ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஏ.கே47 வேகத்தில் பொய்யுரைப்பவர்கள்

   
"ஏ.கே47 வேகத்தில் பொய்யுரைப்பவர்கள் அரசியல்வாதிகள்"                                                                                                 -பிரதமர் மோடி.

"அதைவிட ரபெல் விமான வேகத்தில் என்றால் சரியாக இருக்கும்ஜி."
==============================================================================================                                                                                                                                           
 பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ்அப். இதற்கு மாற்றாக வேறு செயலியே கிடையாதா என்று பலரும் நினைக்கக்கூடும். 

பல செயலிகள் இருக்கின்றன. வாட்ஸ்அப் செயலியை விட கூடுதலான வசதிகளும் அவற்றில் இருக்கின்றன. 
இருந்தாலும் வாட்ஸ்அப் போல அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. 

காரணம் வணிக யுக்திகள்தான்.ஒருவேளை செய்திகளை அனுப்பும்போது மின்னஞ்சல் போல ஜிமெயிலில் இருந்து ஹாட்மெயிலுக்கோ, யாகூவுக்கு அனுப்புவது போல வாட்ஸ்அப் செயலியிலிருந்து டெலிகிராம், வைபர் போன்ற பிற செயலிகளுக்கு தகவல் அனுப்பும் வசதியிருந்திருந்தால் மற்ற செயலிகளும் அதிக அளவு பயன்பாட்டிற்கு வந்திருக்கக் கூடும்.
எப்போதும் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தே இருப்பது எதேச்சதிகாரத்திற்கே வழிவகுக்கும். 
அதிக பயனரைக் கொண்ட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பலவும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. 
அதன் மூலமாகத்தான் வருமானத்தையும் ஈட்டுகின்றன. 

வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக உள்ள செயலிகளைப் பற்றி .
வைபர் (Viber)
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இருக்கும் செயலிகளில் முக்கியமான செயலி இது. மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் மற்றவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. 


வாட்ஸ்அப் தற்போது கொண்டு வந்துள்ள சேவையான அனுப்பிய தகவல்களை அழிக்கும் வசதியை இரண்டு வருடங்களுக்கு முன்பே இச்செயலி அறிமுகப்படுத்திவிட்டது.மெஸேஜிங், காலிங், படங்கள், வீடியோ ஆகியவற்றுடன் ஆவணங்கள், ஜிப் செய்யப்பட்ட கோப்புக்கள் என எந்த ஒரு கோப்பையும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. 

வாட்ஸ்அப் செயலியை விட பேட்டரியை மின்சாரத்தை குறைந்த அளவே இச்செயலி பயன்படுத்துகிறது.
லைன் (Line)
இதுவும் வாட்ஸ்அப்பிற்கு நல்ல மாற்றுதான். வாட்ஸ்அப் தரும் எண்ணற்ற வசதிகள் இதிலும் உண்டு. குறிப்பாக தரமான இலவச வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதியைக் குறிப்பிடலாம். 


ஜப்பானின் ஃபேஸ்புக் என்று கூறப்படும் இச்செயலி உலக அளவில் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். 

இச்செயலியில் 1 GB அளவு வரையிலான கோப்புகளைக்கூடப் பகிர்ந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்ட், ஆப்பிள், விண்டோஸ் என அனைத்து இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம்.

ஹைக் (Hike)
இந்தியத் தயாரிப்பு என்ற பெருமையுடன் வலம் வரும் இச்செயலி, இந்திய இளைஞர்களிடையே புகழ்பெற்றது. கூகுள் பிளேஸ்டாரில் 29 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனரைக் கொண்டிருக்கிறது. 


இதில் ஸ்டிக்கர் எனப்படும் கருத்துப் படங்கள் இந்திய மொழிகளில் வலம் வருவது கூடுதல் பலம். ஃபேஸ்புக் போன்ற டைம்லைன் வசதி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள், குரூப் அரட்டை, முழு மறையாக்கம் என முன்னணி செயலிகள் தரும் பல வசதிகள் இதிலும் உண்டு.
டெலிகிராம் (Telegram)
வாட்சப்பில் இல்லாத பல அம்சங்கள் இதில் உள்ளன. டெலிகிராமில் அனுப்பப்படும் குறுந்தகவல், சில விநாடிகளுக்குப் பிறகு தன்னைத் தானே அழித்துக்கொள்ளும்படி நீங்கள் அமைத்துக்கொள்ள முடியும். டெலிகிராமில் 1.5 GB வரையிலான கோப்புகளைப் பகிர முடியும்.
சிக்னல் (Signal)
இந்த செயலி டெலிகிராம் செயலியைப் போன்றே ஓப்பன்சோர்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் மட்டுமல்லாமல் விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினி இயங்குதளங்களிலும் பயன்படுத்தக் கூடியது. 

தகவல்களை முழு மறையாக்கம் செய்து பாதுகாக்கும் வசதிகள் உள்ளடங்கியுள்ளது.
கூகுள் அல்லோ (Google Allo)
வாட்சப்பிற்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் அல்லோவைத் தயாரித்துள்ளது. 
கூகுள் அஸிஸ்டெண்ட் வசதியைக் கொண்டு குரல் வழி செய்திகளை டெக்ஸ்ட்டாக மாற்றிப் பகிரலாம். நம்முடைய மனநிலையை வெளிப்படுத்தும் தனித்துவம் மிக்க ஸ்டிக்கர்களை பகிரும் வசதி உள்ளது. அரட்டையின்போது தேவைக்கேற்ப எழுத்துக்களை பெரிதாக்கவும் சிறிதாக்கியும் பகிரும் வசதி எனப் பல வசதிகளைக் கொண்டுள்ளது.
மேற்கண்ட செயலிகள் மட்டுமல்லாமல் 
வீசேட் (Wechat), 
ஸ்கைப் (Skype), 
ஹேங்அவுட் (Hangout),
ஃபேஸ்புக் மெஸென்ஜர் (Facebook Messenger). 
சேட்ஆன் (ChatON), 
டேங்கோ (Tango), 
பிபிஎம் (BBM) 
எனப் பல செயலிகளும் வாட்ஸ்அப் தரும் வசதிகளையும் பிற செயலிகள் தரும் வசதிகளையும் ஒன்றிரண்டை சேர்த்தோ மாற்றியமைத்தோ தருகின்றன. 

டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகள் அனைத்து செயலிகளிலும் பொதுவாகக் கிடைக்கின்றன.
========================================================================================
ன்று,
நவம்பர்-04.
  • பனாமா கொடி நாள்
  • இத்தாலி ராணுவ படை தினம்
  • வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1861)
  • அறிவியல் இதழான நேச்சர் முதல் இதழ் வெளியானது.(1869)
  • ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)
========================================================================================
அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியாவிலும் மின்னணு வர்த்தகத் தொழிலை நடத்தி வருகிறது. 
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் அமேசான் நிறுவனம் ரூ.6,290 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. 
இதன் அமெரிக்க டாலர் மதிப்பு சுமார் 100 கோடி டாலராகும். முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 2018ஆம் நிதியாண்டில் அமேசானின் இழப்புகள் 30 விழுக்காடு உயர்ந்துள்ளது. 
இதனால் கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மூன்று முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.11,300 கோடியாக உயர்ந்துள்ளது.

முன்னணி நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் பேடிஎம் மால் ஆகியவை கடந்த நிதியாண்டில் ரூ.5,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன. 
இந்நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி கடுமையாக அதிகரித்துள்ளதால் இழப்புகளும் கணிசமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. 
2016-17ஆம் நிதியாண்டில் அமேசான் நிறுவனம் ரூ.4,830 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் பரிவர்த்தனைத் தொழில் 2017ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.1,150 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. 
அமேசான் நிறுவனத்தின் வருவாயும், விற்பனையும் அதிகரித்து வந்தாலும், இழப்புகளைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில் அந்நிறுவனம் உள்ளது.
=============================================================================================
  தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை மனம்போன போக்கில் உயர்த்தியுள்ளதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இதையடுத்து, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது புகாரை தெரிவிக்கலாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

@செய்வதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ.
அதற்கேற்றார்ப்போல் கமிசனை வாங்க அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும்.@


==============================================================================================