பு செய்தாலே இயலும்என மாத்யூவும் அவரது குழுவினரும் பரிசோதனைகள் மூலம் நிரூபித்துள்ளனர்.
வேகமாகச் செய்யப்படும் உடற்பயிற்சிக் காட்சிகளையும் சோம்பேறித்தனமாக மனிதர்கள் இருக்கும் காட்சிகளையும் அசைவூட்டப்படங்களாகக் காண்பித்து பரிசோதனையில் பங்கேற்பவர்கள் அவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என ஆய்வு செய்யப்பட்டது.
செயலூக்கமுள்ள காட்சிகளின் பக்கம் அவர்கள் வேகமாகஈர்க்கப்பட்டார்கள்.
ஆனால் அதற்கு மூளை கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அதாவது, சுறுசுறுப்பான வாழ்வியல் முறைக்கு நாம் மாற வேண்டுமானால் நமது மூளையின் வளங்களை மேலும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது.
இயல்பாகவே சோம்பேறித்தனமான நடைமுறைகளுக்கு மூளை ஈர்க்கப்பட்டுள்ளதால் அவற்றை மாற்றியமைக்க நாம்கடுமையானதொரு மனப்போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.
“வேற வேலைவெட்டியில்லாம இதுக்குப் போய் ஆய்வு செஞ்சாக்களாக்கும்? அதான் நமக்குத் தெரியுமே?” என்கிறீர்களா..
சுறுசுறுப்பாக கொஞ்ச நேரம் இருந்துதான் பாருங்களேன்.
உங்கள் உடல் மட்டுமல்ல,மனதும் எவ்வளவு உறசாகமாக உணர்கிறது என்பதை அனுபவித்துப்பார்க்கலாம்.
பின் அதுவே உங்கள் பொழுது போக்காக மாறிவிடும்.
சோம்பேறித்தனமாக படுத்திருந்து பருக்கப் போகிறோமா?
உற்சாகமாக இளமை தோற்றத்தில் இருக்கப் போகிறோமா??
நீங்கள் என்ன செய்யப் போகிறோம் என முடிவெடுப்பதுதான் முக்கியமானது.
சோபாவிலோ படுக்கையிலோ படுத்து சோம்பல் வாழ்க்கையே போதும் என இருக்கப் போகிறோமா?
அல்லது மூளை தரும் உள்ளுணர்வை வென்றுசுறுசுறுப்பான வாழ்வை நோக்கிப் புறப்படப் போகிறோமா?
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சுனாமியை விட அதிக சேதம் தந்த கஜா.
வீடுகள், சேமிப்பில் இருந்த பணங்கள் ,ஆவணங்கள்,வயல்கள்,பண்ணை மரங்கள்,ஆடுகள், மாடுகள், கோழிகள் என விவசாயத்திற்கு அடுத்தபடியாக அம்மக்களின் ஆதாரமாக இருந்தவை ஆயிரக்கணக்கில் மாண்டுவிட்டன. அ
இந்தக் குடும்பங்கள் இந்த இழப்பிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமல்ல. சராசரி வாழ்விற்கே 10 முதல் 20 ஆண்டுகளாகும்.
========================================================================================
இன்று,
நவம்பர்-21.
- உலக மீனவர்கள் தினம்
- உலக தொலைக்காட்சி தினம்
- உலக ஹலோ தினம்
- வங்கதேச ராணுவத்தினர் தினம்
- இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் இறந்த தினம்(1970)
சந்திரசேகர வேங்கட ராமன்,
தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.
சந்திரசேகர வேங்கட ராமன் அவர்களின் தந்தை கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு பேராசிரியராக இருந்தால், அவர் வீட்டில் ஒரு கல்வி சூழலைக் கொண்டிருந்தார். அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார்.
இந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.
1917 ல், கல்கத்தா பல்கலைக்கழகம் சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சார் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார்.
அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.
1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி. வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார்.
சி.வி.ராமன்1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.
========================================================================================
மிலாடி நபி கொண்டாட்டம் .
ஆப்கனில் 60 வெடிகுண்டு தாக்குதலில் பலி .
இன்று (21-11-18)முகம்மது நபியின் பிறந்த நாளை ஒட்டி இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மதத் தலைவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 60 பேர் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 83 பேர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
சமீப காலத்தில் காபூலில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று இது.
இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சமீப காலங்களில் நடந்த தாக்குதல்களை ஐ.எஸ். அமைப்புதான் செய்துள்ளது.அதுதான் பகிரங்கமாகப் பொறுப்பேற்றுள்ளது.
தாலிபன்கள் நடத்தும் தொடர் தாக்குதல்களும் பாதுகாப்பு படைக்கு தொடர் அழுத்தத்தை தந்துவருகின்றன.
முகம்மது நபியின் பிறந்த நாளை ஒட்டி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதனால் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்களும், அவர்களைப் பின்பற்றுவோரும் மிலாது நபி பண்டிகையை ஒட்டி ஒரு அரங்கத்தில் கூடி இஸ்லாமிய புனித நூலான குரானில் இருந்து சில பகுதிகளை ஓதிக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அந்தக் கூட்டத்தின் மத்தியில் இருந்து மனித வெடிகுண்டு தம்மை வெடிக்க வைத்துக்கொண்டதாக தருகிறது.
தற்போது காயமடைந்தவர்களில் 24 பேர் மிக மோசமான நிலையில் இருப்பதாக ஆப்கன் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.