அவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு மோடிஅரசு எந்த நன்மையும் செய்யவில்லை. 
மாறாகஇழைத்த கொடுமைகள், அநீதிகள் ஏராளம். 

கடந்த தேர்தலில் புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள் இந்த முறைஅந்த உத்தி பலிக்காது என்பதால் தங்களது வழக்கமான- மதவெறியைத் தூண்டும் அணுகுமுறையை ஆரம்பித்துவிட்டனர்.சபரிமலை கோவிலுக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைநடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்குமட்டுமல்ல, மத்திய அரசுக்கும் உண்டு. 

ஆனால் மத்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக, உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தி, கலவர விதைகளைத் தூவுகிறது. 

இதற்காக அநாகரிகமான வழிமுறைகளை பின்பற்றவும் ஆர்எஸ்எஸ், பாஜக தயங்கவில்லை. மறுபுறத்தில் தங்களது நிரந்தர நிகழ்ச்சிநிரலான ராமர் கோவில் பிரச்சனையையும் மீண்டும் விசிறி விட துவங்கியுள்ளனர். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட சாமியார்கள் புதுதில்லியில் ஒன்று கூடி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தலையிடக்கூடாது என்று வெறிக்கூச்சல்போடுகின்றனர். 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் குறித்தும், அந்த மசூதி இடிக்கப்பட்டது குறித்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. 

ஆனால்இதுதான் ராமர் பிறந்த இடம் என்று இவர்களாகவே தீர்ப்பு வழங்கி, கோயில் கட்டியே தீருவோம்;உச்சநீதிமன்றம் ஒதுங்கி நிற்கட்டும் என்று உத்தரவு போடுகிறார்கள் சாமியார்கள். ’வாழும் கலை‘ ரவிசங்கர் கோவில் கட்டுவதில் தலையிட்டால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று கலவரம் நடத்தி ‘சாகும் கலையை’ கற்றுத்தர முயல்கிறார்.

மத்திய அமைச்சர் உமாபாரதியோ, இந்துக்கள்மட்டும் தான் சகிப்புத்தன்மை கொண்டவர்கள்; ஆனால், அயோத்தியில் மசூதி கட்டுவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று மிரட்டுகிறார். அயோத்தி மற்றும் சபரிமலை கோவில்பிரச்சனைகளை திசை திருப்பி, மக்களைத்துண்டாடி அதன்மூலம் தேர்தல் அறுவடைநடத்த ஆர்எஸ்எஸ் - பாஜக துணிந்துவிட்டது. 


ஆனால் எதிர்க்கட்சிகள் கடந்த நான்கரைஆண்டுகளில் மக்கள் சந்தித்த பிரச்சனைகளைவிரிவாக எடுத்துச் செல்ல வேண்டும். 

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி, பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்பட்டது; பாஜகவின் கூட்டாளிகள் இந்திய வங்கிகளை சூறையாடிவிட்டு தப்பி ஓடிக்கொண்டேயிருப்பது; வறுமை, வேலையின்மை, சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான கொடூரத்தாக்குதல்கள் போன்றபிரச்சனைகளை தேர்தலில் முக்கிய விவாதப்பொருளாக மாற்ற முனைய வேண்டும்.

பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டம் கையில் எடுக்கும் துருப் பிடித்த ஆயுதங்களை மக்கள் கவனத்துடன் எதிர் கொள்ள வேண்டும்.
காரணம் இன்றைய ஆட்சியிலேயே உலக அளவில் கீழாகவும்,இந்திய அளவில் காவியாகவும் மாறி வருகிற இந்தியா அடுத்தும் ஆட்சி கையில் கிடைத்தால் என்ன நிலைக்கு ஆளாகும் அன்று மக்கள் யோசித்து செயல்படவேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வெப்பநிலை அபாயம்.
பருவநிலை மாற்றம் பற்றிய உலக நாடுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) உலக சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 1.5 டிகிரி சென்டிகிரேட் கூடுதலாக ஆனால் ஏற்படும் விளைவுகள் குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றினை அண்மையில் வெளி யிட்டிருக்கிறது. 

பூமியின் சூழலைக் கணக்கில்கொண்டு அதிவிரைவாகத் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை பருவநிலை மாற்றம் பற்றி உலக அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசுகிறது. நாடுகளின் நீடித்த வளர்ச்சி அல்லது ஏழ்மையை ஒழிப்பது பற்றிய நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட வேண்டுமென்று அது உபதேசிக்கவில்லை. 

மாறாக, அந்த சட்டகத்திற்குள் உலகம் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் மையப்புள்ளி ஆக வேண்டும் என்ற தன் கவலையை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.2015-ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற பருவ நிலை மாற்றம் குறித்த உலக நாடுகளின் மாநாடு 1.5 டிகிரி உயர்வுக்குள் உலக சராசரி வெப்ப நிலையை நிறுத்த வேண்டுமென்ற தீர்மா னத்தை நிறைவேற்றியது. 

அதற்கு முன்னதாக அந்த வரையறை 2 டிகிரி சென்டிகிரேடாக வைக்கப்பட்டிருந்தது. 
பேரிடர் நிகழ்வுகள் அதிகரித்தது, சிறிய தீவுகளின் இருப்பே கேள்விக்குறியானது ஆகிய உடனடி ஆபத்துகளைக் கணக்கில் கொண்டே அந்த வரையறை மாற்றியமைக்கப்பட்டது.

பல நாடுகள் அந்த முடிவை உற்சாகத்துடன் வரவேற்றன.தினசரி வெப்பநிலைகள் மிக மிக அதிகமாக மாறிக்கொண்டிருப்பதைப் பார்த்து வருபவர்களுக்கு 1.5 டிகிரிக்கும் 2 டிகிரிக்கும் இடையே உள்ள வித்தியாசம் அற்பமாகத் தோன்றலாம்.
 இந்தக் கடுகளவு வித்தியாசம் குறித்து இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டுமா என்றுகூடத் தோன்றலாம். ஆனால், உலகின் சராசரி வெப்பநிலை குறித்துப் பேசுகிறோம் என்பதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.


 பூமியின் பல்வேறு பிரதேசங்கள் பல்வேறு விகிதங்களில் கூடுதல் வெப்பநிலையைச் சந்தித்து வருகின்றன. உதாரணமாக, உலக சராசரியை விடப் பன்மடங்கு கூடுதலான வெப்பநிலையை ஆர்க்டிக் பிரதேசம் ஏற்கனவே சந்தித்து வருகிறது.

உலக சராசரி வெப்பநிலை ஏற்கனவே 1 டிகிரி வெப்பநிலையைத் தாண்டிவிட்டது. 

பருவநிலை மாற்றத்திற்கெதிரான உறுதியான, தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்காவிடின் 2040-க்குள் 1.5 டிகிரி இலக்கைக் கடந்துவிடும் ஆபத்து நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 
நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

வெப்பநிலையில் 0.5 டிகிரி கூடுதல் என்பது ஏற்கனவே அழிந்துகொண்டிருக்கும் பல உயிரினங்களுக்கு வாழ்வா, சாவா என்ற பிரச்சனை. கூடுதல் வெப்பநிலையில் அவை சந்திக்க வேண்டியிருப்பது அழிவைத் தவிர வேறில்லை. 
2 டிகிரி கூடுதல் வெப்பநிலையோடு ஒப்பிடும்போது 1.5 டிகிரி வெப்ப நிலையின் கீழ் கடல்நீர் அமிலமாதல் குறையும். 
கடல் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் கடல்வாழ் இனங்கள்உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். புயல்களின் வீரியம் குறையும்.. 

அவை தோன்றும் இடைவெளிகள் குறையும்... வறட்சிகளின் தீவிரத்தன்மை மட்டுப்படும்.. வெப்பஅலைகள் பயிர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் கோடை காலங்களில் ஐஸ் இல்லாத ஆர்க்டிக் உருவாவதற்கானவாய்ப்பும் குறையும். 

0.5 டிகிரி வித்தியாசத்திற்கு இவ்வளவு மவுசா என நம்மை மலைக்க வைக்கும். 2 டிகிரி வெப்பநிலை கூடுதலான உலகில் 2100-க்குள் கடல் மட்டங்கள் சுமார் 50 செமீ. வரை உயரும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இது 1.5 டிகிரி வெப்பநிலை கூடுதலான உலகைவிட 10 செ.மீ. அதிகம். 2100-க்குப் பிறகு 2 டிகிரி வெப்பநிலை உலகில் கடல் மட்டம் உயர்வது மிகமிக அதிகமாக இருக்கும். உணவுப்பாதுகாப்பு, உடல்நலன், சுத்தமான நீர், மனிதர் களுக்குப் பாதுகாப்பு, வாழ்நிலைகள், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் 2 டிகிரி உலகில் மேலும் மோசமாக இருக்கும். 

பூமி சூடேறுவதால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள ஏழை எளிய மக்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களாக இருப்பார்கள். 
கிரீன்லாந்து ஐஸ் உருகிவிடும்.. அன்டார்டிக் பனிமலைகள் உருகி காணாமல் போய்விடும்.. 
இதன் காரணமாக கடல் மட்ட அளவு பல மீட்டர் உயரும்.. 
அமேசான் காடுகள் அழிந்துவிடும். 
நிரந்தரப் பனிக்கட்டிகள் என வரை யறுத்து வைத்திருக்கும் பனிக்கட்டிகள் தங்களது நிரந்தரத் தன்மையை இழந்துவிடும்.இதனால்தான் ஐபிசிசி அறிக்கை உலக சராசரி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்துகிறது. 
வெப்பநிலை குறித்த உலக நாடுகளின் அடுத்த மாநாடு போலந்தில் நடைபெற உள்ளது. 
உலக நாடுகள் ஒவ்வொன்றும் தன்னுடைய நலனை மட்டுமே குறுகிய நோக்கில் பார்த்து அரசியல் செய்யப் போகின்றனவா அல்லது உலகின் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பூமியையும் அழிவிலிருந்து பாதுகாக்க கரம் கோர்க்கப் போகின்றனவா என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.
உதவி சுஜாதா பைரவன் 
=======================================================================================
ன்று,
நவம்பர்-06.


  • டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது(1844)
  • போலந்தில் 2வது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது(1918)
  • எட்வின் ஆம்ஸ்ட்ராங், எஃப்.எம்., ஒளிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்(1935)
  • புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1944)
  • தஜிகிஸ்தான் அரசியலமைப்பு தினம்(1994)
========================================================================================


அரைகுறை ராஜா.
டெல்லியில் அனுமதிகப்பட்ட நேரத்துக்கு மாறாக சிறுவன் ஒருவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தை மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இச்செய்தியை குறிப்பிட்டு ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “பிராமி விஜயன் பாதையில் கெஜ்ரிவால்” என்று பதிவிட்டார்.
இந்த ட்வீட்டிற்கு முதலில் 
கேரள முதல்வரின் பெயர் ‘பினராயி விஜயன்’ என்று நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கினர். மேலும், டெல்லி தலைநகராக இருந்தாலும் யூனியன் பிரதேசம் என்பதால் அதன் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. 
டெல்லி காவல்துறையை ராஜா குறை கூறியிருப்பது மத்திய அரசை விமர்சிப்பதற்குச் சமம் என்றும், ‘இது கூட தெரியாமல் தான் நீர் பாஜக தேசிய செயலாளரா உள்ளீர்களா?’ 

என்ற ரீதியில் கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அந்த ட்வீட்டை ஹெச்.ராஜா நீக்கினார். ஆனால், அப்போதும் நெட்டிசன்கள் அவரை விடவில்லை, ‘அட்மினுக்கு சிக்கல் வருமோ என ட்வீட்டை நீக்கிவிட்டீர்களா?’ என்று கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டனர்.
முன்பாக, பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். பெரும் எதிர்ப்பு கிளம்பவே, அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு ‘நான் பதிவு செய்யவில்லை. என் அட்மின் செய்துவிட்டார்’ என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த விஷயத்தில் இதுவரை ஹெச்.ராஜா வாய்த் திறக்கவேயில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?